காலுக்கு அடியில இருக்குனு பிரேக் பெடல போட்டு அழுத்து அழுத்துனு அழுத்தாதீங்க.. ரொம்ப பெரிய சிக்கல் ஏற்படும்!
டயருல அடிச்ச காற்று வெளியேறுகின்ற கால இடைவெளியில் பிரேக் பேடுகள் தேய்ந்துவிடுகின்றன. அதிகளவிலான பிரேக் பயன்பாடே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. தேவைக்காக பிரேக் பிடிப்பதை பற்றி நாங்கள் இங்கு கூறவில்லை. பிரேக்கே பிடிக்காமல் சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தேவைக்காக பிரேக்கை பிடிக்கும்போதும்கூட சில யுக்தியை கையாள வேண்டி இருக்கின்றது. ஆனால், அதை யாரும் தெரிந்துக் கொள்வது இல்லை, அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதும் இல்லை. இதன் விளைவாக சீக்கிரமே பிரேக் பேட்கள் தேய்ந்துபோன எலும்புபோல் மாறிவிடுகின்றன. இதைத் தவிர்க்கும் சில வழிமுறைகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதாவது, பிரேக் பேட்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்ய என்ன எல்லாம் வழிகள் உள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். நம் நாட்டில் சரக்கு வரி, பசுமை வரி மற்றும் சாலை வரி என பலவழிகளில் டேக்ஸ்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், இதற்கான பலன்களை நாம் அடைகின்றோமா என கேட்டால், இதற்கான பதில் சந்தேகமே. உதாரணமாக சாலைக்காக பெரும் வரியை வாகனத்தை வாங்கும்போது நாம் செலுத்துகின்றோம்.
ஆனால், நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை பல பகுதிகளில் நல்ல நிலையில் சாலைகளைப் பார்ப்பதே அரிதானதாகக் காட்சியளிக்கின்றது. ஏன், கட்டணம் செலுத்தி பயணிக்கக் கூடிய சில சுங்கச் சாலைகள்கூட ஆங்காங்கே பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்ததாகக் காட்சியளிக்கின்றன. இதன் விளைவாக அதிகளவில் பிரேக்கைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த செயல் ரப்பரால் ஆன பிரேக் பேடை அதிக சூடாக்கி விரைவில் தேய செய்துவிடுகின்றது.

இந்த நிலை சில நேரங்களில் பிரேக் ஃபெயிலியரை ஏற்படுத்தலாம். எனவே அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய விஷயமாக இது இருக்கின்றது. எனவேதான் இந்த பதிவில் ஐந்து வகையான பிரேக் பேடை பாதுகாக்கும் வழிமுறைகளைப் பற்றி தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்துவதனால் பிரேக் பேடுகளின் ஆயுட்காலத்தைக் கட்டாயம் நீட்டிக்க முடியும். இதோ அதற்கான டிப்ஸ்க்ள்,
சட்டென பிரேக்கை போடாதீங்க
வாகனத்தை நிறுத்தும் இடம் வருவதற்கு முன்னரே வேகத்தை குறைத்து விடவது நல்லது. மேலும், குறைவான அழுத்தத்தில் பிரேக்கையும் பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஸ்மூத்தான பிரேக்கிங் அனுபவத்தை பெற முடியும். கடைசி நேரத்தில், உடனே காரை நிறுத்த வேண்டும் என்பதற்காக விடாப்பிடியாக பிரேக்கை பெடலை அழுத்தினால் பிரேக் பேட் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

மேலும், அதிக அழுத்தம் காரணமாக பேடின் கிரிப் தன்மை குறைய நேரிடும். ஆகையால், பிரேக் பேட்கள் விரைந்து தேய்வது மற்றும் கிரிப் தன்மைக் குறைவது உள்ளிட்ட சிக்கல்களைச் சந்திக்கும். இத்துடன் பிரேக்கிங் திறனிலும் குறை ஏற்படும். இவ்வாறு பல்வேறு சிக்கல்கள் இந்த விஷயத்தால் ஏற்படும். எனவே, தேவைப்படும்போது மட்டும் சட்டென் பிரேக்கை பிடித்து, மற்ற நேரங்களில் அதை தவிர்ப்பது நல்லது.
வேகமாக போகாதீங்க
பிரேக் பேட் விரைவில் தேய்வடைவதற்கு மிக முக்கியமான காரணமே அதி-வேகம்தான். அதிக வேகம் அனைத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். வாகனத்திற்கு மட்டுமல்ல இது உயிரையும் கொல்லும். நொடிப் பொழுதில் அதிக எண்ணிக்கையில் உயிர்களைக் குடிக்க கூடிய திறன் அதி-வேகத்திற்கு உண்டு. ஆகையால் பெரும்பாலும் அதிக வேகத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது. இதேபோல், பிரேக் பேட் போன்ற முக்கிய பாகங்களின் ஆயுட்காலத்தையும் குறைக்கக் கூடிய அதிக வேகம் இருக்கின்றது.
எனவே எந்த வழியிலும் அதிக வேகத்தால் லாபம் கிடைக்காது. மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும்போது கூடுதலாக 33 சதவீதம் எனர்ஜி வாகனத்தை நிறுத்தத் தேவைப்படும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, மிக மிக அதிகளவில் பிரேக் பேட்கள் செயல்பட வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும். இதுமட்டுமில்லைங்க, அதிக வேகத்தின்போது எரிபொருளும் அதிக அளவில் செலவாகும். மைலேஜ் என்பது சுத்தமாக கிடைக்காது. ஆகையால், அதிக வேகத்தைத் தவிர்ப்பதே மிக மிக நல்லது.
பிரேக் பிடிக்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
பலரிடம் இருக்கும் கெட்ட பழக்கம் இது. சிக்னலில் நிற்கும் பிரேக்கை பிடித்துக் கொண்டே ஆக்சலரேஷனைக் கொடுப்பது, வண்டியை பிரேக் பிடித்தவாறே ஓட்டுவது என குழைந்தைத் தனமான செயல்களை செய்வதை நாம் பார்த்திருப்போம். இதனால் எரிபொருள் விரையமாவதுடன், பிரேக் பேட் போன்ற முக்கிய கூறுகளின் ஆயுட்காலம் விரைந்து குறையத் தொடங்கும்.
குறிப்பாக, வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கையில் பிரேக்கைப் பிடித்துக் கொண்டே, ஆக்சலரேஷனை வழங்குவதால் வீல் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும். அதேவேளையில், பிரேக்கும் வீலை கட்டுப்படுத்த அயராது உழைத்துக் கொண்டே இருக்கும். இதன் விளைவாக பிரேக் கட்டை விரைவில் சூடாகி தேய்ந்து விடும். நாளடைவில் பிரேக்கே பிடிக்காத நிலை ஏற்பட்டு விடும். கடைசியில் பிரேக் பேடை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
எஞ்ஜின் பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம்
பம்பர்-டூ-பம்பர் நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த பிரேக்கிங் முறையை பயன்படுத்தலாம். கிளட்ச் மற்றும் ஆக்சலரேசனை விடுவிப்பதே எஞ்ஜின் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். இவ்வாறு செய்வதனால் எஞ்ஜினின் வேகம் கணிசமாக குறையும். அதேவேளையில், கியர் லெவல் குறைவானதாக இருத்தல் வேண்டும். அப்போது, வேகம் பலமடங்கு குறையும். இல்லை எனில் படிபடியாக கியரின் லெவலை குறைத்தல் வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் வாகனத்தின் இடைவெளியை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
அதிக லோடை ஏற்றுவதை தவிர்க்கவும்
அதிக லோடை வாகனங்களில் ஏற்றுவதால் பல்வேறு சிக்கல்கள் அந்த வாகனத்தில் ஏற்படும். குறிப்பாக, மைலேஜ் குறையும், எஞ்ஜின் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் மற்றும் பிரேக்கிங் சிஸ்டமும் கடின உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். இதைத் தவிர்க்க நிர்ணயிக்க அளவு எடையை மட்டும் அந்த வாகனத்தில் ஏற்றி செல்ல வேண்டும்.
ஆகையால், உங்கள் வாகனத்தில் தேவையில்லா பாகம் அல்லது எடை உயர்ந்த பொருட்கள் இருக்கும் எனில் அவற்றை அகற்றுவது நல்லது. செல்போனின் ஸ்பீடை அதிகரிக்க தேவையில்லாத இல்லாத செயலி, ஃபோட்டோ மற்றும் வீடியோ போன்ற ஆவணங்களை டெலிட் செய்வதுபோல் இதையும் வாகனங்களில் செய்ய வேண்டும். இதன் வாயிலாக மைலேஜ் அதிகரிக்கும், எஞ்ஜின் செயல் திறன் அதிகரிக்கும் மற்றும் பிரேக் போன்ற முக்கிய பாகங்களின் ஆயுட்காலம் பாதுகாக்கப்படும்.


Click it and Unblock the Notifications