டெலிவரி அப்போ ஒட்டின ஸ்டிக்கர்கூட இன்னும் கிழில.. அதுக்குள்ள இப்படி ஆகிருச்சே! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் இருக்கின்றது. இது மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இதன் உருவத்தைப் போலவே விலையும் சற்று சிறியதே ஆகும். அதாவது, குறைவான விலைக் கொண்ட கார் மாடலாக பஞ்ச் இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.

அதே சமயத்தில், அதீத பாதுகாப்பு திறன் கொண்ட காராகவும் அது உள்ளது. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான காரே டெலிவரி பெற்ற விரைவிலேயே விபத்தில் சிக்கி இருக்கின்றது.

Tata punch owner loses control

டெலிவரி பெறும்போது கார்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்கூட இன்னும் அகற்றப்படாத நிலையிலேயே அந்த கார் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. எனவே இந்த விபத்து சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால், இது முழுக்க முழுக்க மனித தவறால் அரங்கேறிய ஓர் விபத்து சம்பவம் ஆகும்.

கடந்த காலங்களிலும் இதேபோன்று விபத்து சம்பவங்கள் சில நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. டெலிவரி பெற்று ஷோரூமை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியிலேயே விபத்தைச் சந்தித்த சம்பவங்கள்கூட அதிகளவில் அரங்கேறி உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே டாடா பஞ்ச் கார் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

Tata punch loses control

இந்த காரை ஓட்டி வந்தவருக்கு பெரிய அளவில் கார் ஓட்டிய அனுபவம் இருக்காது என தெரிகின்றது. இதன் விளைவாகவே விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த கார் சிறிய தெரு ஒன்றில் இருந்து வெளியே வந்து, மெயின் ரோடுக்குள் நுழைகின்றது. வாகன நெரிசல் மிகுந்த சாலை அதுவாகும்.

இந்த நேரத்தில் ஓர் கை தேர்ந்த வாகன ஓட்டியாக இருந்திருந்தால் வாகனத்தை நிறுத்தியோ அல்லது எதிரில் வாகனங்களுக்கு காரை மிகவும் நேர்த்தியாக திருப்பியோ முன்னேறி சென்றிருப்பார். ஆனால், இந்த காரை ஓட்டி வந்தவரோ எதிரில் வரும் வாகனங்களின் லேனில் நுழைந்து திருப்ப முயற்சித்திருக்கின்றார்.

Punch met accident

ஆனால், அதற்குள்ளாக அங்கு ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள் வந்துவிட்டன. இதைக் கண்டதும் அந்த ஓட்டுநர் மிரண்டுவிட கார் தொடர்ந்து முன்னேறியேச் சென்று இருக்கின்றது. கார், இரண்டு சக்கர வாகனங்கள் என அனைத்தின் மீதும் மோதி பின்னர் அந்த கார் நின்றிருக்கின்றது.

இந்த விபத்தில் இரண்டு டூ-வீலர்களுக்கு காருக்குள் அடியில் சென்றிருக்கின்றன. மேலும் ஓர் ஆட்டோவும் கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பலருக்கு பாடம் புகட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

புதிதாக காரை ஓட்டத் தொடங்குகின்றீர்கள் என்றால் நெரிசல் மிகுந்த சாலையைக் கட்டாயம் புறக்கணித்தே ஆக வேண்டும் என்கிற மிக முக்கியமான பாடத்தையே இது தெரியப்படுத்துகின்றது. அதேவேளையில், அதிகப்படியான பயிற்சிக்க பின்னரே காரை ஓட்ட வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் நமக்கு தெரியப்படுத்துகின்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான பெரிய காயங்களும் ஏற்படவில்லை. குறிப்பாக, உயிர்சேதமின்றி அனைவரும் தப்பி இருக்கின்றனர். நிகழ்வுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விபத்துகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் பெஸ்ட் கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் இருக்கின்றது.

இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக பஞ்ச் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் புதிதாக வாகனம் ஓட்டுபவராக இருந்தால் போதுமான முன் அனுபவம் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். ஒரு சில தினங்களுக்கு கை தேர்ந்த ஓட்டுநரின் உதவியுடன் காரை வெளியே எடுத்துச் செல்லலாம். அல்லது காலியான பகுதிகளில் வாகனங்களை ஓட்டி நன்கு பழகிய பின்னர் நெடுஞ்சாலை மற்றும் பிசியான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொள்ளலாம் என்பதும் எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 15:09 [IST]
English summary
Brand new tata punch met accident
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X