புரூஸ் லீ படத்தில் வந்த சரோஜா தேவி வாங்கிய காரா இது!.. விலையை கேட்டா நம்ம ஜிவியே மயங்கிடுவாரு போல!
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புரூஸ் லீ. இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்திரமான 'சரோஜா தேவி' எனும் பாத்திரத்தில் க்ரிதி கர்பந்தா தோன்றி இருப்பார். இது ஹீரோயின் ரோல் ஆகும். இந்த நடிகையே மிக மிக அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
க்ரிதி கர்பந்தாவின் பூர்வீகம் பஞ்சாப் மாநிலமாக இருந்தாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் தலைநகர் டெல்லியில் ஆகும். அதேவேளையில், அவரை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தெலுங்கு திரையுலகமாக இருக்கின்றது. அதிகளவில் அவர் தெலுங்கு திரையுலகிலேயே தோன்றிருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக கன்னட படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.

ஆனால், தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கின்றார். அது 'புரூஸ் லீ' ஆகும். இத்தகைய ஓர் நடிகையே விலை உயர்ந்த சொகுசு காருக்கு தற்போது அதிபராகி இருக்கின்றார். க்ரிதி கர்பந்தா புதிதாக ரேஞ்ஜ் ரோவர் வெலர் சொகுசு எஸ்யூவி ரக காரை வாங்கி இருக்கின்றார்.
இந்த காரை அவர் டெலிவரி எடுக்கும் படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 90 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை கோடியை நெருங்கும்.

இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட காரை வாங்கி இருப்பதனால் பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய நபராக க்ரிதி கர்பந்தா மாறி இருக்கின்றார். சமீபத்தில் தன்னுடைய அம்மா-அப்பாவிற்கு ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களை வங்கிக் கொடுத்ததன் வாயிலாக இணையத்தில் அதிகம் பேசப்படும் நபராக அவர் மாறினார்.
இதனைத் தொடர்ந்த தற்போது மீண்டும் புதிய காரின் கொள்முதலின் வாயிலாக ஹாட் டாபிக்காக அவர் மாறி இருக்கின்றார். க்ரிதி கர்பந்தா வாங்கி இருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வெலர் கார் அவரைபோலவே மிகவும் அழகிய காராகும். இதன் வெளிப்புற அழகிய தோற்றத்திற்காக பன்முக கவர்ச்சிகரமான அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டே டைம் ரன்னிங் லேம்ப், புதிய ஸ்டைலான இன்டிகேட்டர்கள் மற்றும் மேற்கூரை முற்றிலும் கான்ஸ்ட்ராஸ்டாக கருப்பு நிறம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இதன் வெளிப்புறம் கண்களைக் கவரக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இந்த கார் வெளிப்புற தோற்றத்தில் மட்டுமில்லைங்க, உட்புறத்திலும் மனதைக் கவரக் கூடியதாக இருக்கின்றது.
இதற்கேற்ப பன்முக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனமாக ரேஞ்ஜ் ரோவர் வெலர் இருக்கின்றது. பனோரமிக் சன் ரூஃப், லெதர் இருக்கைகள், லெதர் உறைக் கொண்ட ஸ்டியரிங் வீல், பிரீமியம் கேபின் லைட்டிங், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், 3 டி சரவுண்ட் கேமிரா, 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஸ்பீடு லிமிட்டர் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்களே பலர் இந்த காரை வாங்கக் காரணமாக இருக்கின்றது. தொழிலதிபர்கள் தொடங்கி திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் வரை பலரின் விருப்பமான காராக ரேஞ்ஜ் ரோவர் வெலார் இருக்கின்றது. இந்த காரில் இரு விதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 2.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகியைவே அவை ஆகும்.
பெட்ரோல் 246 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டீசல் மோட்டார் தேர்வு 200 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் இத்தகை பவர்ஃபுல் மோட்டார் ஆப்ஷன்களே ரேஞ்ஜ் ரோவர் வெலார் எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றது. இவற்றின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ - 217 கிமீட்டர் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பெரும்பாலான நடிகர்களின் பிரயமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனமாக லேண்ட் ரோவர் இருக்கின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே புரூஸ் லீ திரைப்பட நடிகையும் தன்னுடைய இந்த நிறுவனத்தின் சொகுசு காரை புதிதாக வாங்கி இருக்கின்றார். இதுகுறித்த தகவலை அவரை அவரது இன்ஸ்டா பதிவு வாயிலாகவும் தெரியப்படுத்தி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









