புகாட்டி காருக்கு பெயிண்ட் அடிக்க மட்டும் எத்தனை நாள் ஆகும் தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு வேலை நடக்குதா?

உலகிலேயே தலைசிறந்த கார் தயாரிப்பாளர்களின் முக்கியமான நிறுவனம் புகாட்டி. இந்நிறுவனம் உலகம் முழுவதும் அலட்ரா-பிரிமியம் மற்றும் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொண்ட கார்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார்களை வாங்க ஏகப்பட்ட மக்கள் தவம் கிடைக்கின்றனர். பெரிய பெரிய பணக்காரர்கள், பிரபலங்கள் எல்லாம் இந்நிறுவனத்தின் காரை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர்.

புகாட்டி நிறுவனம் நீங்கள் என்னதான் பணம் கொடுத்தாலும் சரி, அல்லது பெரிய ஆளாக இருந்தாலும் சரி உங்களுக்கு உடனே எல்லாம் காரை தந்துவிடாது. நீங்கள் ஆர்டர் செய்தால் அந்த ஒரு காரை தயாரிக்கவே மாதக் கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும். இந்தியாவில் பிரபல கார் நிறுவனங்கள் ஒரு நாளுக்கே ஆயிரக்கணக்கான கார்களை தயாரித்து வெளியே அனுப்புகின்றனர்.

புகாட்டி காருக்கு பெயிண்ட் அடிக்க மட்டும் எத்தனை நாள் ஆகும் தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு வேலை நடக்குதா?

ஆனால் புகாட்டி போன்ற நிறுவனம் தங்கள் காரை முற்றிலுமாக கையாலேயே தயாரிப்பதால் இந்த காரை மாதக் கணக்கில் செய்துவருகிறது. தற்போது நமக்கு இந்த புகாட்டி காருக்கு பெயிண்ட் அடிக்கும் முறை குறித்த சில தகவல்கள் தான் கிடைத்துள்ளது. இதுவே பலரை வியக்க வைக்கும் அளவில் இருக்கிறது. இப்படியெல்லாம் கூட பார்த்துப் பார்த்து பெயிண்ட் அடிப்பார்களா எனச் சொல்லத் தோன்றுகிறது.

புகாட்டி காருக்கு மொத்தம் 8 லேயர்களில் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. காரை தனித்தனிப் பேனல்களாக பிரித்துத் தான் பெயிண்ட் அடிப்பார்கள். அதற்கு முன் பெயிண்ட் அடிப்பவர்கள் ஒவ்வொரு பேனல்களாக வந்து சரியாக இருக்கிறதா என செக் செய்வார்கள். என்னதான் ஒரே டிசைனாக இருந்தால் பேனல்கள் கைகளால் செய்யப்படுவதால் ஒவ்வொரு காருக்கும் இந்த செக்கப் நடத்தப்படும்.

பெயிண்ட் அடிப்பதற்கு முன்பு முதலில் இந்த பேனல்களில் பிரைமர் பூசப்படும். அதை வைத்து வெளிப்பக்கத்தை ஸ்மூத்தாக தயார் செய்துவிடுவார்கள். மொத்தம் 8 விதமான லேயர்கள் வழங்கப்படுவதால் ஒவ்வொரு லேயருக்கும் ஒருவர் பொறுப்பாளராக இருப்பார்.அவர்கள் ஒவ்வொரு லேயருக்கான பணி முடிந்த பின்பும் அந்த பேணல்களைச் சரி பார்ப்பார்கள்.

இதே போல ஒவ்வொரு பேனல்களில்லும் பணி முடிந்த பின்பு கலரில் ஏதாவது சிறிய வித்தியசம் இருக்கிறதா என்று கூட செக் செய்வார்கள். அப்படி ஏதாவது வித்தியாசம் தென்பட்டால் அதை உடனடியாக மாற்றிவிடுவார்கள் தேவைப்பட்டால் அந்த பேனலையே மாற்றி புதிதாகச் செய்து அதற்கு பெயிண்ட் அடிக்கவும் தயங்க மாட்டாங்கள். இப்படியாக 8 லேயர் பெயிண்ட் அடிக்கப்படும்.

இந்த பெயிண்ட் அடிக்கும் வேலை எல்லாம் முடிந்ததும். இந்த பேனல்கள் பிரைட் லைட் டனல் பகுதியில் 10 மணி நேரம் காய வைப்பார்கள். அங்கு அதிகமான வெளிச்சம் இருக்கும். அந்த லைட்டிலிருந்து வெளியாகும் சூட்டிலேயே இந்த பெயிண்ட் காய்ந்தால் பளபளப்பாக இருக்கும். 10 மணி நேரத்தில் பிறகு அந்த டனலில் இருந்து பேனல்கள் வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் சோதிக்கப்படும்.

இதுதான் கடைசி கட்ட சோதனை அதே நேரம் மிக கடுமையான சோதனையாக இருக்கும். கிட்டத்தட்ட மைக்ரோ ஸ்கோபிக் சோதனையை செய்வார்கள். பேனலின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் சோதனை செய்வார்கள். அதில் பாஸ் ஆனால் மட்டுமே இந்த கார் வெளியே விற்பனைக்கு வரும் அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதைச் சரி செய்ய அல்லது முழுமையாக மாற்றக் கூட தயங்க மாட்டார்கள்.

இந்த காருக்கு 8 லேயர் பெயிண்ட் செய்யும் பெயிண்டர்கள் உலகிலேயே சிறந்த அனுபவம் உள்ள பெயிண்டர்களாக இருக்கின்றனர். அதிக தரமான அதே நேரத்தில் தரமானதாக பெயிண்டிங்கை செய்கின்றனர். இந்த பெயிண்டிங்கை செய்ய சுமார் 600 மணி நேரம் வேலை இருக்கும். அதாவது 24 மணி நேரமும் ஷிஃப்ட் போட்டு வேலை செய்தால் 25 நாட்கள் ஆகும் பெயிண்ட் அடித்து முடிக்க.

இப்படியாகப் பல கடினமான முயற்சி மற்றும் பல கட்ட சோதனைகளைக் கடந்து தான் ஒரு புகாட்டி கார் விற்பனைக்கு வருகிறது. அதற்காகத் தான் இந்த காரின் விலையும் அதிகமாக இருக்கிறது அதே நேரத்தில் இந்த காருக்கு மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, March 20, 2023, 9:20 [IST]
English summary
Bugatti cars have 8 layers of paints know full details
மேலும்... #புகாட்டி #bugatti
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+