அதானியே இந்த விலைக்கு காரை வாங்க யோசிப்பாரே! புகாட்டியின் கடைசி பெட்ரோல் கார் அதிக விலைக்கு ஏலம்!

புகாட்டி நிறுவனம் அனைவரும் அறிந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் தான். இந்நிறுவனம் வேகமான கார்களை தயாரித்து மார்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருவதில் சிறந்த நிறுவனம். இந்நிறுவனத்தின் கார்களை வாங்க ஏகப்பட்ட பேர் காசை கையில் வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த காருக்கு உலகம் முழுவதும் மவுசு இருக்கிறது. பலர் இந்த நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிறுவனம் பெட்ரோலில் இயங்கும் கார்களை மட்டும் தயாரித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைபிரிட் கார்களை தயாரிக்க துவங்கி தற்போது மெல்ல மெல்ல தங்கள் தயாரிப்புகளில் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தற்போது முழுமையாக பெட்ரோலில் இயங்கும் காரை தயாரிப்பதை இந்நிறுவனம் முழுமையாக நிறுத்திவிட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் கடைசி முழுமையான பெட்ரோல் கார் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளது.

அதானியே இந்த விலைக்கு காரை வாங்க யோசிப்பாரே! புகாட்டியின் கடைசி பெட்ரோல் கார் அதிக விலைக்கு ஏலம்!

இந்நிறுவனம் முழுமையான பெட்ரோல் காரில் கடைசியாக புகாட்டி சிரோன் புரோஃபைலி காரை தயாரித்தது. இந்த காரை பாரீஸில் உள்ள ஆர்எம் கலெக்டர் என்ற காரை ஏலம் விடும் நிறுவனம் ஏலம் விட்டது. பொதுவாக இந்த கார் 4.5 மில்லியன் முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் தான் விலை போகும். இந்த காருக்கான மதிப்பும் அவ்வளவு தான். ஆனால் இது தான் கடைசி பெட்ரோல் கார் என்றதும் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

இந்நிலையில் ஏல நிறுவனமே இந்தகாரின் விலையை எதிர்பார்ப்பிற்கு தகுந்தார் போல ஏற்றி 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற விலையில் ஏலத்தை ஆரம்பித்தது. இந்த காரின் ஏலத்திற்கான பேட்டி அதிகமாக இருந்தது. இறுதியாக இந்த கார் 10.7 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற விலையில் ஏலம் போய் உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ88.23 கோடியாகும். இது தான் உலகத்திலேயே அதிக விலைக்கு ஏலம் போன புதிய காராகும். இதற்கு முன்னர் புதிய கார்கள் எதுவும் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போனதில்லை.

இதைற்கு முன்னர் 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஏலம் போயிருந்தாலும் அது தனியார் ஏலம் பொது ஏலம் கிடையாது என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

புகாட்டி நிறுவனத்தின் ஷிரோன் கார்களிலேயே புரோஃபைலி கார் தான் மிக வேகமாக செல்லும் காராகும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்க வெறும் 2.3 நொடிகள் தான் எடுத்துக்கொள்ளும், இதுவே 200 கி.மீ வேகத்தை எட்டி பிடிக்க ரூ5.5 நொடிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு ரூ378 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால் ஷிரோன் வகை காரில் இதுதான் அதிகபட்ச வேகம். இன்னும் வேகமான கார்கள் புகாட்டி நிறுவனத்தில் இருக்கிறது. இது 480 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

புகாட்டி நிறுவனம் இதற்கு பிறகு முழுமையான பெட்ரோலில் இயங்கும் கார்களை தயாரிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக பிளக் இன் ஹைபிரிட் உள்ளிட்ட பிற சக்திகளில் இயங்கும் கார்களை தான் தயாரிக்கவுள்ளன. இதை அந்நிறுவனத்தின் புகாட்டி மேட் ரிமாக் உறுதிபடுத்தியுள்ளார்.

புகாட்டி நிறுவனம் இந்த புகாட்டி ஷிரோன் புரோஃபைலி காரை கடந்த 2020ம் ஆண்டு முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. இதுபுகாட்டி நிறுவனத்தின் பிரைமரி மாடல் காராகும். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 18:30 [IST]
English summary
Bugatti last petrol only car auctioned for rupees 88 23 crores
மேலும்... #புகாட்டி #bugatti
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+