கலவரத்துல பஸ்/ லாரி கண்ணாடிய மட்டும் ஏன் ஈஸியா உடைக்குறாங்க தெரியுமா?
கலவரங்களில் கல்லால் தாக்கப்படும் போது கார் கண்ணாடிகளை விட பஸ் கண்ணாடி தான் அதிகம் பாதிக்கப்படும். இது ஏன் தெரியுமா? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன விரிவாக காணலாம் வாருங்கள்.
ஒரு கலவரம் நடக்கிறது என்றால் அந்த கலவரத்தில் அதிகம் தாக்கப்படுவது வாகனங்கள் தான். குறிப்பாக வாகனங்களில் கண்ணாடிகளில் கலவரக்காரர்கள் கல்லை விட்டு எறிவார்கள். இப்படியாக கலவரத்தில் உங்கள் வாகனம் சிக்கனால் அவ்வளவு தான் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.

அப்படியாக கலவரங்களில் சிக்கிய வாகனங்களில் கண்ணாடிகள் கல்லை விட்டு எரிந்து உடைக்கப்பட்டிருக்கும். இப்படியாக உடைக்கப்படும் கண்ணாடிகளில் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்களின் கண்ணாடிகள் அதிகமாக பாதிக்கப்படும். கார் போன்ற சிறிய வாகனங்களின் கண்ணாடிகள் அவ்வளவாக பாதிக்கப்படாது இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
நீங்கள் கார் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் காரின் முன்பக்க கண்ணாடியை போய் பாருங்கள் கண்ணாடியின் கீழ் பாகத்திலிருந்து கண்ணாடியின் மேல் பாகம் சரிவாக இருக்கும். எவ்வளவு டிகிரி சரிவாக இருக்கிறது என்பது காரை பொறுத்து மாறுபடும். இப்படி சாய்வாக இருப்பது தான் இதற்கு முக்கியமான காரணம்.

ஒரு காரை அதன் வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கும் போது அந்த கார் முடிந்த அளவிற்கு ஏரோ டைனமிக்ஸ் அம்சங்களை கொண்டிருக்கும்படி வடிவமைப்பார்கள். அப்பொழுது கண்ணாடியை செங்குத்தாக வைத்தால் கார் வேகமாக பயணிக்கும் போது காற்று செங்குத்தான கண்ணாடியில் மோதி ஏரோ டிராக்ஷன் ஏற்படாமல் கார் நகரும் திறனை காற்று குறைக்கும்.
ஆனால் சாய்வாய்வாக வைத்தால் அதன் வடிவமைப்பு கார் மீது மோதும் காற்றை பின்னால் தள்ளிவிட்டு விடும். இதனால் கார் வடிவமைப்பாளர்கள் எப்பொழுதும் காரை வடிவமைக்கும் போது முன்பக்க கண்ணாடியை சாய்வான போஸிஷனில் தான் வைப்பார்கள். இந்த விஷயம் ஏரோடைமிக்ஸிற்கு மட்டுமல்ல கார் கண்ணாடி கல்லால் அடிபடும்போது உடையாமல் இருக்க முக்கியமான காரணம்.
திடீரென ஏதாவது கல் அல்லது வேறு பொருள் காரின் கண்ணாடியை தாக்குகிறது என்றால் கண்ணாடி செங்குத்தாக இருக்கும் போது அது கண்ணாடியை பெரும் பகுதியை தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே சாய்வாக இருந்தால் குறைவான இடத்தில் தான் தாக்கம் இருக்கும். இதனால் கண்ணாடி அதிகம் உடையாமல் பாதுகாக்கப்படும்.
இன்று வாகனங்களின் கண்ணாடியை பொருத்தவரை சுக்கு நூறாக உடையும் கண்ணாடிகள் பொருத்தப்படுவதில்லை மாறாக, டெம்பர் கண்ணாடிகள் இரண்டு வைத்து அதன் நடுவே பாலி வினைல் ஷிட் வைத்து அழுத்தப்பட்ட கண்ணாடி தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெரிய கல்லே விழுந்தாலும் காரின் கண்ணாடி உடையாது. மாறாக நொறுங்கி போய் அப்படியே நிற்கும்.
சரி கார்களில் முன்பக்க கண்ணாடியை சாய்வாய் வடிவமைக்கப்பட்டதற்கு பின்னால் இவ்வளவு அறிவியல் விஷயங்கள் இருக்கிறது என்றால் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்களில் ஏன் கண்ணாடிகள் செங்குத்தாக இருக்கிறது? என்ற கேள்வி வரும். கல்லால் தாக்கப்படும் போது பஸ், லாரி போன்ற வாகனங்களின் கண்ணாடிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதை தெரிந்தே தான் அப்படியாக வடிவமைத்துள்ளனர்.
பஸ், லாரி போன்ற வாகனங்களில் டிரைவர் அமரும் இடம் உயரமாக இருக்கும். அந்த உயரத்தை விட சில வாகனங்களில் உயரம் குறைவாக இருக்கும். இதனால் இதில் கண்ணாடி சாய்வாக அமைக்கப்பட்டால் பஸ், அல்லது லாரிக்கு முன்பக்கம் ஏதேனும் சிறிய ரக வாகனம் சென்றால் அது டிரைவருக்கு தெரியாமல் போகும் இதனால் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதை தடுக்க தான் லாரி, பஸ்களில் கண்ணாடிகளை செங்குத்தாக வைத்திருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏரோ டைனமிக்ஸ், கல்லால் தக்கப்படும் போது சேதமாவது உள்ளிட்ட பல சிக்கல்கள் பஸ்/ லாரி கண்ணாடிகளை செங்குத்தாக வடிவமைக்கும் போது இருந்தாலும், அதை சாய்வாய் அமைத்தால் ஏற்படும் பாதிப்பு அதை விட அதிகம் என்பதால் செங்குத்தாக வடிவமைப்பதே சிறந்தது என நினைத்து வடிவமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








