பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்தியாவில் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Atto 3 EV SUV) காரின் டெலிவரி பணிகளை பிஒய்டி (BYD) நிறுவனம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 340 வாடிக்கையாளர்களுக்கு பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதமே இந்த 340 கார்களும் டெலிவரி செய்யப்பட்டு விட்டன.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 60.48 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 201 பிஹெச்பி பவர் மற்றும் 310 என்எம் டார்க் ஆகும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 521 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் 7.3 வினாடிகளில் எட்டி விடும். தற்போதைய நிலையில் பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஆனால் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவை போல்டர் க்ரே, பார்க்கர் ரெட், ஸ்கை ஒயிட் மற்றும் சர்ஃப் ப்ளூ ஆகியவை ஆகும். பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 33.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில், பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது இந்த எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இதுகுறித்து பிஒய்டி இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பாசஞ்சர் வாகன பிரிவின் மூத்த துணை தலைவர் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றார். பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியண்ட் லைட்டிங், அடாஸ் தொழில்நுட்பம், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா (Hyundai Kona) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் போட்டியிடும். நேரடி போட்டி இல்லை என்றாலும் கூட, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் காருக்கும், பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை ஒரு போட்டியாக கருத முடியும்.

80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு சுமார் 50 நிமிடங்கள் ஆகும். ஆனால் டைப் 2 7 kW ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 10 மணி நேரம் வரை ஆகும். முன்பதிவுகள் குவிந்து வருவதால், பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 16:45 [IST]
English summary
Byd atto 3 deliveries begin in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+