இந்தியாவில் நீண்ட நாட்களை தாக்குபிடித்த சீன நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்.. அடேயப்பா இத விழாவாவே கொண்டாடுறாங்க
பிரபல சீன வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams) அதன் வர்த்தக பணிகளை இந்தியாவில் தொடங்கி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் கார் மாடலாக இ6 (e6) இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் எம்பிவி (MPV) ரக காராகும்.
மாருதி சுஸுகி எர்டிகா-வைப் போலவே அதிக இட வசதி மற்றும் அதிக பயணிகள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஓர் கார் மாடலே இது ஆகும். ஆனால், அதைவிட அதிக பிரீமியம் தர அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரை முதலில் சீன நிறுவனம் வாடகை வாகன சேவை (கால் டாக்சி) நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கியது. இதைத்தொடர்ந்து, தன்னுடைய வர்த்தக பணிகளை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் நோக்கில் தனது இ6 எலெக்ட்ரிக் காரை தனி நபர்களுக்கும் விற்பனைக்கு வழங்கத் தொடங்கியது.
இத்துடன், புதுமுக கார் மாடலான அட்டோ3 என்கிற எஸ்யூவி ரக வாகனத்தையும் அது விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த காரையே பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி ஓராண்டுகள் ஆகிவிட்டன. சென்ற ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்றே இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே முதலாம் ஆண்டை இந்த காருக்காக தயாரிப்பு நிறுவனம் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த காரே நிறுவனத்தின் தற்போது அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இருக்கின்றது. மேலும், இந்தியாவில் நீண்ட நாட்களைத் தாக்குப் பிடித்து சிறப்பான விற்பனையை விகித்தத்தையும் அந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதற்காகவே அந்த காரை தற்போது சிறப்பிக்கும் பணியில் பிஒய்டி மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் மட்டுமில்லைங்க பிற உலக நாடுகள் சிலவற்றிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரேசில், தாய்லாந்து, இஸ்ரேல் மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலேயே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்களை முன் வைக்கலாம். ஆனால், முதன்மையான காரணமாக காரின் கவர்ச்சியான தோற்றத்தையும், சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் கூறலாம். ஆமாங்க, இந்த எலெக்ட்ரிக் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை பிஒய்டி நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
லெவல் 2 வகை அடாஸ் அம்சம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கை, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர் ஃபுல் மோட்டார் ஆகியவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் பிஎம்எஸ் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 201 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 521 கிமீ ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 60.48 kWh பேட்டரி பேக்கே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரை எஸ்கேடி வாயிலாக இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, பிஒய்டி.
ஆகையால், இதன் விலை சற்று காஸ்ட்லியாக இருக்கின்றது. 33.99 லட்சம் என்கிற உச்சபட்ச விலையே இந்த காரின் ஆரம்ப விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மிக சிறந்த விருதுகளில் ஒன்றான, 'விஏபி எலெக்ட்ரிக் ஃபேமிலி கார் ஆஃப் தி இயர் 2023' (VAB Electric Family Car of the Year 2023) என்கிற விருதைப் பெற்ற எலெக்ட்ரிக் காராகவும் அது இருக்கின்றது.
15 நடுவர்கள் அடங்கிய குழுவே இந்த விருதை எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த 15 நடுவர்கள் அனைவரும் மோட்டார் வாகன உலகைச் சேர்ந்த கை தேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள். பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காருக்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியிலேயே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் மாடல் இருக்கின்றன. அதில் ஒன்றே இந்த பிஒய்டி அட்டோ3 எஸ்யூவி ரக மின்சார காராகும். இந்த கார் மாடலைத் தொடர்ந்து இன்னும் சில இகார்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பிஒய்டி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








