என்னங்க சீன பிராண்டோட இந்த காரு பேயி மாதிரி விற்பனையாகிட்டு இருக்கு! இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட்டா
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றே பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3) ஆகும். இந்த கார் மாடலே தற்போது உற்பத்தியில் அசாத்தியமான மைல் கல்லை எட்டி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சீனாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams) இந்தியாவிலும் தன்னுடைய வர்த்தக பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சற்று அதிக விலையைக் கொண்டதாக இருப்பதால், செல்வந்தர்கள் மட்டுமே அறிந்த பிராண்டாக பிஒய்டி இருக்கின்றது.

அது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக அட்டோ 3 இவி (ATTO 3 EV) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரே தற்போது உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் இந்த கார் மாடலின் 5 லட்சமாவது யூனிட்டை வெற்றிகரமாக உற்பத்தி செய்து தற்போது விற்பனைக்காக வெளியேற்றி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஐந்து லட்சம் யூனிட் உற்பத்தி என்கிற மைல்கல்லை வெறும் 19 மாதங்களிலேயே பிஒய்டி அட்டோ 3 இவி எட்டி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனால்தான் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமும் தற்போது ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றது. இத்தனைக்கும் இந்த கார் மிக மிக அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த நிலையிலேயே 5 லட்சம் யூனிட் உற்பத்தியை அந்த கார் எட்டி இருக்கின்றது. இதனால்தான் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர்.
பிஒய்டி அட்டோ3 எலெக்ட்ரிக் கார் 33.99 லட்சம் ரூபாய் தொடங்கி ரூ. 34.59 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை உங்களுக்கு மிக மிக அதிகமாக தெரியலாம். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் விலையைப் போலவே அந்த காரில் சிறப்பு மற்றும் சொகுசு வசதிகளிலும் மிக உயரியதாகக் காட்சியளிக்கின்றது.
இதனால்தான் அந்த காருக்கு இவ்வளவு உயரிய விலையை சீன நிறுவனம் நிர்ணயித்த இருக்கின்றது. குறிப்பாக, இந்த கார் மாடல் பாதுகாப்பு விஷயத்தி்ல ஐந்து ஸ்டார்களைக் குவித்து இருக்கின்றது. இது யூரோ என்சிஏபி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வு என்றாலும், இந்தியாவில் விற்பனையில் உள்ள அட்டோ3 எலெக்ட்ரிக் காருக்கும் அது பொருந்தும் என கூறப்படுகின்றது.
ஆகையால், அட்டோ3 அதிக பாதுகாப்பான வாகனம் என்பது தெளிவாக தெரிகின்றது. இதேபோல், ரேஞ்ஜ் தருவதிலும் இந்த எலெக்ட்ரிக் கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 512 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என அராய் தெரிவித்து இருக்கின்றது.
மேலும், இந்த எலெக்ட்ரிக் காரை 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 50 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம்வரை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், 7 kW பேட்டரி பேக்கை பயன்படுத்துகையில் அக்காரை முழுமையாக சார்ஜ் செய்ய 10 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
இதுமட்டுமில்லைங்க, 3 kW ஏசி சார்ஜர் வாயிலாகவும் இந்த காரை சார்ஜ் செய்ய முடியும். இந்த எலெக்ட்ரிக் காரில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக என்எஃப்சி வகை கார்டு சாவியாகவும், 360 டிகிரி பார்வை திறன் கொம்ட பார்க்கிங் கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், 12.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இதை தேவைக்கேற்ப ரொட்டேட் செய்து கொள்ள முடியும்) போன்ற தரமான அம்சங்களை இந்த காரில் பிஒய்டி வாரி வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலேே பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி சாதனை அமைந்திருக்கின்றது. வரும் நாட்களில் இதுபோன்ற இன்னும் பல சாதனைகளை அந்த கார் புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








