இந்தியாவில் 16 வருடங்களாக இயங்கி கொண்டிருக்கும் சீன நிறுவனம் - மத்திய அரசு இன்னும் சரியா கவனிக்கல போல!!
இந்தியாவில் செயல்பட துவங்கி ஓர் ஆட்டோமொபைல் நிறுவனம் வெற்றிக்கரமாக 16 வருடங்களை நிறைவு செய்துள்ளது. எந்த ஆட்டோமொபைல் நிறுவனம் அது? இத்தனை வருடங்களில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் என்னென்ன என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
16 வருடங்களாக ஓர் ஆட்டோமொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றவுடனேயே நமது நினைவுகள் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களாக இருக்குமோ என்றுதான் எண்ணும். 16 வருடங்களை எப்போதோ கடந்துவிட்ட இந்த நிறுவனங்களை பற்றி நாம் இந்த செய்தியில் பார்க்க போவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் நாம் இந்த செய்தியில் எந்த நிறுவனத்தை பார்க்கவுள்ளோம்? எந்த ஆட்டோமொபைல் நிறுவனம் 16 வருடங்களை கடந்துள்ளது என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்படியொரு ஆட்டோமொபைல் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறதா என்பதே சிலருக்கு தெரிந்திருக்காது. மேலும், பலருக்கு இந்த நிறுவனத்தின் பெயரை கடந்த சில வருடங்களாக தான் கேட்டு கொண்டு இருப்பதுபோல் தோன்றும்.
ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட துவங்கி 16 வருடங்களாகி விட்டன. அந்த ஆட்டோமொபைல் நிறுவனம் வேறொன்று இல்லை, பி.ஒய்.டி (BYD) ஆகும். சீன ஆட்டோமொபைல் நிறுவனமான இது அந்த நாட்டில் 2003இல் முதல்முதலாக நிறுவப்பட்டது. அதன்பின் 4 வருடங்கள் கழித்து இந்தியாவிற்குள் பிஒய்டி நுழைந்தது. சமீப காலமாக, இந்தியாவில் சீன நிறுவனங்களை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இருப்பினும் பி.ஒய்.டி அசராமல் நம் நாட்டில் செயல்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம், நம் நாட்டில் இந்த சீன நிறுவனம் வலுவாக காலூன்றி இருப்பதுதான். அந்த அளவிற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா, உத்திர பிரதேசம் என வடக்கில் இருந்து தெற்கு வரையில் பிஒய்டி நிறுவனத்திற்கு தொழிற்சாலைகளும், டீலர்ஷிப் மையங்களும் உள்ளன. குறிப்பாக, நமது தமிழ்நாட்டில் தான் பிஒய்டி-இன் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், இந்த நிறுவனத்தின் இந்திய தலைமை அலுவலகம் சென்னைக்கு அருகே ஒரகடத்தில் தான் அமைந்துள்ளது. தொழிற்சாலை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ளது. இப்படிப்பட்ட இந்த நிறுவனத்தை பலருக்கு எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாகவே தெரியும். ஆனால் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்துதான் பிஒய்டி விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் பிஒய்டி-இன் பிரதான வணிகம் என்று பார்த்தால், எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை உற்பத்தி செய்து விற்பதுதான். அத்துடன், எலக்ட்ரிக் பேருந்துகள், கனரக லாரிகளையும் இந்த சீன நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. பிஒய்டி-இன் 1,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் பேருந்துகளும், ஏறக்குறைய 600 எலக்ட்ரிக் கனரக லாரிகளும் நமது இந்தியாவில் இயக்கத்தில் உள்ளன.
ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மொத்தம் 2,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். பிஒய்டி-க்கு இந்தியாவில் 21 நகரங்களில் 24 வாகன விற்பனை மையங்கள் உள்ளன. இதனை இந்த 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 53 ஆக அதிகரிக்கும் முனைப்பில் இந்த சீன நிறுவனம் உள்ளது. இந்த பிராண்டில் 2021இல் முதல் எலக்ட்ரிக் காராக இ6 -க்கும், கடந்த 2022இல் அட்டோ 3 காரும் அறிமுகமாகின.


Click it and Unblock the Notifications








