BYD India சீன நிறுவனத்தின் பக்கம் சாயும் இந்திய மக்கள்! டாடாவை எல்லாம் தூக்கி சாப்பிட்றுவாங்க போல இருக்குங்க!

அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளதால், இந்தியா வணிகத்திற்கான சிறந்த சந்தையாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் கார் சந்தை மிகப்பெரிய ஒன்றாக திகழ்கிறது. எனவே வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும், சமீப காலமாக இந்திய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

இந்த வகையில் இந்திய சந்தைக்குள் நுழைந்த கார் நிறுவனங்களில் ஒன்றுதான் பிஒய்டி (BYD). Build Your Dreams என்பதுதான் சுருக்கமாக BYD என அழைக்கப்படுகிறது. இது சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஆகும். தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

BYD Atto 3 EV

அவை பிஒய்டி இ6 (BYD E6) மற்றும் பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3) ஆகியவை ஆகும். மூன்றாவதாக பிஒய்டி சீல் (BYD Seal) என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய சந்தைக்கான பிஒய்டி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் 281 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 18 எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பிஒய்டி நிறுவனம் பதிவு செய்துள்ளது.

BYD E6

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் வருகைதான் இதற்கு காரணம். ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனையில் இருந்தது. பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில், 60.48 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 521 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும். டைப் 2 ஏசி சார்ஜர் (7 kW) பயன்படுத்தினால், இந்த பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 10 மணி நேரம் ஆகும்.

ஆனால் 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, வெறும் 50 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இந்திய சந்தையில், எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய கார்களுடன் பிஒய்டி அட்டோ 3 போட்டியிட்டு வருகிறது.

இதுதவிர நேரடி போட்டி இல்லை என்றாலும், டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் காருக்கும், பிஒய்டி அட்டோ 3 விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இதை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ள பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 700 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 3.8 வினாடிகளில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறனையும் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் கார், பிஒய்டி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டு விட்டது. எனவே இன்னும் சில மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தைக்கென பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை கைவசம் வைத்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில், அந்த நிறுவனம் இங்கு கிடுகிடுவென வளர்ச்சியும் அடைந்து வருகிறது. எனவே இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனம் தனி முத்திரை பதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 16:16 [IST]
English summary
Byd india sales report march 2023 e6 atto 3 seal electric cars
மேலும்... #பிஒய்டி #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+