முழு சார்ஜில் சென்னை- கன்னியாகுமரி செல்லலாம்! டெஸ்லாவுக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறங்கும் புதிய கார்!

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கு போட்டியாக இந்தியாவில் தனது சீல் காரை களம் இறக்க பிஒய்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 700 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தன் தடத்தைப் பதித்துவிட்டது. இங்குத் தனது இரண்டு கார்களை விற்பனை செய்து வருகிறது. இ6 என்ற எம்பிவி காரையும் அடுத்ததாக அட்டோ 3 என்ற எஸ்யூவி காரையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு கார்களும், எலெக்ட்ரிக் கார்களாகும். இந்நிலையில் இந்நிறுவனம் இன்னும் சில தினங்களில் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய காரை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

முழு சார்ஜில் சென்னை- கன்னியாகுமரி செல்லலாம்! டெஸ்லாவுக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறங்கும் புதிய கார்!

அதன்படி பிஒய்டி நிறுவனம் டெஸ்லா 3 காருக்கு போட்டியாக உள்ள தனது பிஒய்டி சீல் என்ற எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்கெட்டில் பல நாடுகளில் விற்பனையாகும் கராகும். இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை ஓசன் எக்ஸ் கான்செப்டில் ஓசன் அஸ்தெட்டிக்ஸ் ஃபிலாசஃபியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் அதற்கான பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்ட ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4.80 மீட்டர் நீளமும், 1.87 மீட்டர் அகலமும், 1.46 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் வீல் பேஸ் மட்டும் 2.92 மீட்டர் நீளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற டிசைனை பொருத்தவரை இதன் பானட் பகுதியில் சரிவாக இருக்கும்படி கொடுத்துள்ளனர்.

முழு சார்ஜில் சென்னை- கன்னியாகுமரி செல்லலாம்! டெஸ்லாவுக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறங்கும் புதிய கார்!

இது போக ஷார்ப்பான ஹெட்லைட் கிளஸ்டர், கூபே வடிவ ரூஃப்லைன், பக்கவாட்டு பகுதிகளில் ஸ்டிராங்கான கேரக்டர் லைன்கள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ஷார்ட் ஓவர் ஹேங்க்ஸ், அக்ரஷிவ் பம்பரின் கீழ்ப் பகுதியில் பெரிய ஏர் இன்டெக்கிற்கான இடம், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள், முழு அகலமான எல்இடி லைட் பார்.

இது போக பிஒய்டி அட்டோ 3 காரில் உள்ளதைப் போல இந்த காரிலும் சுழலும் 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், குறைவான ஃபிசிக்கல் பட்டன், டிரைவ் மோட்கள், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர்கள், பெரிய ஏசி வென்ட்கள், பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், மற்றும் இரண்டு டோன்களால் ஆன கேபின் தீம் ஆகியன இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை பிளோடு பேட்டரி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 61.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி, 82.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டது. குறைந்த திறன் பேட்டரியில் இந்த கார் முழு சார்ஜில் 550 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிக திறன் கொண்ட பேட்டரியில் முழு சார்ஜில் 700 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் தொழிற்நுட்ப ஆப்ஷன்கள் உள்ளன.

டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வேரியன்டை பொருத்தவரை 530 எச்பி பவரை வெளிப்படுத்தும், இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சமாக 650 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரும் அட்டோ 3 மற்றும் இவி6 ஆகிய கார்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் பிஒய்டி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 5, 2023, 11:17 [IST]
English summary
Byd plans to showcase seal electric SUV in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+