நல்லவேள இந்த காரு இந்தியாக்கு வரல! இதுமட்டும் வந்துச்சு டியாகோ இவியையே இருந்த இடம் தெரியாம பண்ணிட்டு இருக்கும்
முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. சீகுல் எனும் எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக வாகனமாகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த காரில் 400 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.
இத்தகைய சூப்பரான ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காரையே சீனாவைச் சேர்ந்த பிஒய்டி வெளியீடு செய்திருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் இ6 மற்றும் அட்டோ 3 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரையில் தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் சீகுல்-லையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவிக்கின்றன. அந்தவகையில், சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலேயே சீகுல்-லை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது, பிஒய்டி.
இதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக இந்த எலெக்ட்ரிக் காரை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஷாங்காய் ஆட்டோ ஷோவிலேயே சீகுல் வெளியீட்டைப் பெற இருக்கின்றது. உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இதனை களமிறக்க சீன நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

ஆனால், இதன் விலை இப்போதைக்கு உறுதி செய்யப்படவில்லை. ஆகையால், ஒரு வேளை இந்த வாகனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் டாடா டியாகோவிற்கு போட்டியாக அதன் வருகை இருக்கும். பிஒய்டி நிறுவனம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக சீகுலை உருவாக்கி இருக்கின்றது.
குறிப்பாக, தினசரி பயன்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டே சீகுல் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் உருவம் சற்று சிறியதாக இருக்கின்றது. இருப்பினும் இந்த காரில் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். 3,780 மிமீ நீளமும், 1,715 மிமீ அகலும், 1,540 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கின்றது.

இந்த அளவு சிறிய தோற்றம் கொண்ட வாகனமே சீகுல். உருவம் சிறியதாக இருந்தாலும், இந்த காரின் தோற்றம் அழகிற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் இருக்கின்றது. எல்இடி ஹெட்லைட், பெரிய ஏர் இன்டேக், பம்பர் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவை இந்த காரின் அழகிய தோற்றத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதன் கேபினும் மிக மிக அழகானதாக இருக்கின்றது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இந்த காரின் உட்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் அதிகபட்ச ரேஞ்ஜ் தருவதற்காக 30 kWh மற்றும் 38 kWh ஆகிய இரு பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இதில், முதல் பேட்டரி பேக் 305 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் 305 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இது டாடா டியாகோவிற்கு போட்டி அளிக்க போதுமான ரேஞ்ஜ் திறன் ஆகும். இவை எல்எஃப்பி பேட்டரி பேக் ஆகும். பேட்டரி பேக்கை போலவே மோட்டாரிலும் இரு விதமான தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
முதல் மோட்டார் 74 எச்பி பவரை வழங்க கூடியதாகவும், இரண்டாவது மோட்டார் 94 எச்பி பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு 100-130 கிமீட்டரே இதன் டாப் ஸ்பீடு ஆகும். இந்த கார் விற்பனைக்கு வந்த பின்னர் நிச்சயம் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








