டூவீலருக்கே டஃப் கொடுக்கும் காருக்கு டிரேட்மார்க் பதிவு செய்த சீன நிறுவனம்! எந்தெந்த நிறுவனம் காணாம போக போகுதோ

பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) இந்தியாவில் அதன் சூப்பரான ஓர் கார் மாடலுக்கு டிரேட்மார்க் (Trademarke) பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன கார் மாடல்? அதன் சிறப்புகள் என்ன? இது விற்பனைக்கு வந்தால் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எந்தெந்த கார் மாடல்களுக்கு எல்லாம் போட்டியாக அமையும்? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla)-விற்கே டஃப் கொடுக்கும் நிறுவனமாக மாறி இருக்கின்றது பிஒய்டி (BYD). இந்த நிறுவனம் தற்போது இந்திய சந்தையை குறி வைத்திருக்கின்றது. ஏற்கனவே, இந்த நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

BYD seagull

இ6 (e6) மற்றும் அட்டோ3 (Atto3) ஆகிய கார் மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டும் எலெக்ட்ரிக் கார் மாடல்களாகும். இ6, என்பது எம்பிவி (MPV) ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த பிரிவின் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும்.

அடுத்த ஒன்றான அட்டோ3 ஓர் எஸ்யூவி (SUV) ரக மின்சார காராகும். இந்த இரண்டும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை இரண்டிற்கும் சொகுசு வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களை அதிகம் விரும்பும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

BYD seagull trademark

இந்த நிலையிலேயே தன்னுடைய புதிய தயாரிப்புகளை களமிறக்கும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே சீ லயன் (Sea Lion) எனும் காருக்கான டிரேட்மார்க் பதிவை அந்நிறுவனம் செய்திருந்தநிலையில், தற்போது சீகுல் (Seagull) எனும் கார் மாடலுக்கும் அது டிரேட்மார்க் பதிவை இந்தியாவில் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகையால், இந்தியாவில் சரவெடியை போல் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கார்களை பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. பிஒய்டி சீகுல் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் காம்பேக்ட் ஹேட்ச்பேக் (Compact Hatchback) ரக எலெக்ட்ரிக் காராகும்.

BYD seagull interior

இது விற்பனைக்கு வரும் எனில் தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள டாடா டியாகோ இவி (Tata Tiago EV), எம்ஜி கோமட் இவி (MG Comet EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகியவற்றிற்கு மிக சிறந்த போட்டியாளனாக மாறும்.

அந்த அளவிற்கே குறைவான விலையில் சீகுல் எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காராகவும் இது இருக்கப்போகிறது என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் ஓர் முழு சார்ஜில் 305 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 30 kWh பேட்டரி பேக்கை பிஒய்டி சீகுல்லில் வழங்க இருக்கின்றது. இது தவிர, 38 kWh பேட்டரி பேக் ஆப்ஷனும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. அது ஓர் முழு சார்ஜில் 405 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

இவற்றுடன் கார் இணைப்பு, பெரிய திரை, சொகுசான இருக்கை, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், எல்இடி லைட் மற்றும் கண்களைக் கவரும் தோற்றம் கொண்ட வீல் உள்ளிட்டவையும் சீகுல்லில் எதிர்பார்க்கப்படுகின்றது. பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை முதன் முதலில் ஷாங்காய் 2023 மோட்டார் ஷோவிலேயே காட்சிப்படுத்தியது.

இந்த வாகன கண்காட்சி கடந்த ஏப்ரல் மாதத்திலேயே நடைபெற்றது. மேலும், அப்போதே சீனாவில் அந்த கார் விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டது. அந்நாட்டு யுவான் மதிப்பில் 78 ஆயிரம் யுவான் தொடங்கி 95 ஆயிரம் யுவான் வரையில் சீகுல் எலெக்ட்ரிக் காருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அதாவது, 9 லட்ச ரூபாய் தொடங்கி 11 லட்ச ரூபாய் வரையில் சீனாவில் விற்கப்படுகின்றது. இந்தியாவில் இதற்கு நிகரான விலையில் அல்லது இதைவிட சற்று அதிக விலையில் பிஒய்டி சீகுல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் பேட்டரி பேக்கை போலவே மின்சார மோட்டார் விஷயத்திலும் இரு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. 76 பிஎச்பி மற்றும் 98 பிஎச்பி ஆகிய திறன்களை வெளியேற்றும் மோட்டார் ஆப்ஷனே வழங்கப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினசரி பயன்பாட்டிற்கு உகந்த காம்பேக்டான ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் காரே சீகுல் ஆகும். இதனால்தான் இது டூ-வீலர்களுக்கே டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உருவம் சற்று சிறியதாக இருக்கும் என்பதால் பார்க் செய்யவும் பெரிய அளவில் இட வசதி தேவைப்படாது. ஆகையால், நகர பயன்பாட்டிற்கு மிக உகந்த தயாரிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2023, 21:20 [IST]
English summary
Byd seagull electric car trademarked in india here more details about tiago ev rival
மேலும்... #பிஒய்டி #byd #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X