சீன எலக்ட்ரிக் கார்னு சொன்னா சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க!! ரேட்டிங்ஸை வாரி குவிச்சிடுச்சு!

பிஒய்டி நிறுவனத்தின் சீல் என்ற பெயர் கொண்ட எலக்ட்ரிக் செடான் கார் யூரோ என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோதல் சோதனைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போதைக்கு, இந்தியாவில் கார்கள் விற்பனையில் தீவிரமாக ஈடுப்பட விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுள் ஒன்று பிஒய்டி ஆகும். 2021இல் இ6 என்ற எலக்ட்ரிக் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிஒய்டி நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டில் அட்டோ 3 என்ற மற்றொரு எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்தது. இ6 எலக்ட்ரிக் கார் ஆரம்பத்தில் அரசாங்க மற்றும் தனியார் பயன்பாடுகளுக்காக மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

byd seal achieved 5 stars

அதாவது, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை. ஆனால், அட்டோ 3 ஆரம்பத்தில் இருந்தே பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவை இரண்டை தொடர்ந்து மேலும் சில எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவற்றுள் ஒன்றாக இருப்பது சீல் என்ற எலக்ட்ரிக் செடான் கார் ஆகும்.

இந்த எலக்ட்ரிக் காரை கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பிஒய்டி நிறுவனம் காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது, ஐரோப்பிய என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் பிஒய்டி சீல் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. சீன நிறுவனமான பிஒய்டி உருவாக்கிய இந்த எலக்ட்ரிக் காருக்கு யூரோ என்சிஏபி முழு 5 ஸ்டார்களை வழங்கி சிறப்பித்துள்ளது.

byd seal achieved 5 stars

பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவரது பாதுகாப்பிலும் முழு 5 நட்சத்திரங்களை பிஒய்டி சீல் கார் பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் முழு 5 ஸ்டார்களை பெறுவது என்பது சற்று கடினமான விஷயம் தான். இந்திய கார் நிறுவனங்களுக்கு அது கனவாக உள்ளது. டாடா, மஹிந்திரா போன்ற சில இந்திய கார் நிறுவனங்கள் மட்டுமே அந்த கனவை நினைவாக்கி உள்ளன.

இருப்பினும், குழந்தைகள் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களை பெறுவது என்பது மிக மிக கடினமான விஷயம் ஆகும். உலகளவிலேயே மிகவும் சில கார்கள் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. அதில் ஒன்றாக பிஒய்டி சீல் இணைந்துள்ளது. யூரோ என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் காரின் நான்கு முக்கிய அம்சங்களும் சோதனை செய்யப்பட்டன.

byd seal achieved 5 stars

அவையாவன, பெரிய பயணிகளுக்கான பாதுகாப்பு, குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பு, சாலைகளை பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவிகள் உள்ளிட்டவற்றை கார் எவ்வாறு வழங்குகிறது என்பனவாகும். முன்பக்க, சைடில் மற்றும் பின்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மோதல்களில் கார் 'நல்லது' மற்றும் 'போதுமானது' என்ற மதிப்பீடுகளை பெற்றுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 100க்கு முறையே 89 மற்றும் 86 மதிப்பெண்களை இந்த கார் பெற்றுள்ளது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன தயாரிப்புகள் என்றாலே தரமற்றவை என்கிற கருத்து குறிப்பாக நம் இந்திய மக்களிடையே பரவலாக உள்ளது. ஆனால், சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கார் ஒன்று ஐரோப்பாவில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றிருப்பது ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. மேலும், சீல் காரின் இந்த மதிப்பீடு இந்தியாவில் பிஒய்டி கார் பிராண்டின் மதிப்பை மேம்படுத்தும் என்பதும் உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 20:49 [IST]
English summary
Byd seal electric car achieved full 5 stars in euro ncap here full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X