இரண்டே மாசத்துல 700 காரை விற்பனை செய்த சீன நிறுவனம்! இது வேற லெவல் வளர்ச்சி!

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பிஒய்டி இந்நிறுவனம் இந்தியாவிற்கு தன் கால் தடத்தை பதித்து. இந்தியாவிலேயே கார்கள தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் காரை அறிமுகப்படுத்தும் போதே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. பலர் இந்த நிறுவனத்தின் காரை விருப்பப்பட்டு வாங்க ஆர்வமாக இருந்தது இந்நிலையில் பிஒய்டிநிறுவனம் அட்டோ 3 காரை அறிமுகப்படுத்தியது.

பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 காரை அறிமுகப்படுத்திய நிலையில் முதல் மாதத்திலேயே இந்த காரை 2 ஆயிரம் பேர் புக் செய்தனர். இந்த அட்டோ 3 கார் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார். முதல் காராக இந்நிறுவனம் இ6 என்ற 3 வரிசை எலெக்ட்ரிக் எம்பிவி காரை அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் தான் எஸ்யூவி செக்மெண்டில் அட்டோ 3 காரை அறிமுகப்படுத்தியது.

இரண்டே மாசத்துல 700 காரை விற்பனை செய்த சீன நிறுவனம்! இது வேற லெவல் வளர்ச்சி!

அட்டோ 3 கார் மார்கெட்டில் ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட் எஸ் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் அட்டோ 3 கார் குறித்த ஒரு முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிஒய்டி நிறுவனம் கடந்த 2 மாதத்தில் மொத்தம் 700 கார்களை விற்பனை செய்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது புதிதாக வரும் ஒரு நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

பிஒய்டி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 340 அட்டோ 3 காரை டெலிவரி செய்திருந்தது. மீதம் உள்ள 360 காரை கடந்த பிப்ரவரி மாதம் டெலிவரி செய்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. பிஒய்டி நிறுவனம் இந்த அட்டோ 3 காரின் லிமிடெடட் ஸ்பெஷல் எடிசன் காரை கடந்த ஜனவரியில் நடந்த அட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் காட்டு பச்சை நிறத்திலிருந்தது. இந்த கார் ரூ34.49 லட்சம் என குறிப்பிடபட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 700 அட்டோ 3 கார்களை விற்பனை செய்த நிலையில் அந்நிறுவனத்தின் மூத்த தலைவர் சஞ்சய் கோபால கிருஷ்ணன் கூறும் போது : " நாங்கள் 2 மாதத்தில் மொத்தம் 700 கார்களை விற்பனை செய்ததில் பெருமிதம் கொள்கிறோம். வாடிக்கையாளர்களிடமிருந்து பாசிடிவ்வான ரிவியூ கிடைத்துள்ளது. மேலும் பலர் எங்கள் காரை விரும்பி தேர்வு செய்வார்கள் என நினைக்கிறோம். விரைவில் எங்கள் வாடிக்கையாளர் அளவையும் டீலர் நெட்வொர்க்கையும் விரிவடைய வைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என கூறினார்.

பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 காரை பொருத்தவரை அது எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்கெட்டில் இந்நிறுவனம் வெளியிட்டு இந்த கார் அறிமுகமான 11 மாதங்களிலேயே 2.5 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த காரை பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 23,231 கார்களை விற்பனை செய்துள்ளது.

பிஒய் டி அட்டோ 3 காரை பொருத்தவரை பிளேடு டைப் லித்தியம் அயான் பேட்டரி உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ரக பேட்டரி மற்ற இவி கார்களில் உள்ள பேட்டரியை விட அதிக திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த காரில் 60.48 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜிற்கு 480 கிலோ மீட்டர் ரேஞ்சை தரக்கூடியது, ஏஆர்ஏஐ இந்த காருக்கு 521 கி.மீ ரேஞ்ச் எனச் சான்றளித்துள்ளது.

இந்த அட்டோ 3 காரின் பேட்டரியை பொருத்தவரை 0-80 சதவீதமான பேட்டரியை 50 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிடும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடியில் பிக்கப் செய்துவிடும். மேலும் இந்த காரின் பிஒய்டி நிறுவனத்தின் டிபைலட் என்ற அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்காக இந்த காரில் 7 ஏர்பேக்குகள், பானரோமிக் சன் ரூஃப், 12.8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், என்எஃப்சி கார்டு கீ மற்றம் வெஹிகில் டூ லோடு அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, March 20, 2023, 18:30 [IST]
English summary
Byd sold 700 atto 3 cars in just two months know full details
மேலும்... #பிஒய்டி #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+