ஒரு காலத்துல செல்போன் வாயிலாக இந்தியாவ ஆண்டாங்க.. இப்ப எலெக்ட்ரிக் காரா! சிங்கத்த களமிறக்க போகுதா பிஒய்டி!!
பில்டு யூர் ட்ரீம்ஸ் (Build Your Dreams) இது ஓர் கார் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?.. நம்பிதான் ஆக வேண்டும். இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் கால் தடம் பதித்துவிட்டது. மேலும், இரண்டு கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டும் இருக்கின்றது.
பிஒய்டி (BYD) எனும் பெயரில் அறியப்படும் நிறுவனத்தைப் பற்றியே நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றோம். சீன நிறுவனமான இது இந்தியாவில் இ6 (e6) மற்றும் அட்டோ3 (Atto3 ) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டும் பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார்கள் ஆகும்.

இதில், இ6 என்பது எம்பிவி (MPV) ரக எலெக்ட்ரிக் காராகும். எர்டிகா எம்பிவி-யை அதிக இருக்கைகள் வசதியை இதுக் கொண்டிருக்கும். இந்தியாவின் முதல் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரும் இதுவே ஆகும். அட்டோ 3 ஓர் எஸ்யூவி (SUV) ரக காராகும்.
இந்த இரண்டிற்கும் சொகுசு மற்றும் பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிஒய்டி நிறுவனம் விரைவில் சீ லயன் (Sea Lion) என்கிற எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காருக்கான டிரேட்மார்க் பதிவையே (trademark) தற்போது இந்தியாவில் செய்து இருக்கின்றது. இதன் வாயிலாகவே பிஒய்டி இந்தியாவில் சீ லயன் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி உள்ளது. சீ லயன் ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-Size SUV) ரக எலெக்ட்ரிக் காராகும்.
இந்த காரை அதன் 3.0 பிளாட்பாரத்தில் வைத்து தயாரித்திருக்கின்றது. மேலும், அட்டோ 3 எஸ்யூவி காரை விட சற்று பெரிய உருவம் கொண்ட வாகனமாகவும் இதனை பிஒய்டி உருவாக்கி இருக்கின்றது. 315 மிமீட்டர் கூடுதல் நீளத்திலும், 35 மிமீ கூடுதல் அகலத்தையும் மற்றும் 5 மிமீ கூடுதல் உயரத்தையும் கொண்டதாக இந்த வாகனம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

பிஒய்டி நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை இந்த எலெக்ட்ரிக் காரும் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. சீ லயன் எலெக்ட்ரிக் காரில் 15.6 அங்குல தொடுதிரை மற்றும் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீலும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்பை படங்களும் இந்த அம்சங்கள் சீ லயன் மிட்-செஸ் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருப்பதை உறுதி செய்கின்றன. மின்சார மோட்டாரை பொருத்த வரை இந்த எலெக்ட்ரிக் 204 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், ஓர் முழு சார்ஜில் 700 கிமீ ரேஞ்ஜை தரக் கூடிய பேட்டரி பேக்கும் சீ லயன் எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் எலெக்ட்ரிக் மிக அதிக சிறப்பு வதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காருக்கு மேல் இடத்திலேயே சீ லயன் இருக்கும். எனவே விலையும் அட்டோ3யைக் காட்டிலும் சற்று அதிகம் கொண்டதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காட்டுக்கு சிங்கம் அரசன் என்பதை போல மின்சார வாகன உலகின் கிங் என்பதை வெளிக்காட்டும் விதமாக சீ லயன் எனும் பெயர் அக்காருக்கு சூட்டப்பட்டு இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் பலவற்றில் டெஸ்லாவின் இ-கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









