இந்த சீன எலக்ட்ரிக் கார் மட்டும் இந்தியா வந்துச்சுனா டாடாவுக்கு கையும் ஓடாது... காலும் ஓடாது!!

பிஒய்டி (BYD) நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாகவே இணையத்தில் லீக் ஆகியுள்ளன. அதன் மூலம் இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்த சில விபரங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தியாவில் இந்த பிஒய்டி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதா? வாருங்கள் அதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் அதிகம் விற்பனையாகும் நாடாக சீனா விளங்குகிறது. இந்தியாவுக்கு இணையான மக்கள் தொகை சீனாவிலும் இருப்பது மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பழக்கம் சீன மக்களிடையே எப்போதோ துவங்கிவிட்டது. சீனாவில் நிறைய எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன.

byd yuan up electric car

அவ்வாறான ஒரு எலக்ட்ரிக் காராக பிஒய்டி யுவான் யுபி விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்குள் இந்த காம்பெக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்படும். அதாவது, படங்களுடன் காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். ஆனால், கார் அங்கு விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இந்த நிலையில், புதிய பிஒய்டி யுவான் யுபி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அத்துடன், காரை பற்றிய சில விபரங்களும் கசிந்துள்ளன. கசிந்துள்ளன என சொல்வதை விட வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளன என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்தியா, சீனா மட்டுமின்றி எந்தவொரு நாட்டிலும் கார் ஒன்றை விற்பனை செய்ய வேண்டுமெனில், அதுகுறித்து முறையான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து பெற வேண்டும்.

byd yuan up electric car

இந்தியாவில் இந்த பணிகளை ஆட்டோமோட்டிவ் ரீசேர்ச் அசோசியோஷன் இந்தியா (ARAI) பார்த்துக் கொள்கிறது. ஆனால், சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சம் (MIIT) அனுமதி வழங்க வேண்டும். இந்தியாவில் ARAI-யிடம் கார் நிறுவனங்கள் காரை பற்றிய விபரங்களை வழங்குகின்றன. கார் முழுமையாக ஆய்வு செய்து பார்க்கப்பட்ட பின் அதன் விபரங்களை ARAI அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

அதுவே, சீனாவில் MIIT-யிடம் விபரங்கள் மட்டுமின்றி, காரின் படங்களையும் கார் நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த படங்களையும் MIIT இணையத்தில் வெளியிடுகிறது. அவ்வாறே நமக்கு இப்போது பிஒய்டி யுவான் யுபி காரின் படங்கள் கார் வெளியீடு செய்யப்படுவதற்கு முன்பாகவே கிடைத்துள்ளன. தற்போது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, பிஒய்டி யுவான் யுபி ஆனது 5 இருக்கைகளை கொண்ட கார் ஆகும்.

byd yuan up electric car

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 4,310மிமீ, அகலம் 1,830மிமீ மற்றும் உயரம் 1,675மிமீ ஆகும். காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,620மிமீ. 70 கிலோவாட்ஸ், 130 கிலோவாட்ஸ் என 2 விதமான மோட்டார் ஆப்ஷன்கள் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட உள்ளன. அதாவது இரு விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில் ஒரு வேரியண்ட்டின் எடை 1,430 கிலோ ஆகவும், மற்றொன்றின் எடை 1,540 கிலோ ஆகும். இவ்வளவு எடைமிக்கதாக இருப்பினும், இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 160kmph டாப்-ஸ்பீடில் செல்லும். இந்த எலக்ட்ரிக் காரில் பனோராமிக் சன்ரூஃப் மற்றும் பின்பக்கத்தில் ஸ்பாய்லர் உள்ளது. 16-இன்ச் மற்றும் 17-இன்ச் என 2 விதமான ஆப்ஷன்களில் இந்த காரில் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னரே அரசாங்கமே காரின் படங்களை வெளியிடுகிறது என்றால், சீன அரசாங்கம் எந்த அளவிற்கு கண்டிப்புடன் உள்ளது என்பதை பாருங்கள். ஆனால், பொருளாதார ரீதியாக இத்தகைய செயல்கள் கார் நிறுவனத்தின் வருவாயை குறைக்கலாம். ஏனெனில், காரின் படங்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிடுவதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைந்து போய்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 12, 2023, 15:07 [IST]
English summary
Byd yuan up electric car images leaked before unveil check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X