நடிகர், நடிகைகளோட காரைபோல நம்முடைய காரையும் ரொம்ப நாளைக்கு புதுசுபோல வச்சுக்க முடியும்.. எப்படி?

வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களுடைய வாகனங்களின் புதிய தன்மையை பாதுகாப்பதை மிகப் பெரிய டாஸ்க்காக கருதுகின்றனர். கார் பெயிண்டை பாதுகாப்பதற்கு சில வழிகள் நடைமுறையில் இருக்கின்றன. அதை கடைபிடித்தாலே உங்கள் காரின் புதிய தன்மையை அப்படியே பல வருஷங்களுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். அப்படி என்ன வழிகள் (டிப்ஸ்) அவைனு தானே கேக்குறீங்க?, இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார் வாங்கும்போது இருக்கும் பளபளக்கும் புதிய தன்மை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றால் அதை யாருதான் விரும்ப மாட்டாங்க. ஆனால், அதை நீட்டிக்க செய்ய சில வேலைகளை நாம் செய்ய வேண்டி இருக்கும். இதை பொருத்தே காரின் புதிய தன்மை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

Car paint

இதை வைத்தே உங்கள் காரின் தரம் மற்றும் மதிப்பு ஆகியவை நிர்ணயம் செய்யப்படும். எனவேதான் காரின் உட்புறத்தைப் போலவே வெளிப்புறத்திற்கும் அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, பெயிண்ட் பூச்சைக் கவனிப்பதில் அதிக கவனம் தேவை. அதற்கான சில வழிகாட்டுதல்கள் இதோ.

Car wash

காரை அடிக்கடி கழுவவும்: காரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, சுத்தமான நீரில் உங்கள் காரை கழுவுவதை வாடிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிகம் உப்பு உள்ள நீரில் வாகனங்களைக் கழுவ வேண்டாம். இது உங்கள் காரின் உட்பக்கத்தில் உள்ள பாகங்களை பாதிக்கச் செய்துவிடும். அதேவேளையில், காரை கழுவ தரமற்ற ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம்.

சற்று பிரீமியம் தர கார் வாஷ் சோப்பு கிரீம்களை பயன்படுத்தலாம். இதேபோல், சுத்தமான மைக்ரோஃபைபர் துணியை வாகனங்களை கழுவும்போது பயன்படுத்தலாம். இதன் வாயிலாக காரை கழுவும்போது ஏற்படும் சிறு சிறு கீரல்களை தவிர்த்துவிட முடியும். இதேபோல், கார்கள் மீது படிந்திருக்கும், தூசி, மண் துகல்களையும் அடிக்கடி கழுவுவதன் வாயிலாக சுலபமாக போக்க முடியும். நீண்ட நாட்களாக காரை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் அந்த கரைகள் படிந்து, நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும். இதை அவ்வப்போது சுத்தம் செய்வதன் வாயிலாக தவிர்த்துவிட முடியும்.

Car wax

வேக்ஸ் செய்யலாம்: காரை கழுவி முடித்த பின்னர் வெளிப்புறத்தை வேக்ஸ் செய்யலாம். இதன் வாயிலாக அடுத்தடுத்து என பலமாதங்களுக்கு தூசி, மண் துகள்கள் மற்றும் பிறவற்றால் ஏற்படும் சிறிய கீரல்களை தவிர்த்துவிட முடியும். மிக சிறந்த வேக்ஸ்கள் சில மிகப் பெரிய கீரல்களில் இருந்தும் கார்களை பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வேக்ஸை குறிப்பிட்ட மாத இடைவெளியில் அடிக்கடி செய்வதனால் காரின் புதிய தன்மையை பல ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும்.

Sunlight

நேரடியாக சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: சூரிய ஒளி காரின் புதிய தன்மைக்கு மிக பெரிய எதிரியாகும். தொடர்ச்சியாக வெட்ட வெளியில் வெயில்படும்படி காரை நிறுத்தினால் ஒரு சில மாதங்களிலேயே அதனால் ஏற்படும் பாதிப்புகளை நம்மால் உணர முடியும். நிறம் மங்கி, அந்த கார் பழையதைப் போன்று காட்சியளிக்கும். ஆகையால், நேரடியாக சூரிய ஒளி படும்படி கார்களை நிறுத்தக் கூடாது. முறையான பார்க்கிங் அல்லது கார் கவரைக் கொண்டு போர்த்தி அதை நிறுத்தலாம். காரை நேரடியாக வெயிலில் நிறுத்துவதனால் அந்த வாகனத்தின் கேபின் மைக்ரோஓவனைப் போல் சூடானதாக மாறிவிடும். ஆகையால், உடனே பயணிப்பது இயலாததாக இருக்கும். எனவே நிழலில் காரை நிறுத்துவதே மிக சிறந்த யுக்தியாகும்.

Ceramic coating

செராமிக் கோட்டிங்: இது ஓர் பெயிண்ட் சீலண்ட் ஆகும். வேக்ஸ்க்கு மாற்றாக இது சந்தையில் உள்ளது. மிக கடுமையான தாக்கங்களைக்கூட தாங்கக் கூடியதாக செராமிக் கோட்டிங் இருக்கின்றது. வேக்ஸைக் காட்டிலும் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாக செராமிக் கோட்டிங் இருக்கின்றது. எனவேதான் இதற்காகும் செலவும் சற்று அதிகமாக இருக்கின்றது. மிக சிறந்த செராமிக் கோட்டிங்கை ஒரு முறை பயன்படுத்தினால் வருஷக் கணக்கில் கார் பெயிண்டைப் பற்றி கவலைப்படவே வேண்டியதில்லை.

Paint protection

பெயிண்ட் புரடெக்சன் ஃபிலிம்: செல்போன் டெம்பர் கிளாஸைப் போல் கார் பெயிண்ட் புரடெக்சன் ஃபிலிம், கார் பெயிண்டை பாதுகாக்கும் விதமாக சந்தையில் கிடைக்கின்றது. இதை காரின் மேற்பரப்பில் ஒட்டுவதன் வாயிலாக பெயிண்ட் பல ஆண்டுகளுக்கு புதிதுபோல் இருக்கும். நேரடியாக சூரிய ஒளியில் நிறுத்தினாலும் பெயிண்டில் பிரச்னை ஏற்படாது. மேலும், தூசி மற்றும் மண் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் இதனால் தவிர்த்துவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை புதிதுபோல் வைத்திருப்பதனால் அதன் மதிப்பு பலமடங்கு கூடும். அதோட மதிப்பு மட்டுமில்லைங்க, நம் மீது பிறருக்கு இருக்கும் பார்வையும் மாறும். ஆகையால், காரை புதிதுபோல் வைத்திருக்க நாம் செய்யும் வேலைகள் பல வழிகளில் நமக்கு பலனை அளிக்கும். குறிப்பாக, செகண்ட் ஹேண்டில் விற்கப்படும்போது பிற கார்களைக் காட்டிலும் அதிக லாபத்தை அது ஈட்டி தரும்.

Article Published On: Tuesday, May 2, 2023, 17:59 [IST]
English summary
Car paint care tips in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X