எதிருல யாருனா வந்தா தானாவே பிரேக் பிடிக்கும் கார்களின் லிஸ்ட் இதோ.. 20லட்ச ரூபாக்கே இந்த வசதியை கொடுக்கறாங்களா

இந்தியர்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் தொழில்நுட்ப வசதிகளில் அடாஸ் (ADAS) அம்சமும் ஒன்றாகும். அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன் சிஸ்டம் (Advanced Driver Assistance System) என்பதன் சுருக்கமே அடாஸ் ஆகும். இந்த அம்சம் கொண்டிருக்கும் கார்கள் அவ்வளவு சீக்கிரத்தில் வாகன விபத்தில் சிக்கி விடாது. இதேபோல், யார் மீதும் மோதிவிடாது.

இதற்கான அமைப்புகளைக் கொண்டதே அடாஸ் ஆகும். கார்கள் குறுக்கே வந்தாலும் சரி, பாதசாரிகள் குறுக்கே வந்தாலும் சரி இந்த அம்சம் கொண்ட கார் தானாகவே பிரேக் பிடித்து நின்றுவிடும். இத்தகைய பாதுகாப்பை வழங்குகின்ற ஒரே காரணத்தினால்தான்தான் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக கார்களில் அடாஸை தவறாமல் வழங்குவிடுகின்றனர்.

Cars with adas

டாடா மோட்டார்ஸ்கூட தன்னுடைய சமீபத்திய வருகையான ஃபேஸ்லிஃப்ட் ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார் மாடல்களில் அடாஸ் அம்சத்தை வழங்கியது. ஆனால், இந்த அம்சம் கொண்ட ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான விலையைக் கொண்டவையாக இருக்கின்றன.

இத்தகைய அதிக விலையைக் கொடுத்தால் மட்டுமே அடாஸ் அம்சம் கொண்ட காரை வாங்க முடியும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதைவிட விலை குறைவான, அதாவது, ரூ. 20 லட்சத்திற்கும் கம்மியான விலைக் கொண்ட கார் மாடல்களிலும் வாகன உற்பத்தியாளர்கள் அடாஸ் அம்சத்தை வழங்குகின்றனர். அந்த கார் மாடல்கள் எவை என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Honda city sensing

எம்ஜி ஆஸ்டர் (MG Astor): லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பமே அஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த வகுப்பில் அடாஸ் அம்சத்தை முதல் இந்திய கார் மாடல் ஆகும். இதனாலேயே இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 10.82 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் லெவல்2 வகை அடாஸ் அம்சத்தின் வாயிலாக லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீவ் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், ஃபார்வார்டு கொலிசன் பிரிவென்சன், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் தானாக பிரேக் வசதி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Hyundai venue n line adas

ஹோண்டா சிட்டி (Honda City): சிட்டி இ:எச்இவி மாடலிலேயே அடாஸ் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சம் மட்டுமில்லைங்க ஹைபிரிட் டெக்னாலஜியையும் இந்த காரில் ஹோண்டா பயன்படுத்தி இருக்கின்றது. ஆகையால், அதிக மைலேஜை இந்த கார் மிக தாராளமாக வழங்கும். தானாக பிரேக் பிடித்தல் தொடங்கி பிளைண்ட ஸ்பாட்டிற்கு ஏற்ப வழிக்காட்டுதல் வரை என பல வேலைகளை இதன் அடாஸ் அம்சம் செய்யும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ.11.63லட்சம் ஆகும்.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய தலைமுறை வெர்னா காரில் அடாஸ் அம்சத்தை வழங்குகின்றது. இந்த கார் மாடலிலும் உயர்நிலை தேர்வில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 10.96 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அடாஸ் அம்சத்தின் வாயிலாக ஃபார்வார்டு கொலிசன் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ரியர் கிராஸ் அசிஸ்ட், வாகனங்கள் முந்தி செல்வது குறித்த எச்சரிக்கையை வழங்குதல், ஹை பீம் அசிஸ்ட், பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிக்காட்டுதலை வழங்கும் வசதி, டிரைவர் கண்கானிக்கும் அம்சம் மற்றும் அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஹோண்டா எலிவேட் (Honda Elevate): ஹோண்டா நிறுவனம் நீண்ட காலம் கழித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் எஸ்யூவி ரக கார் மாடலாக எலிவேட் இருக்கின்றது. இது ஓர் மிட் சைஸ் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தகுந்தது. இதிலேயே நிறுவனம் அடாஸ் அம்சத்தை வழங்கி இருக்கின்றது. இந்த கார் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கியா செல்டோஸ் (Kia Seltos): கியா நிறுவனம் சமீபத்தில் இந்த செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. புதுப்பித்தலின்கீழ் பன்முக புதிய அம்சங்கள் வழங்கியதோடு அது அடாஸ் போன்ற அதி நவீன அம்சத்தையும் இந்த காரில் வழங்கியது. ரூ. 10.90 லட்சம் தொடங்கி ரூ. 20.30 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்கப்படுகின்றது.

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அடாஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஃப்ரண்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கொலிசன் வார்னிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் ரியர் கிராஸ் அலர்டு என ஏகப்பட்ட வசதிகளை அது வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடாஸ் அம்சம் அதிக பாதுகாப்பை வழங்கக் கூடிய ஓர் அம்சமாக இருக்கின்றது. இதனால்தான் இந்த அம்சத்தை கார் உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய கார்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதிக விலைக் கொண்ட தேர்வுகளில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. விரைவில் மலிவு விலை கார் மாடல்களிலும் அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 29, 2023, 14:17 [IST]
English summary
Car s with adas feature under rs 20 lakh in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X