மாருதி சுஸுகியின் ஃபார்முலாவை பின்பற்றும் டொயோட்டா!! கார்கள் விற்பனையில் கை மேல் பலன் கிடைச்சுருக்கு!

கார்கள் விற்பனை ஆனது ஒவ்வொரு மாதமும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2023 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

வழக்கம்போல் கடந்த மே மாதத்திலும் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மொத்தம் 1,43,708 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டின் மே மாதத்தில் 1,24,474 கார்கள் மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

car sales 2023 may - top 10 brands

இந்த வகையில் பார்த்தோமேயானால், மாருதி சுஸுகி கார்களின் விற்பனை ஆனது 2022 மே மாதத்தை காட்டிலும் கடந்த மே மாதத்தில் 15.45% அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையான மொத்த கார்களில் 42.83% மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். மாருதி சுஸுகிக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் 2வது இடத்தில் உள்ளது.

மாருதி சுஸுகிக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடிப்பதில் ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த மாத விற்பனையில் ஹூண்டாய் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் கடந்த மாதத்தில் மொத்தம் 48,601 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 42,293 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2022 மே மாதத்தை விட 14.91% அதிகம்.

car sales 2023 may - top 10 brands

3ஆம் இடத்தில் டாடா மோட்டார்ஸ் 45,878 கார்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் 2022 மே மாதத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸை விட அதிகமாக 43,341 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது கடந்த ஆண்டு மே மாதத்தில் மாருதி சுஸுகிக்கு அடுத்து டாடா மோட்டார்ஸ் இருந்தது. 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் டாடா கார்கள் விற்பனையும் 5.85% அதிகரித்துள்ளது.

32,886 கார்கள் விற்பனை உடன் மஹிந்திரா இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. அதுவே 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 26,904 ஆகும். மஹிந்திராவுக்கு அடுத்து வழக்கமாக 5வது இடத்தை மற்றொரு தென்கொரிய கார் நிறுவனமான கியா தான் பெறும். ஆனால் கடந்த மே மாத விற்பனையில் ஜப்பானிய நிறுவனமும், மாருதி சுஸுகியின் கூட்டு நிறுவனமுமான டொயோட்டா உள்ளது.

car sales 2023 may - top 10 brands

2022 மே மாதத்தில் வெறும் 10,216 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த டொயோட்டா, கடந்த மாதத்தில் மொத்தம் 20,410 கார்களை விற்றுள்ளது. 99.78% என்ற அதிகப்படியான வளர்ச்சிக்கு டொயோட்டாவின் சமீபத்திய அறிமுகங்களான இன்னோவா ஹைகிராஸ் & ஹைரைடர் கார்களை தான் முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். 6வது இடத்தில் கியா 18,766 கார்கள் விற்பனை உடன் உள்ளது. அதற்கடுத்த 4 இடங்களில் எம்ஜி மோட்டார், ஹோண்டா, ரெனால்ட் & ஸ்கோடா ஆட்டோ உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் கார்கள் விற்பனையில் டாப் பிராண்ட்கள் அனைத்தின் விற்பனையும் 2022 மே மாதத்தை விட கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளது. இதில் மாருதி சுஸுகி தான் முன்னிலை வகிக்கக்கூடியது என்பது நமக்கு தெரிந்த விஷயமே. ஆனால், நம் அனைவருக்கும் ஆச்சிரியமளிக்கும் விதமாக டொயோட்டா கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 11:47 [IST]
English summary
Car sales 2023 may top 10 brands
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X