இந்தியாவை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க!! ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்கு செல்லும் கார்கள் - ஆகஸ்ட் மாத ரிப்போர்ட்

உலகளவில் இந்தியா மிக பெரிய வாகன உற்பத்தி மையமாக விளங்குகிறது. இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய முடியாவிடினும், வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்காக பல்வேறு எண்ணிக்கையிலான வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் 10 கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

இந்த வரிசையில் முதலிடத்தில் மாருதி சுஸுகியின் பலேனோ ஹேட்ச்பேக் கார் உள்ளது. இந்தியாவில் அதிகளவில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் முதல் 10 கார்களில் 6-7 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாகவே இருக்கும்.

car exports in india 2023 august

மாருதி சுஸுகியின் தயாரிப்பு முதலிடத்தை பிடிக்காமல் இருந்த ஒரே லிஸ்ட் இது மட்டுமே. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காராக பலேனோ முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மாருதி சுஸுகியால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 5,947 ஆகும்.

அதுவே 2022 ஆகஸ்ட்டில் வெறும் 2,855 பலேனோ கார்களை மட்டுமே மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, பலேனோ கார்களின் ஏற்றுமதி டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. பலேனோவுக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் வெர்னா உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு மொத்தம் 5,403 வெர்னா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

car exports in india 2023 august

வெர்னா கார்களின் ஏற்றுமதியும் 2022 ஆகஸ்ட்டை விட கடந்த ஆகஸ்ட்டில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்திலும் ஹூண்டாய் மோட்டார்ஸின் காராக கிராண்ட் ஐ10 உள்ளது. இந்தியாவின் மலிவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான கிராண்ட் ஐ10 கடந்த ஆகஸ்ட்டில் மொத்தம் 4,421 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதுவே, 2022 ஆகஸ்ட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்களின் எண்ணிக்கை 2,896 ஆகும்.

4வது இடத்தில் கியா சொனெட் 4,421 யூனிட்கள் ஏற்றுமதி உடன் உள்ளது. 2022 ஆகஸ்ட்டை காட்டிலும், கடந்த ஆகஸ்ட்டில் 1,159 சொனெட் கார்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. 5வது இடத்தில் மாருதி சுஸுகி டிசைர் காரும், 6வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் உள்ளன. செடான் கார்களான இவை இரண்டின் கடந்த மாத ஏற்றுமதி எண்ணிக்கைகள் முறையே 3,266 மற்றும் 3,194 ஆகும்.

car exports in india 2023 august

இதில் குறிப்பாக, விர்டுஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெறும் 592 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், 2022 ஆகஸ்ட்டில் வெறும் 286 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் கடந்த ஆகஸ்ட்டில் 3,027 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் இவை இரண்டும் கடந்த சில வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் புதிய கார்கள் ஆகும்.

இந்த லிஸ்ட்டில் 8வது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா செடான் கார் உள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட அவ்ரா கார்களின் எண்ணிக்கை 3,023 ஆகும். இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களான 9 மற்றும் 10இல் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளன. இதில் ஃப்ரான்க்ஸ் 2,416 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. 10வது இடத்தில் உள்ள ஸ்விஃப்ட் கார்கள் 2,392 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் என்று பார்த்தால், நிஸான் சன்னி போன்ற இந்தியாவில் விற்பனையில் இல்லாத கார்களும், உள்நாட்டில் மிகவும் குறைவாக விற்பனையாகக்கூடிய கார்களாகவே இருக்கும். ஆனால் தற்போது, உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களே வெளிநாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 27, 2023, 11:23 [IST]
English summary
Cars exports in india 2023 august report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X