2023க்கே பெருமை சேர்த்த கார் மாடல்கள்.. இரும்பு பெட்டகத்தைவிட மோசமான பாதுகாப்பை இந்த கார்கள் வழங்கும்!

இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள் குளோபல் என்சிஏபி வாயிலாகவே கண்டறியப்பட்டு வந்தன. அதாவது, குளோபல் என்சிஏபி-யே இந்தியாவில் விற்கப்படும் கார்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு தரத்தை வெளியிட்டு வந்தது. இந்த நிலையிலேயே, மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல, இந்த மோதல் ஆய்விற்கும் இந்தியா இந்தியாவை நம்பி இருக்க வேண்டும் என்கிற நோக்கில் பாரத் என்சிஏபி (Bharat NCAP)-யை தொடங்கியது.

தற்போது இதன் வாயிலாக கார்களும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தும் பணிகளும் தொடங்கிவிட்டன. முதல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இன் கார் மாடல்களே இதன் வாயிலாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சஃபாரி (Safari) மற்றும் ஹாரியர் (Harrier) ஆகியவையே பாரத் என்சிஏபி வாயிலாக கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டன.

Tata safari

பலநிலைகளில் மிகவும் கடுமையாக அதன் தரம் குறித்து செக் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அனைத்து சோதனைகளிலும் சஃபாரி மற்றும் ஹாரியர் மிக சிறப்பாக செயல்பட்டு ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை அவை தட்டிச் சென்றன. ஆகையால், பாரத் என்சிஏபியிடம் முதல் முறையாக ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை பெற்ற கார் மாடல்களாகவும் டாடாவின் தயாரிப்புகள் மாறி இருக்கின்றன.

இந்த கார்களைப் போலவே இன்னும் பல கார் மாடல்கள் நடப்பு 2023 ஆண்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், பாரத் என்சிஏபி அல்லாமல் குளோபல் என்சிஏபி வாயிலாக 2023 ஆம் ஆண்டில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Skoda slavia volkswagen virtus

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus): இது ஓர் செடான் வகை கார் மாடல் ஆகும். இந்த காரை கடந்த ஏப்ரல் மாதத்தில் குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. மிகக் கடுமையான தரநிலைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் இந்த செடான் ரக கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பிலும் இத்தகைய ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது.

நடப்பாண்டில் குளோபல் என்சிஏபியில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட முதல் செடான் கார் இதுவாகும். இந்த செடான் உடன் சேர்த்து ஸ்கோடா ஸ்லேவியாவும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றது. இந்த கார் ரூ. 11.48 லட்சம் தொடங்கி ரூ. 19.29 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Hyundai verna

ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia): ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் உடன் சேர்த்து முதல் செட்-ஆக குளோபல் என்சிஏபி ஸ்கோடா ஸ்லேவியாவையும் சோதனைக்கு உட்படுத்தியதாக நாங்கள் கூறி இருந்தோம். இந்த இரண்டு கார் மாடல்களும் கூட்டணியின்கீழ் தயாரிக்கப்படுபவை ஆகும். இதனாலேயே ஃபோக்ஸ்வேகன் விர்சுஸைப் போல ஸ்கோடா ஸ்லேவியாவும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்து இருக்கின்றது.

இந்த கார்களில் பாதுகாப்பு வசதிக்காக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பெடஸ்ட்ரியன் புரடெக்சன், சைடு இம்பேக்ட் போல் புரடெக்சன், சீட் பெல்ட் வார்னிங், 6ஏர்-பேக்குகள், சைல்டு லாக், ஐசோஃபிக்ஸ் சைல்டு ஆங்கர், ஓவர்ஸ்பீடு வார்னிங், ஸ்பீடு அதிகரித்த உடன் தானே லாக் ஆகும் டோர்கள், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், ரியர் வியூ கேமிரா, பிரேக் டிஸ்க் வைப்பிங் வசதி, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வகன் விர்சுஸைத் தொடர்ந்து குளோபல் என்சிஏபி சோதனைச் செய்த இந்தியாவிற்கான மற்றுமொரு செடான் ரக கார் மாடலாக ஹூண்டாய் வெர்னா இருக்கின்றது. இதுவும் பாதுகாப்பு விஷயத்தில் 5க்கு ஐந்து ஸ்டார்களையே பெற்றிருக்கின்றது. மேலும், இந்த காரும் மேட்-இன் இந்தியா தயாரிப்பாகும்.

ஆகையால், சர்வதேச கார் சந்தையில் இந்தியாவிற்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்ததில் இந்த காருக்கும் பங்கு உண்டு. இந்தியாவில் வெர்னாவின் புதிய தலைமுறை இந்த ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் அதீத பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஐசோஃபிக்ஸ் மவுண்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் அம்சங்கள் ஆகும். அதாவது வெர்னாவின் அனைத்து வேரியண்டுகளிலும் இந்த பாதுகாப்பு அம்சத்தைப் பார்க்க முடியும். இதுமாதிரியான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்றன காரணத்தினாலேயே அது பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் 5 நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது.

டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் (Tata Safari and Harrier): ஏற்கனவே கூறியதைப் போல இந்த கார்கள் பாரத் என்சிஏபி-யிடம் இருந்து ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. பாரத் என்சிஏபி-யிடமிருந்து மட்டுமில்லைங்க குளோபல் என்சிஏபி-யிடமிருந்தும் இந்த கார்கள் இந்த இரண்டு கார்களும் அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றன.

இந்த காரிலும் பாதுகாப்பிற்காக ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் சேஃப்டி கன்ட்ரோல் ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் பாயிண்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பை வாரி வழங்கும் கார் மாடல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. மிக முக்கியமாக டாடா மற்றும் மஹிந்திரா இந்த நிறுவனங்களும் இந்தியர்களுக்கான பாதுகாப்பான கார்களை அறிமுகம் செய்வதில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 11:24 [IST]
English summary
Cars for india that got 5 star safety rating from gncap in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X