2023ல் அடாஸ் அம்சத்துடன் அறிமுகமான கார்களின் லிஸ்ட்! இந்த அம்சம்தாங்க ராஜாக்களுக்கு இணையான பாதுகாப்பை வழங்கும்

நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அடாஸ் (Advanced Driver Assistance Systems) இருக்கின்றது. காரில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதில் இந்த அம்சம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அம்சத்தை தங்களின் புதுமுக கார்களில் தவறாமல் வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

இந்த அம்சம் இருக்கும் கார் தானாக லேனைக் கடைப்பிடிக்கும். அந்த கோட்டைத் தாண்டி அது செல்லாது. அத்தோடு, குறுக்கே வாகனம் அல்லது வேறு யாரேனும் வந்தால் தானாகவே அது பிரேக் பிடிக்கும். இதுபோன்று ஏகப்பட்ட பாதுகாப்பு வசதியை இந்த ஒரு அம்சம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Hyundai verna

ஆகையால், ராஜாக்களுக்கான இணையான பாதுகாப்பு இந்த காரில் பயணிக்கும்போது நமக்குக் கிடைக்கும். இத்தகைய அம்சங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector/Hector Plus Facelifts): நடப்பு 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அடாஸ் அம்சத்துடன் விற்பனைக்கு வந்த கார் மாடல்களில் இவைகளும் அடங்கும். இவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன்கள் ஆகும். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இரட்டிப்பாக்கும் விதமாக இந்த அம்சத்தை எம்ஜி இந்த கார்களில் வழங்கி இருக்கின்றது.

Mg hector

இரண்டு கார் மாடல்களிலும் உயர்நிலை தேர்வுகளில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. சேவி எனும் ட்ரிம்மிலேயே அந்த அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிராஃபிக் ஜாம் அலர்ட் மற்றும் அவசர கால பிரேக்கிங் ஆகியவற்றை இந்த அம்சத்தின் (அடாஸ்) வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் (Honda City Facelift): நடப்பாண்டின் மார்ச் மாதத்திலேயே இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதில் ஹைபிரிட் மற்றும் அடாஸ் என ஏகப்பட்ட அம்சங்களை அது அறிமுகப்படுத்தியது. புதிய ஹோண்டா ரூ. 18 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

Honda elevate

இந்த விலையை அதிக விலைக்கு அதன் ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் பிரீமியம் அம்சங்களே முழு காரணமாக இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக ஃபார்வார்டு கொலிசன் அவாய்டன்ஸ், லேன் கீப் அசிஸ்ட், கார் டிபார்ச்சர் அலர்டு ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் அதன் வெர்னா கார் மாடலின் ஆறாம் தலைமுறையை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாடலிலேயே அது அடாஸ் அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் அறிமுகம் நடப்பாண்டின் தொடக்கத்திலேயே அரங்கேறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஸ்எக்ஸ் (ஓ) எஸ்எக்ஸ் (ஓ) டர்போ ஆகிய வெர்ஷன்களிலேயே அடாஸ் அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த கார் மாடல் ரூ. 13.43 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இதன் அடாஸ் அம்சம் கொண்ட வேரியண்டுகள் இதை விட சில லட்சம் ரூபாய் அதிகம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

ஹோண்டா எலிவேட் (Honda Elevate): நடப்பாண்டில் ஹோண்டா இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்த இரண்டாவது அடாஸ் அம்சம் கொண்ட தயாரிப்பாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இதிலும், உயர்நிலை தேர்வான இசட்எக்ஸ் ட்ரிம்மில் மட்டுமே அடாஸ் அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக லேன் கீப் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வார்டு கொலிசன் அசிஸ்டன்ஸ் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

ஹூண்டாய் வென்யூ மற்றும் வென்யூ என்-லைன் (Hyundai Venue And Venue N Line): ஹூண்டாய் நிறுவனம் இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சென்ற ஆண்டின் இறுதியில் விற்பனைக்குக் களமிறக்கியது. இதே கார் மாடலை 2023இல் அப்டேட் செய்து அது விற்பனைக்குக் களமிறக்கியது. அப்போதே அப்டேட்டின்கீழ் நிறுவனம் அடாஸ் அம்சத்தையும் சேர்த்து அப்டேட்டாக வழங்கியது. எஸ்எக்ஸ் (ஓ) மற்றும் என்8 ஆகிய மாடல்களிலேயே அடாஸ் அம்சம் வழங்கப்படுகின்றது.

கியா செல்டோஸ் (Kia Seltos Facelift): கியா நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் கார் மாடலை நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஃபேஸ்லிஃப்டின்கீழ் இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்களை அது வழங்கியது. அந்தவகையில், அடாஸ் அம்சத்தையும் அது வழங்கியது. செல்டோஸின் ஜிடிஎக்ஸ் பிளஸ் மற்றும் எக்ஸ்லைன் ஆகிய வேரியண்டுகளிலேயே அடாஸ் அம்சம் வழங்கப்படுகின்றது.

இந்த அம்சத்தின் வாயிலாக 17 விதமான வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஃபார்வார்டு கொலிசன் வார்னிங் மற்றும் அவாய்டன்ஸ், டிரைவர் அட்டன்டிவ்னஸ் அலர்டு, ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கியா நிறுவனம் செல்டோஸில் மட்டுமல்ல அதன் ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டிலும் லெவல் 2 வகை அடாஸ் அம்ச்தை வழங்கி இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டில் இந்த காருக்கான டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் (Tata Harrier-Safari Facelifts): டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே கவர்ச்சியாக இருந்த இந்த கார் மாடல்களை ஃபேஸ்லிஃப்டின் கீழ் இன்னும் கவர்ச்சியாக ஆக்கிவிட்டது என்றே கூறலாம். அதுதவிர அதிநவீன அம்சங்கள் பலவற்றையும் இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், அடாஸ் அம்சத்தையும் டாடா வழங்கி இருக்கின்றது. அட்வென்சர் பிளஸ் ஏ எனும் தேர்விலேயே இந்த அம்சத்தை டாடா வழங்கி இருக்கின்றது. இதுதவிர காலை அசைத்தால் டெயில்கேட் திறக்கும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லைங்க இன்றைய கால இளைஞர்களையும், சொகுசு அம்ச விரும்பிகளையும் கவரும் விதமாக ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடாஸ் அம்சம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த அம்சத்தை தங்களின் புதிய தயாரிப்புகளில் அறிமுகம் செய்ய தொடங்கி இருக்கின்றன. விரைவில் மலிவு விலை கார் மாடல்களிலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 27, 2023, 23:33 [IST]
English summary
Cars launched in india in 2023 with adas
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X