இந்த கார்களை எல்லாம் ஞாபகம் இருக்கா!! வந்ததும் தெரியல... போனதும் தெரியல... ஃப்ளப்பான கார்கள்!

இந்தியா, பெரியதாக குழப்பம் இல்லாத ஆட்டோமொபைல் சந்தை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, வசதிகள் பெரியதாக இல்லையென்றாலும் பரவாயில்லை, குறைவான விலையில் தரமான பட்ஜெட் விலை கார்களை கொடுத்தாலே போதும், ஓரளவிற்கு கவனிக்கத்தக்க கார் பிராண்டாக மாறிவிடலாம். இருப்பினும் சில காரணங்களால் இந்தியர்களால் முற்றிலுமாக கண்டுக்கொள்ள படாமல் போன டாப் கார் பிராண்ட்களின் சில கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

வந்ததும் தெரியல... போனதும் தெரியல... தோல்வியுற்ற கார்கள்!!

ஃபோர்டு ஃபுஷன்

க்ராஸ்ஓவர் & எஸ்யூவி கார்களையே தற்போதைய வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் 15, 20 வருடங்களுக்கு முன்னர் நிலைமையே வேறு. அத்தகைய தவறான காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்க எஸ்யூவி கார் தான் ஃபோர்டு ஃபுஷன் ஆகும். தவறான காலக்கட்டம் என்று சொல்லிவிட முடியாது, ஃபோர்டு 2006ஆம் ஆண்டிலேயே எஸ்யூவி கார்கள் டிரெண்டை இந்தியாவில் கொண்டுவரும் முயற்சியாக களமிறக்கியதே ஃபுஷன் ஆகும்.

மஹிந்திரா நுவோ ஸ்போர்ட்

எஸ்யூவி கார்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுள் மஹிந்திராவும் ஒன்று. இருப்பினும் அளவில் சிறிய மிகவும் காம்பெக்ட்டான எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்களின் இரசனைக்கு ஏற்ப வழங்குவதில் கடந்த காலங்களில் இருந்தே மஹிந்திரா தடுமாறி கொண்டுதான் வந்துள்ளது. இதற்கு உதாரணமாக, அப்போதைய குவாண்டோ காரில் இருந்து இப்போதைய கேயூவி100 வரையில் சொல்லலாம். இதில் பிரபலமான சைலோ காரின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் வெர்சனாக கொண்டுவரப்பட்ட குவாண்டோ ஆனது சில அப்டேட்களுடன் நுவோ ஸ்போர்ட் என்ற பெயரில் களமிறக்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்தப்படி நுவோ ஸ்போர்ட் மாடலும் வெற்றியடையவில்லை.

டாடா போல்ட்

இண்டிகோ விஸ்டா காரின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்த டாடா மோட்டார்ஸ் அந்த வெற்றியை மேலும் சில கார்களின் மூலம் பெற விரும்பியதன் விளைவாக கொண்டுவரப்பட்டதே டாடா போல்ட் ஆகும். ஹேட்ச்பேக் காரான டாடா போல்ட் தரத்திலும், என்ஜினிலும் எந்த குறையையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் போல்ட் காரின் தோற்றம் வாடிக்கையாளர்களை பெரியதாக கவரவில்லை. இதன் காரணமாக விரைவாகவே போல்ட் கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட, அதன் இடத்தை பூர்த்தி செய்யும் விதமாக கொண்டுவரப்பட்டதே டியாகோ ஆகும்.

மிட்சுபிஷி செடியா

இந்தியாவில் வரவேற்பை பெற்ற மிகவும் சில மிட்சுபிஷி கார்களில் லேன்சரும் ஒன்று. இருப்பினும் லேன்சரின் விற்பனையும் ஒரு கட்டத்திற்கு மேல் குறைய துவங்கியதை அடுத்து அதன் இடத்திற்கு மிட்சுபிஷி நிறுவனம் கொண்டுவந்த மாடலே செடியா ஆகும். ஆனால் ஹோண்டா சிட்டி போன்ற இப்போது வரையில் பிரபலமாக உள்ள பிரீமியம் செடான் காருக்கு நேரெதிர் போட்டி மாடலாக விளங்கியதாலோ என்னவோ செடியாவின் வரலாறு இந்தியாவில் விரைவாகவே முடிவுக்கு வந்தது.

ரெனால்ட் கேப்சர்

பிரெஞ்சு கார் பிராண்டான ரெனால்ட் அதன் ஸ்டைலிஷான கார் பிராண்ட்களுக்கு பெயர் பெற்றது. இருப்பினும் இந்திய சந்தையை பொறுத்தவரையில் இன்னமும் ரெனால்ட் போராடி கொண்டுதான் வருகிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் கேப்சர் கார் இந்திய சந்தையிலேயே மிக பெரிய தோல்வியுற்ற மாடல் என்று சொல்லலாம். 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் கேப்சரின் க்ராஸ்ஓவர் போன்றதான டிசைன் பெரியதாக யாரையும் கவரவில்லை.

டட்சன் கோ+

நிஸான் குழுமத்தின் கீழ் இயங்கும் ஜப்பானிய கார் பிராண்டான டட்சன் இந்தியாவில் தற்சமயம் முற்றிலுமாக தனது விற்பனையை நிறுத்தி கொண்டுவிட்டது. ஆரம்பத்தில் கோ ஹேட்ச்பேக் காரின் மூலமாக இந்தியாவில் நுழைந்த டட்சன் கார் பின்னர் லாங்-வீல்பேஸ் வெர்சனாக கோ ப்ளஸ் மாடலை களமிறக்கியது. 7 இருக்கைகளுடன் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற ஹேட்ச்பேக் காராக கொண்டுவரப்பட்டாலும் கோ+ காரின் விலை நம் நாட்டினரை முற்றிலுமாக கவரவில்லை.

ஃபியட் அர்பன் க்ராஸ்

ஃபியட் நிறுவனம் அவெண்டுரா போன்ற புதுமையான தோற்றம் கொண்ட கார்கள் மூலமாக இந்தியர்களை கவர நினைத்தது. ஆனால் பூட் ஸ்பேஸ் ஓபனிங் உள்ளிட்ட பாகங்களில் சில பிரச்சனைகள் எழ ஆரம்பித்ததை அடுத்து, அதனை சரி செய்யும் விதமாக பின்பக்கத்தில் ஸ்பேர் வீல் இல்லாமல் அறிமுகப்படுத்தியதே அவெண்டுரா அர்பன் க்ராஸ் ஆகும். இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன.

More from DriveSpark

Article Published On: Monday, January 2, 2023, 11:41 [IST]
English summary
Cars that were biggest flops in indian automotive industry
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+