மஹிந்திரா கார்கள் தான் அதிகமாக இருக்கு!! இந்த வகை கார்கள் கொஞ்சம் ஸ்பெஷல் -டிரைவிங் கண்ட்ரோல் நல்லா கிடைக்கும்
இந்தியாவில் விற்பனை செய்யப்படுபவைகளில் பெரும்பாலானவை முன்சக்கர டிரைவ் கொண்ட கார்கள் ஆகும். ஏனெனில் கார்களை இவ்வாறு உருவாக்குவது தான் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எளியதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இதனை காட்டிலும், பின்சக்கர டிரைவ் கொண்ட கார்களே சிறந்த கண்ட்ரோலை வழங்குகின்றன. இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட கார்களை இனி பார்க்கலாம்.
மாருதி ஈக்கோ: மாருதி சுஸுகியின் கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் கிடைக்கும் வேனான ஈக்கோ ரூ.5.2 லட்சம் என்கிற விலையில் இருந்து கிடைக்கிறது. ஈக்கோவில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மடக்கக்கூடிய முன் இருக்கைகள், கேபின் ஏர் ஃபில்டர் உள்ளிட்டவற்றை இந்த வேனில் பெறலாம்.

எம்ஜி கோமெட்: 17.3kWh பேட்டரி தொகுப்புடன் கிடைக்கும் எம்ஜி எலக்ட்ரிக் கார். PMSM எலக்ட்ரிக் மோட்டாரை கொண்ட ஓர் ரியர்-வீல்-டிரைவ் கார். 10.25-இன்ச்சில் இரு திரைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே வசதி, கீலெஸ் எண்ட்ரீ, 55 கனெக்டட் கார் வசதிகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், ரியர் கேமரா உள்ளிட்டவை கிடைக்கும் எம்ஜி கோமெட் காரின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
மாருதி பொலேரோ நியோ: ரூ.9.6 லட்சத்தில் இருந்து விலையை கொண்ட பொலேரோ நியோவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது. அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மஹிந்திரா பொலேரோ: பொலேரோ நியோவை போல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது. ஆனால் இந்த பொலேரோவில் 75 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மஹிந்திரா பொலேரோவின் ஆரம்ப விலை ரூ.9.8 லட்சம்.
மஹிந்திரா தார்: தார் மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்பவை அவை ஆகும். ரூ.10.9 லட்சத்தில் இருந்து விலையை கொண்ட மஹிந்திரா தாரில் 7.0-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் க்ளஸ்ட்டர், ரிமோட் லாக்கிங், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி ஜிம்னி: இந்த 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய மாருதி சுஸுகி தயாரிப்பு. பின் சக்கரங்களுக்கு இயக்க ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை பெறும் ஜிம்னியின் விலைகள் ரூ.12.8 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. முக்கிய சிறப்பம்சங்களாக ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், 9.0-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை ஜிம்னியில் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்: பிரபலமான மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு உண்டான தோற்றத்தில் கிடைக்கும் ஸ்கார்பியோ கிளாசிக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.3 லட்சம் ஆகும். ஸ்கார்பியோ கிளாசிக் காரை தற்போதைக்கு 2.2 லிட்டர் டர்போ-டீசல், ஜென்2 எம்ஹாவ்க் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடிகிறது. இயக்க ஆற்றலை பின் சக்கரங்களுக்கு வழங்கும் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என்: இந்த வரிசையில் நாம் பார்க்க போகும் கடைசி மற்றும் மற்றுமொரு மஹிந்திரா கார் ஸ்கார்பியோ-என் ஆகும். 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8 லக்சரி என்கிற 5 விதமான வேரியண்ட்களில் ஸ்கார்பியோ-என் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள விலைகள் அனைத்தும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நீங்கள் சற்று கவனித்தீர்கள் என்றால், இதில் பெரும்பாலான கார்கள் மஹிந்திரா நிறுவனத்துடையது ஆகும். சிறந்த பயண அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள் இவற்றுள் ஒரு காரை வாங்கலாம்


Click it and Unblock the Notifications









