ரசிகர்கள் கணக்கெடுப்பு செய்தால் விஜய், அஜித் எல்லாம் ஒன்னுமே இல்ல! மிக பெரிய ஃபேன்கள் பட்டாளத்தை கொண்ட கார்கள்

இந்தியாவில் சினிமாக்காரர்களுக்கு மட்டுமே தீவிர ஃபேன்கள் இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். உணவு, செல்போன் மற்றும் வாகனங்களுக்கும் இந்தியாவில் மிகப் பெரிய ரசிகப் பட்டாளம் உண்டு. குறிப்பாக, வாகனங்களுக்கு இருக்கும் ரசிகர்களைப் பட்டியலிட செய்தால் மற்ற அனைத்தும் அதன் முன்னாடி தோற்று போய்விடும். அந்தளவிற்கு பலர் வாகனங்கள் மீது தீராத காதல் கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

ஏன், அதிக ரசிக பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர்களே கார் மற்றும் பைக்குகள் ஆகியவை விஷயத்தில் மிகப் பெரிய அடிமைகளாக இருக்கின்றனர். அந்தவகையில், இந்தியாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கும் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மொத்தமாக ஐந்து கார்களின் லிஸ்டை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

5 Cars with huge fan base

மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto): இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்ற கார் மாடல்களைக் காட்டிலும் இவற்றிற்கே மிக மிக பெரிய ரசிக பட்டாளம் தென்படுகின்றது. இதன் பட்ஜெட் விலை, அடக்கமான தோற்றம், மிக சிறந்த மைலேஜ் திறன் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு உள்ளிட்டவை இந்த காருக்கு தீவிர ரசிக பட்டாளத்தை நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

Maruti alto

இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 3.54 லட்சம் ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 4 லட்சத்தைத் தாண்டிவிடும். இந்த காருக்கு அதிகப்படியானோர் ஃபேன்களாக இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக, இந்த காரின் அதிகப்படியான எண்ணிக்கை இருக்கின்றது. சாலையில் பயணிக்கும்போது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தென்படுவதுபோல இந்த கார் கண்களில் தென்படும்.

Mahindra scorpio classic

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic): இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று. ஸ்கார்பியோ தற்போது இரு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இரண்டிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், பழைய ஸ்கார்பியோவை பிரதிபலிக்கும் விதமாக சந்தையில் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஸ்கார்பியோ கிளாசிக்கிற்கு சற்று ரசிகப் பட்டாளம் பெரிதாகக் காட்சியளிக்கின்றது.

இதன் முரட்டுத் தனமான தோற்றம், எந்த சாலையையும் சமாளிக்கும் திறன், பவர்ஃபுல் எஞ்ஜின் உள்ளிட்டவற்றால் இந்த காருக்கு அதிகப்படியானோர் ரசிகர்களாக மாறி இருக்கின்றனர். குறிப்பாக, வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 12.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Toyota fortuner

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டொயோட்டா கார் மாடல்களில் ஃபார்ச்சூனரும் ஒன்று. இந்த காருக்கு அரசியல் பிரமுகர்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இந்த காரின் மீது அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம். அந்தளவிற்கு மிக பெரிய அரசியல்வாதிகளின் ரசிக பட்டாளத்தை இந்த கார் கொண்டிருக்கின்றது.

நீடித்து உழைக்கும் திறன், எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் அசால்டு செய்துவிடும் சக்தி, சொகுசு வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் என பலர் இந்த காரை தேடிப் போய் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், இந்தியாவில் அதிகம் ரசிகர்களைக் கொண்ட காராக ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 32.59 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Honda city

ஹோண்டா சிட்டி (Honda City): இந்தியாவின் செடான் கார் பிரிவில் அதிக ரசிகர்களைக் கொண்ட கார் மாடலாக ஹோண்டா சிட்டி இருக்கின்றது. இதன் ஸ்போர்ட்டி தோற்றம், அதிக மைலேஜ் திறன் மற்றும் சொகுசான ரைடு அனுபவம் ஆகியவற்றிற்காக இந்த காரை இந்தியர்கள் அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் செடானாகவும் சிட்டி காட்சியளிக்கின்றது. இதற்கு ஃபேன்கள் மிக அதிகம் என்பதால் சந்தையில் இப்போதும் மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata safari

டாடா சஃபாரி (Tata Safari): பல ஆண்டுகள் கழித்து புதிய அவதாரத்தில் டாடா சஃபாரி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனை முதன் முதலில் 1998 ஆம் ஆண்டிலேயே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சஃபாரிக்குக் கிடைத்ததைப் போலவே நவீன கால சஃபாரிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த காருக்கு ரசிகர்கள் பலமடங்கு அதிகம் என்பது தெளிவாக தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து கார் மாடல்களும் இந்தியர்களின் மனதை வென்ற வாகனங்கள் என கூறலாம். இந்த கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், அவற்றை வெறும் வாகனமாக மட்டுமின்றி தங்களின் குடும்பத்தில் ஒருவராகவும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையாகும். அப்படியாக நீங்களும் உங்கள் காரை குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அதை கமென்டில் கூறவும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 12, 2023, 8:53 [IST]
English summary
Cars with a huge fan base
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X