விலை ரூ.10 லட்சத்திற்குள் தான் இருக்கு!! இப்படியொரு பாதுகாப்பு வசதி உடன் மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான கார்
இன்றைய கால மாடர்ன் கார்களில் பாதுகாப்பு விஷயத்தில் அத்தியாவசியமாக மாறிவரும் தொழிற்நுட்ப அம்சம் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) ஆகும். காரின் வேகத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பத்துடன் கார்களை உங்களால் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே வாங்க முடியும். இந்த வகையில் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாக கிடைக்கும் கார்களை இனி பார்க்கலாம்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: இந்தியாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று இந்த ஹூண்டாய் கார் ஆகும். கிராண்ட் ஐ10 நியோஸின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல் கிடைக்கிறது. இந்த மலிவான ஹுண்டாய் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் கிடைக்கும்.

டாடா பஞ்ச்: டாடா மோட்டார்ஸின் சிறிய அளவிலான மைக்ரோ எஸ்யூவி கார் பஞ்ச் ஆகும். இதன் அக்கம்ப்ளிஷ் வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் தற்போதைக்கு 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டுமே தேர்வாக கொடுக்கப்படுகிறது. பஞ்ச் காரிலும் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை பெறலாம்.
ஹூண்டாய் அவ்ரா: இந்த வரிசையில் உள்ள மற்றொரு ஹூண்டாய் கார் அவ்ரா ஆகும். செடான் ரக காரான இதன் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பத்தை பெறலாம். இந்த காரிலும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. மேலும், இந்த பெட்ரோல் என்ஜின் உடன் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் & ஏஎம்டி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டாடா அல்ட்ராஸ்: டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார். இருப்பினும், ரூ.10 லட்சத்திற்கு உள்ளாக எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட இந்த காரின் சிடி வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோலை பெறலாம். பஞ்ச் காரில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் அல்ட்ராஸிலும் வழங்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட கார்களில் இருந்து கியர்பாக்ஸ் தேர்வில் இந்த காரிலும் எந்த மாற்றமும் இல்லை. மேலும், அல்ட்ராஸின் ஐ-சிஎன்ஜி மாடலிலும் க்ரூஸ் கண்ட்ரோல் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்: விலை குறைவான மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார். ஸ்விஃப்ட்டின் இசட்.எக்ஸ்.ஐ+ வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல் கிடைக்கிறது. இந்த ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை பெறலாம்.

நிஸான் மேக்னைட்: இந்திய சந்தையில் நீண்ட வருடங்களாக போராடி வரும் நிஸான் நிறுவனத்திற்கு 2வது இன்னிங்க்ஸை ஏற்படுத்தி கொடுத்துள்ள கார் மேக்னைட் ஆகும். மேக்னைட்டின் டாப் வேரியண்ட்டான எக்ஸ்.வி பிரீமியம் வேரியண்ட்டில் மட்டுமே க்ரூஸ் கண்ட்ரோல் கிடைக்கிறது. மேக்னைட் காரை 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என 2 விதமான என்ஜின்களுள் ஒன்றில் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவை மட்டும் தான் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட கார்கள் என கூறிவிட முடியாது. ஏனெனில் ஹோண்டா அமேஸ், மாருதி சுஸுகி டிசைர், மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 போன்ற கார்களும் கிடைக்கின்றன. ஆதலால், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உடன் கார் வாங்க விரும்புபவர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப, தங்களுக்கு பிடித்த பிராண்டில் காரை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications









