இதை யூஸ் பண்ணா உசுரே போயிடும்யா! இதை விக்குறதே உடனே நிப்பாட்டுங்க! அமேசான், பிளிப்கார்ட்-க்கு நோட்டீஸ்!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கருவிகளை விற்பனை செய்யத் தடை விதிக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா குழுமத்தின் முன்னாள் சேர்மன் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவத்திற்குப் பிறகு மத்திய அரசு கார்களுக்கான பாதுகாப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கார் தயாரிப்பாளர்களுக்கு அனைத்து சீட் பெல்ட் மற்றும் அதற்கான அலாரத்தை வைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

Seat Belt Alarm Stopper Clips

இந்நிலையில் வெளிமார்கெட்டில் இப்படியாக கார்களில் உள்ள சீட் பெல்ட் அலாரத்தை சீட் பெல்ட் அணியாமலேயே நிறுத்த சில கருவிகள் விற்பனையாகி வருகிறது. முக்கியமாக சீட் பெல்ட் மாட்டும் பட்டன் சீட் பெல்ட் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவியை வாங்கும் மக்கள் கார்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாமலேயே சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தி வருகின்றனர்.

இந்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி எண் 138-ன் டி 4சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெலட்டிற்கு பதிலாக அதன் அலாரத்தை ஆஃப் செய்யும் கருவியை பொருத்தினால் அதனால் விபத்து ஏற்பட்டு காரில் பயணிப்பவர் உயிர் இழக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் அதை ஆன்லைனில் விற்பனை செய்வது குற்றமாகும்.

Seat Belt Alarm Stopper Clips

இப்படியாக சீட் பெல்ட் அணியாமல் அதன் அலாரத்தை கட் செய்யும் கருவி பயன்படுத்தி ஒருவர் வாகனம் விபத்தில் சிக்கினால் அந்த விபத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் காப்பீடு பணத்தை வழங்க மாட்டார்கள். அவர்கள் விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பு குறைபாடு உடன் நடந்து கொண்டதால் தான் விபத்து ஏற்பட்டது எனக் கூறி அந்த இன்சூரன்ஸ் கிளைமை நிறுத்தி விடுவார்கள்.

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர். மத்திய நுகர்வோர் விவகாரத்துறையினருக்கு இந்த சீட் பெல்ட் அலாரத்தை கட் செய்யும் கருவிகளை விற்பனை செய்யத் தடை விதிக்க உத்தரவிடக் கோரியிருந்தனர். அதன்படி இந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

Seat Belt Alarm Stopper Clips

தற்போது இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆன்லைன் இ-காமர்ஸ் சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப் க்ளூஸ், மீஸோ ஆகிய நிறுவனங்களுக்கு கார்களின் சீட் பெல்ட் அலாரத்தை ஸ்டாப் செய்யும் கருவிகளுக்குத் தடை விதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து இ-காமர்ஸ் தளங்களில் விற்பனையிலிருந்த 13,118 கார் சீட் பெல்ட் அலராத்தை ஆஃப் செய்யும் பொருட்கள் நீக்கப்பட்டன.இந்த பொருட்களை எல்லாம் இனி ஆன்லைன் மூலம் வாங்க முடியாத நிலைக்கு மாற்றிவிட்டனர். ஆன்லைன் நிறுவனங்களுக்கு இது குறித்து முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் இதற்கான பணியை முன்னரே துவங்கிவிட்டனர்.

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் 16 ஆயிரம் பேர் சாலை விபத்தில் சீப் பெல்ட் அணியாத காரணத்தால் இறந்துள்ளது. இதில் 8438 பேர் டிரைவராக இருந்தவர்கள். 7959 பேர் பயணிகள் சீட்டில் இருந்தவர்கள். இது போக 39,231 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 16,416 பேர் டிரைவர் சீட்டில் இருந்தவர்கள் 22,818 பேர் பயணிகள் சீட்டில் இருப்பவர்கள். இந்த விபத்தில் பெரும்பாலும் 18-45 வயதிற்குப்பட்டவர்கள் தான் இருந்துள்ளனர் என ஒரு தரவு சொல்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீட் பெல்ட் அலாரத்தை ஆஃப் செய்யும் கருவிகளுக்குத் தடை விதித்தது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். தொடர்ந்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் இப்படியான பொருட்கள் வேறு வேறு வடிவில் மார்கெட்டிற்கு வருதை தடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 12, 2023, 18:30 [IST]
English summary
Ccpa notices e commerce service provider to stop selling seat belt alarm stopper clips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X