மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..

தெற்கு ஆப்பிரிக்காவிற்காக மாருதி சுஸுகியின் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து உள்ளது. அது எந்த கார் மாடல்? என்ன விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம், மாருதி சுஸுகியின் சில கார் மாடல்களை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களை கணிசமான மாற்றங்களைச் செய்து தன்னுடைய டொயோட்டா பிராண்டின்கீழ் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், விட்டாரா பிரெஸ்ஸாவை அர்பன் க்ரூஸர் எனும் பெயரிலும், பலேனோவை கிளான்ஸா எனும் பெயரிலும் கிராண்ட் விட்டாராவை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எனும் பெயரில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டொயோட்டா விட்ஸ்

செலிரியோ ரீபேட்ஜ்

இவற்றின் வரிசையிலேயே டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகியின் செலிரியோ கார் மாடலையும் இணைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாருதி சுஸுகியின் பிராண்ட் லோகோவை நீக்கிவிட்டு டொயோட்டா அதன் பிராண்டின்கீழ், தனது லோகோவைப் பொருத்தி வெளியீடு செய்து இருக்கின்றது. தெற்கு ஆப்பிரிக்காவிலேயே இந்த காரை டொயோட்டா வெளியீடு செய்து உள்ளது. வெகு விரைவில் இந்த காரை அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இன்னும் பல கார்களை ரீபேட்ஜ் செஞ்சிருக்காங்க

இந்த காரை மட்டும் இல்லைங்க, நிறுவனம் இன்னும் பல கார்களை ரீபேட்ஜ் செய்து தெற்கு ஆப்பிரிக்காவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அந்தவகையில் பலேனோவை ஸ்டார்லெட் எனும் பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸாவை அர்பன் க்ரூஸர் எனும் பெயரிலும், எர்டிகாவை ருமியன் எனும் பெயரிலும் அந்நாட்டில் ரீபேட்ஜ் செய்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், வெகு விரைவில் இந்தியாவிலும் இன்னும் சில ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார் மாடல்களை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ரீபேட்ஜ்

சூப்பரா மைலேஜ் தரும்

அந்தவகையில், ருமியன் எம்பிவி ரக காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகியின் செலிரியோ தற்போது விட்ஸ் எனும் பெயரிலேயே தெற்கு ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக செலிரியோ இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 25 கிமீ தொடங்கி 36 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

விலை விபரம்

இத்தகைய அதிக மைலேஜ் தரும் காரையே தெற்கு ஆப்பிரிக்கர்களுக்காக விட்ஸ் எனும் பெயரில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது டொயோட்டா. தெற்கு ஆப்பிரிக்காவே இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்படும் முதல் நாடாகும். அந்நாட்டு மதிப்பில் 178,900 க்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 8.46 லட்சம் ஆகும். ரீ-பேட்ஜ் செய்யப்பட்டதன் அடிப்படையில் சில மாற்றங்களையும் இந்த காரில் டொயோட்டா செய்திருக்கின்றது.

ரீபேட்ஜ்

மோட்டார் விபரம்

டொயோட்டாவின் ஸ்பெஷல் அம்சமாக கருதப்படும் தொழில்நுட்ப வசதிகளே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், பேட்ஜ் மாற்றம் மட்டுமின்றி இன்னும் பல்வேறு மாற்றங்களை இந்த காரில் காணலாம். செலிரியோவில் பயன்படுத்தப்படும் அதே மோட்டாரே விட்ஸிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 66 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

சிறப்பம்சங்கள்

இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விட்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுதவிர, சாவியில்லாமல் நுழையும் வசதி, எஞ்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி, பவர் விண்டோ மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 7 அங்குல திரை உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சூப்பரான வசதிகளுடனேயே மாருதி சுஸுகி நிறுவனத்தின் செலிரியோ காரை டொயோட்டா நிறுவனம் விட்ஸ் பெயரில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த காரை நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற டொயோட்டா ஸ்டேட் ஆஃப் மோட்டார் இன்டஸ்ட்ரி (SOMI) நிகழ்வின் வாயிலாக டொயோட்டா தெற்கு ஆப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தியது. இன்னும் ஒரு சில தினங்களில் இதன் விற்பனை பணிகளை நிறுவனம் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. இதேபோல், இந்தியா போன்ற பிற நாடுகளிலும் அதன் விற்பனை பணிகளை நிறுவனம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: iol

Most Read Articles
English summary
Celerio rebadged for south africa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X