இதில் ஒரு காரை வாங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இருக்கு!! ஏர் பேக்குகளை வாரி வழங்குறாங்க!

கார்களில் ஏர்பேக்குகளின் பயன் மெல்ல மெல்ல கட்டாய தேவையாக மாறி வருகிறது. ஏனெனில், விபத்துகளின் போது, பயணிகளின் உயிர்களை ஏர்பேக்குகள் பெரிய அளவில் காப்பாற்றுவதாக சோதனை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை புள்ளி விபரங்களும் இதைதான் கூறுகின்றன.

இதனால்தான், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை ஆவது கட்டாயமாக வழங்க கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாகவே, விலை குறைவான கார்களில் கூட 6 ஏர்பேக்குகளை வழங்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு, இந்தியாவில் 6 ஏர்பேக்குகளுடன் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

cheapest cars with 6 airbags

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: இந்த மலிவான ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.84 லட்சத்தில் இருந்து ரூ.8.51 லட்சம் வரையில் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

cheapest cars with 6 airbags

ஹூண்டாய் எக்ஸ்டர்: ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கடந்த 2023 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோ-எஸ்யூவி காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6 இலட்சம் - ரூ.10.15 இலட்சமாக உள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கென பார்த்து, பார்த்து உருவாக்கப்பட்ட மாடர்ன் ஹூண்டாய் காரான எக்ஸ்டரில் அட்வான்ஸ்டு சேஃப்டி வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் இந்த காரில் 6 ஏர்பேக்குகளும் கொடுக்கப்படுகிறது.

cheapest cars with 6 airbags

ஹூண்டாய் அவ்ரா: 6 ஏர்பேக்குகளுடன், இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு ஹூண்டாய் கார். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் மிகவும் சில செடான் ரக கார்களுள் ஒன்றான அவ்ராவில் 6 ஏர் பேக்குகள் அதன் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன. கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் அவ்ராவிலும் வழங்கப்படுகிறது.

cheapest cars with 6 airbags

ஹூண்டாய் ஐ20 & ஐ20 என் லைன்: ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான ஐ20-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.99 லட்சம் - ரூ.11.16 லட்சமாகவும், இதன் செயல்திறன்மிக்க வெர்சனாக விளங்கும் ஐ20 என் லைனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சம் - ரூ.12.47 லட்சமாகவும் தற்சமயம் உள்ளன. ஐ20 மாடலில் சாதாரண 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், ஐ20 என் லைனில் ஆற்றல்மிக்க 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.

cheapest cars with 6 airbags

ஹூண்டாய் வென்யூ & வென்யூ என் லைன்: ஐ20 காரை போன்று, வென்யூ காரின் செயல்திறன்மிக்க வெர்சன் தான் வென்யூ என் லைன் ஆகும். வென்யூவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.89 லட்சம் - ரூ.13.48 லட்சம் வரையிலும், வென்யூ என் லைனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.08 லட்சம் - ரூ.13.90 லட்சம் வரையிலும் உள்ளன.

cheapest cars with 6 airbags

டாடா நெக்ஸான் & நெக்ஸான் இவி: ஒருவழியாக ஹூண்டாய் அல்லாத கார்கள் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸான் ரூ.8.10 லட்சம் - ரூ.15.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது. அதுவே, இதன் எலக்ட்ரிக் வெர்சனான நெக்ஸான் இவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.74 லட்சம் - ரூ.19.94 லட்சமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் மொத்தம் 9 கார்களை பார்த்துள்ளோம். ஆனால், இதில் 7 கார்கள் ஹூண்டாய் நிறுவனத்துடையது ஆகும். இதில் இருந்து கார்களில் 6 ஏர்பேக்குகளை வழங்குவது எவ்வளவு முக்கியமானது என்பதை ஹூண்டாய் தெரிந்து வைத்திருப்பதை அறிய முடிகிறது. 6 ஏர்பேக்குகளை வழங்குவதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், இதற்கேற்ப காரின் விலையை சற்று அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்பதாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 23:32 [IST]
English summary
Cheapest cars with six airbags in india check full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X