இந்த ஆண்டு பண்டிகை காலத்தை டார்கெட் செய்து வரப்போற டாப் 5 கார்கள் இது தான்!

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் கார்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். இப்படியாக விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ள 5 முக்கிய கார்களை குறித்து தான் விரிவான விபரங்களை இங்கே நாம் காணப் போகிறோம்.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பண்டிகை காலம் அதிகமாக இருக்கும் காலமாக கருதப்படுகிறது. இந்திய மக்கள் இப்படியான பண்டிகை காலங்களில் கார் வாங்குவதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். நல்ல நாள்களில் தங்கள் வீட்டிற்கு வாகனம் வர வேண்டும் என கருதுகின்றனர்.

top 5 upcoming cars under 15 lakhs

இதனால் இந்த காலகட்டத்தில் இந்தியாவில் கார்களின் விற்பனை அதிகமாக இருக்கும் இந்த விற்பனையை குறிவைத்து பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை களம் இறங்குவார்கள். அதன்படி அடுத்த ஒரு சில மாதங்களில் இந்தியாவிற்கு வரவுள்ள ரூபாய் 15 லட்சம் ரூபாய்க்கு குறைவான முக்கியமான கார்களை காணலாம் வாருங்கள்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட்: இந்த கார் மீதான எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. டாடா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் காரில் இதுவும் ஒன்று இந்த காரை அப்டேட் செய்து பல்வேறு மாற்றங்களை உட்பகுத்தி இந்த வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடாவின் கர்வ் பெட்ரோல் இன்ஜின் கான்செப்ட் காரின் பல்வேறு டிசைன்கள் இந்த காரில் உள்ளது.

top 5 upcoming cars under 15 lakhs

இந்தக் காரில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் அண்ட் சிஸ்டம் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் 1.2 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் ஆகிய பொருத்தப்பட்டுள்ளது. இது 125 பிஎச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். விலையைப் பொறுத்தவரை தற்போது விற்பனையாகும் காரை விட சற்று விலை அதிகமாக இருக்கலாம். அடுத்த மாதம் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா எலவேட்: ஹோண்டா நிறுவனம் தனது இலவேட் கார் மூலம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் மீண்டும் களம் இறங்குகிறது. இந்த கார் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அறிமுகம் ஆகிவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான புக்கிங் நடந்து வருகிறது. இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பிறகு இதன் டெலிவரிகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

top 5 upcoming cars under 15 lakhs

இந்த காரில் 1.5 லிட்டரை இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎச்பி பவரையும் 145 என்எம் டாப் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் ரூபாய் 11 லட்சம் என்ற மதிப்பில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் விற்பனை சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ரூமியான்: மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா நிறுவனம் ரூமியான் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவிலிருந்து தயாராகி தென் ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதியாகி வருகிறது. தற்போது இந்த காரை இந்தியாவிலேயே அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சிட்ரோன் சி3 ஏர் கிராஸ்: சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் காரை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது இந்த கார் 5 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 110 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே அது காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த காருக்கான விலை குறித்து அறிவிப்பிற்கு பலரும் காத்திருக்கிறார்கள். இந்த கார் ரூபாய் 10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ்: மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு மிகப்பெரிய அறிமுகம் எதையும் இதுவரை செய்யவில்லை.இந்நிறுவனம் எந்த ஆண்டு மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் என்ற பொலிரியோவின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரை இந்நிறுவனம் பல்வேறு பகுதிகளில் டெஸ்ட் செய்து வருகிறது.

இந்தக் காரில் 2.2 லிட்டர் எம்ஆர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் நான்கு மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. நான்கு மீட்டருக்கு அதிகமாக இருப்பதால் அதிக வரி இந்த காருக்கு விதிக்கப்படும். இருந்தாலும் இந்த கார் ரூபாய் 10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்குவதால் பல நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை களம் இறக்கி வருகின்றனர் அதில் மக்கள் மத்தியில் இந்த ஐந்து கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ஐந்து காரும் அறிமுகமாகும் போது மிகப்பெரிய அளவில் இதன் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 19, 2023, 10:21 [IST]
English summary
Check out the best five cars priced below rs 15 lakh set to debut this festive season
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X