புதுசா கார் வாங்கப்போறீங்களா? மார்கெட்ல எந்த கார் நல்லா சேல்ஸ் ஆகுது தெரியுமா? டாப் 30 லிஸ்ட் இதோ!

2023 ம் ஆண்டின் முதல் பாதிக்கான அதிகம் விற்பனையான டாப் 30 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எந்தெந்த கார்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன. எவ்வளவு கார்கள் இதுவரை விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு விற்பனையை ஒப்பிடும் போது விற்பனை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாத இறுதி வரை விற்பனையான கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் அதிகம் விற்பனையான கார் முதல் என்ற வரிசையில் டாப் 30 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி முதல் அரையாண்டில் இந்தாண்டு விற்பனை 16,59,409 ஆக இருக்கிறது. இதுவே கடந்தாண்டு இதே கால கட்டத்தில் 14,25,337 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஒரே ஆண்டில் 2,34,072 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 16.42 சதவீத வளர்ச்சியாகும்.

top 30 cars 2023 h1

இதில் டாப் 10 இடங்களை எடுத்துக்கொண்டால் அதில் 7 இடங்களில் மாருதி நிறுவனத்தின் கார் தான் இருக்கிறது. 2 டாடா நிறுவனத்தின் கார்களும், 1 ஹூண்டாய் நிறுவனத்தின் காரும் இருக்கிறது. ஒட்டு மொத்த பட்டியலில் ஹேட்ச் பேக், எஸ்யூவி/கிராஸ் ஓவர் கார் தான் அதிகம் இடம் பெற்றுள்ளன. செடான் ரக கார் 2 தான் இருக்கிறது.மாருதி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா, இனி டாப் 30 பட்டியலை விரிவாகக் காணலாம்.

மாருதி வேகன்ஆர்: இந்த கார் முதல் அரையாண்டில் மொத்தம் 1,09,278 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 1,13,407 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் இந்த காரின் விற்பனை 3.64சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இருந்தாலும் இந்த கார் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

top 30 cars 2023 h1

மாருதி ஸ்விஃப்ட் : இந்த கார் இரண்டாவதாக அதிகம் விற்பனையான காராகும். இந்த கார் 1,04,465 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 91,177 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 13,288 கார்கள் அதிகமாக விற்பனையாகி 14.57 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மாருதி பலேனோ: மூன்றாவது இடத்தில் பலேனோ கார் இருக்கிறது. இது மொத்தம் 1,00,107 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த கார் 72,892 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது அதை விட 37.34 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இந்த கார் மக்களுக்கு பிடித்த கார்களில் ஒன்றாக இருக்கிறது.

top 30 cars 2023 h1

4வது இடத்தில் டாடா நெக்ஸான் கார் 87,501 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது. 5வது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா மொத்தம் 82,566 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது. 6வது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா கார் 82,185 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது.

7வது இடத்தில் மாருதி ஆல்டோ கார் 80,903 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது. 8வது இடத்தில் டிசையர் செடான் கார் 80,903 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது. 9வது இடத்தில் ஈக்கோ கார் 67,732 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது. 10வது இடத்தில் டாடாவின் பஞ்ச் கார் மொத்தம் 67,732 கார்களை விற்பனை செய்து இடம் பிடித்துள்ளது.

Rank Cars H1 2023 H1 2022 Growth (%) YoY
1 Maruti Wagonr 1,09,278 1,13,407 -3.64
2 Maruti Swift 1,04,465 91,177 14.57
3 Maruti Baleno 1,00,107 72,892 37.34
4 Tata Nexon 87,501 82,770 5.72
5 Hyundai Creta 82,566 67,421 22.46
6 Maruti Brezza 82,185 57,751 42.31
7 Maruti Alto 80,903 68,680 17.80
8 Maruti Dzire 72,278 85,929 -15.89
9 Maruti Eeco 67,732 60,705 11.58
10 Tata Punch 67,117 60,932 10.15
11 Hyundai Venue 62,920 57,822 8.82
12 Maruti Grand Vitara 54,995 - -
13 Mahindra Bolero 53,812 45,994 17.00
14 Kia Sonet 53,491 40,687 31.47
15 Mahindra Scorpio / N 52,036 22,888 127.35
16 Maruti Ertiga 49,732 68,922 -27.84
17 Tata Tiago 48,574 28,619 69.73
18 Hyundai Grand i10 NIOS 47,244 52,333 -9.72
19 Hyundai i20 42,796 34,119 25.43
20 Kia Carens 40,771 30,953 31.27
21 Kia Seltos 39,892 48,320 -17.44
22 Toyota Innova 34,647 30,551 13.41
23 Tata Altroz 30,820 28,808 6.98
24 Mahindra XUV700 30,792 29,882 3.05
25 Mahindra XUV300 29,300 26,886 8.98
26 Hyundai Aura 28,631 22,224 28.83
27 Mahindra Thar 27,919 23,612 18.24
28 Maruti Fronx 26,638 - -
29 Maruti Ignis 26,240 24,289 8.03
30 Maruti Celerio 24,027 46,764 -48.62

11வது இடம் முதல் 20 இடம் வரை முறையே வென்யூ, கிராண்ட் விட்டாரா, பொலேரோ, சோனட், ஸ்கார்பியோ, எர்டிகா, டியாகோ, ஐ10 நியோஸ், ஐ20, கேரன்ஸ் ஆகி கார்கள் இடம் பிடித்துள்ளது. இதில் எர்டிகா, ஐ10 நியோஸ் ஆகிய கார்கள் மட்டுமே விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மற்ற கார்கள் எல்லாம் சிறப்பான வளர்ச்சியையே பெற்றுள்ளது.

21ம் இடம் முதல் 30ம் இடம் வரை முறையே செல்டோஸ், இன்னோவா, ஆலட்ராஸ், எக்ஸ்யூவி 700, எக்ஸ்யூவி 300, ஆரா, தார், ஃப்ராங்க்ஸ், இக்னீஷ், செலிரியோ ஆகிய கார்கள் தான் இடம் பிடித்துள்ளது. இதில் செல்டோஸ் மற்றும் செலிரியோ ஆகிய கார்கள்தான் விற்பனையைச் சரிவைச் சந்தித்துள்ளது. மற்ற கார்கள் சிறப்பான விற்பனையைப் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் அரையாண்டு கார்கள் விற்பனையில் 16.42 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வளர்ச்சி இந்திய மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. இந்தியாவில் தனி நபர்களுக்கான வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 26, 2023, 13:35 [IST]
English summary
Check out the full list of the top 30 cars sold in the first half of 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X