சென்னை வெள்ளத்துல உங்க கார் மூழ்கிடுச்சா? அடுத்து என்ன செய்யனும் தெரியுமா?
சென்னை வெள்ளத்தால் சென்னை மக்கள் பயன்படுத்திய பெரும்பாலான கார்கள் தற்போது வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. இந்த கார்களை சரி செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் கார் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். இதற்காக பல நிறுவனங்கள் உதவி தரம் நீட்டி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. அதன்படி மாருதி முதல் ஆடி வரை வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்த விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
சாலையில் மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் இயங்குகிறது. இதனால் மாருதி நிறுவனத்தின் கார்கள் அதிகமாக சென்னை மழை வெள்ளத்தில் பாதிப்பிற்குள்ளாகி இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது டீலர்கள் உடன் சேர்ந்து இதை செய்து வருகிறது.

சென்னையில் உள்ள பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்ய சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னையில் மிக்ஜாம் புயல் வரப்போவதாக செய்திகள் வந்த உடனேயே மாருதி நிறுவனம் சென்னை சுற்றியுள்ள சுமால் 7 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் காரை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற அலார்ட்டை அனுப்பியிருந்தது.
இருந்தாலும் சில வாடிக்கையாளர்கள் காரை பாதுகாக்க முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் காரெல்லாம் தற்போது மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முன்னதாக பல வாடிக்கையாளர்கள் இந்த எச்சரிக்கையை வைத்து தங்கள் கார்களை பாதுகாப்பாக பார்க் செய்து விட்டனர். தண்ணீரில் மூழ்கிய கார்களை பழுது பார்க்க மாருதி நிறுவனம் தற்போது சென்னையை சுற்றி உள்ள 46 டோ வாகனங்களை சென்னைக்குள் கொண்டு வந்துள்ளது.

மேலும் ரோடு சைடு அசிஸ்டென்ட்ஸ் உதவிக்கான 34 வாகனங்களை தயார் செய்துள்ளது. மேலும் வாகனங்களுக்கான உதிரி பாகங்களையும் தற்போது தயார் நிலையில் வைத்துள்ளது. அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கும் என்ற வகையில் தற்போது தன்னை தயார் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து வேகமாக இன்சூரன்ஸ் கிளைம் மற்றும் செட்டில்மெண்ட் கிடைக்க வழிவகைகளை செய்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது இலவச ரோடு சைடு அசிஸ்டென்ட்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனத்தை செக் செய்யவும் எவ்வளவு சேதாரமாகியுள்ளது என்பதை கணக்கிடவும் எந்த கட்டணமும் பெறாது என தெரிவித்துள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய ஆஃபர்களையும் அறிவித்துள்ளது. இதனால் மஹிந்திரா வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் தங்கள் வாகனங்களை சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி நிறுவனத்தை பொருத்தவரை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ரோடு சைடு அசிஸ்டென்ட்ஸ் வழங்குகிறது. இதனால் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆடி கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சரி செய்வதற்காக இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதற்கான டோல்ஃப்ரீ என்ணையும் வழங்கி உள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு வாகனத்தின் நிலை குறித்து சொன்னால் ஆடி நிறுவனமே நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து உதவி செய்யும்.
ஹூண்டாய் நிறுவனத்தை பொருத்தவரை தற்போது கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 3 கோடியை ஒதுக்கி அதன் மூலம் சென்னை மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் வாகனத்தை சரி செய்ய ரோடு சைடு அசிஸ்டென்ட்ஸ் சேவையையும் வழங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனம் இன்சூரன்ஸ் நிறுவனம் சேர்ந்து தங்கள் வாடிக்கையாளர்கள் இன்சூரன்ஸ் பெறவும் உதவுகிறது.
ஹுண்டாய் நிறுவனம் இது மட்டுமல்லாமல் தமிழக அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, தண்ணீர், இருக்க இடம், அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து விநியோகம் செய்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள் போல ஹூண்டாய் நிறுவனமும் பொறுப்புடன் எடுத்து சென்னை மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகிறது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாடிக்கையாளர்கள் உதவி பெறும் வகையில் பல முன்னெடுப்புகை கையில் எடுத்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் கார்களை உடனடியாக சரி செய்து கொள்ள அந்நிறுவனம் வழங்கும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். மாருதி முதல் ஆடி வரை பல நிறுவனங்கள் தங்கள் உதவி கரத்தை நீக்கி உள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்ய அதன் உரிமையாளர்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனம் நீட்டி உள்ள உதவி பெறும் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதாக இருக்கிறது. பல நிறுவனங்கள் எதிர்பாராத பல உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மாருதி நிறுவனம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது எல்லாம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









