Chennai Kilambakkam பஸ் ஸ்டாண்டிலிருந்து உங்கள் பகுதிக்கு பஸ் வேணுமா? உங்க கருத்தை இதுல சொல்லுங்க!

சென்னை வண்டலூர் அருகே தமிழக அரசு கட்டி வரும் பேருந்து நிலையம் தொடர்பாகக் கருத்துக் கேட்கும் பணியை கும்டா மற்றும் சிஎம்டிஏ நிர்வாகம் இணைந்து துவங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதன் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது

தமிழக அரசு சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றாக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ314 கோடி செலவில் புதிதாக ஒரு பேருந்து நிலையத்தைக் கட்டி வருகிறது. சென்னை புறகநர் மட்டுமல்லாமல் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கும் என மொத்தம் 2 பேருந்து நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றனர்.

Chennai Kilambakkam New Bus Terminal

இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் போது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து எல்லாம் இந்த பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது கோயம்பேட்டிற்கு வரும் 60 சதவீதமான பேருந்துகள் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும்.

அதே போல திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் போன்ற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துக்கு இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தான் கடைசி ஸ்டாப்பாக இருக்கும். இங்கிருந்து இறங்கி அவர்கள் வசிக்கும் இடத்திற்கு வேறு பஸ் அல்லது வாகனம் மூலம் செல்ல வேண்டும்.

Chennai Kilambakkam New Bus Terminal

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் போது அங்கிருந்த எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு சர்வே ஒன்றை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆன்லைன் மூலம் இந்த சர்வே நடத்தப்படுகிறது. இதில் சென்னை வாழ் வெளியூர் மக்கள் தாங்கள் தற்போது எப்படி சொந்த ஊருக்கு சென்று வருகிறோம் என்பதைப் பதிவிடுவதன் மூலம் அவர்கள் கிளாம்பாக்கத்திலிருந்து மற்ற பகுதிக்கு இயக்கப்படுவதற்கான பஸ் தேவை குறித்த ஒரு ஐடியாவை பெறுவார்கள்.

இதற்காக மக்களின் அவர்களது பெயர், பாலினம், சென்னையில் அவர்கள் வசிக்கும் பகுதி, அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது எங்கிருந்து பஸ் ஏறுவார்கள். பஸ் ஏறும் இடத்திற்கு எப்படிப் பயணிப்பார்கள். எந்த நேரத்தில் வெளியூர்களுக்குக் கிளம்புவார்கள்.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டால் அந்த பஸ் ஸ்டாண்டிற்கு எப்படி பயணிப்பார்கள்? இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்த அவர்களது கருத்து என்ன? போன்ற கேள்விகள் எல்லாம் இதில் கேட்கப்பட்டுள்ளன. கும்டா மற்றும் சிஎம்டிஏ இணைந்து இந்த சர்வேயை எடுத்து வருகிறது.

நீங்கள் சென்னையில் வாழும் வெளியூர்வாசியாக இருந்தால் நீங்களும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd31yiVkpoiAjwUVRFQaIKO2K4inLaZxa88zp65r4Qd9FOK4Q/viewform என்ற இணைப்பில் சென்று உங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். இந்த பக்கத்தில் வழங்கப்படும் பதில்களை வைத்தே சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ் மற்றும் பிற வசதிகள் திட்டமிடப்படும்.

சென்னை கிளாம்பாக்கம் பஸ்டாண்டாடை பொருத்தவரை மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டாக கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 2 அடுக்கு பஸ் ஸ்டாண்ட்கள் கட்டப்படுகின்றன. தரைதளத்தில் கடைகள், உணவகங்கள், டிக்கெட் கவுண்டர்களுக்கான இடம் வழங்கப்படுகிறது.

முதல் தளத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் தங்குவதற்கான டார்மென்டரி அறைகள், மற்றும் தனித்தனி அறைகள் கட்டப்பட்டு வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்துவிட்டால் சென்னை பஸ்களில் மிகப்பெரிய மாற்றம் வரும்.

தற்போது வரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டையே மக்கள் அதிகம் நம்பி வந்த நிலையில் இனி கோயம்பேடிற்கு பதிலாக கிளாம்பாக்கமும் இணையும். இதனால் சென்னை நகரம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கலாம். இது சென்னை பெருங்களத்தூர் டிராஃபிக்கை குறைக்க மிக சிறந்த வழியாக இருக்கும். கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2023, 12:40 [IST]
English summary
Chennai kilambakkam new bus terminal passenger dispersal and arrival pattern survey
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+