29 லட்ச ரூபாயை ஸ்பீக்கருக்காக செலவு செய்த சென்னை வாசி.. அப்படி என்ன ஸ்பீக்கருங்க அது?

கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் சொனெட்-ம் ஒன்றாகும். இது ஓர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே மியூசிக் சிஸ்டத்தை அப்கிரேட் செய்வதற்காக ஓர் இளைஞர் சுமார் 29 லட்சம் ரூபாயை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கியா சொனெட்டின் டாப் வேரியண்டில் உயர்நிலை ஸ்பீக்கர் சிஸ்டமான போஸ் மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே கியா சொனெட்டின் உரிமையாளர் ஒருவர் மிக மிகப் பெரிய தொகையைக் கொடுத்து மியூசிக் சிஸ்டத்தை அப்கிரேட் செய்திருக்கின்றார். இதை வைத்து பார்க்கையில் மிக மிக காஸ்ட்லியான மியூசிக் சிஸ்டத்தைக் கொண்டிருக்கும் முதல் கியா சொனெட் என இதை கூறலாம்.

Kia sonet speaker system

இதுகுறித்து டீம் பிஎச்பி தளம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், இந்த கியா சொனெட் கார் உரிமையாளர் மியூசிக்கின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும், இதன் காரணத்தினாலேயே அவர் இந்த அளவு பெரும் தொகையை ஸ்பீக்கர் சிஸ்டத்திற்காக வாரி இறைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. இதை செய்தவர் நம் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சென்னை அம்பத்தூரில் உள்ள விற்பனையகத்தில் இந்த மியூசிக் சிஸ்டம் அப்கிரேஷன் குறித்து அவர் முதலில் விசாரித்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து, எக்ஸ்பர்ட்டுகள் வழங்கிய அறிவுறுத்தலின்படி, அவர் சில உயர் வகை ஸ்பீக்கர் சிஸ்டங்களை தேர்வு செய்திருக்கின்றார். ஆடியோ சர்க்கிள் ப்ரோ லைன் மூலமாகவே அவருக்கான ஸ்பீக்கர்களை தேடி இருக்கின்றார்.

Kia sonet front

ஆடிசன் தீசிஸ், பிராக்ஸ் மற்றும் ஃபோகல் உடோபியா எம் ஆகிய ஸ்பீக்கர்கள் பெஸ்டானதாக அவருக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால், இதில் ஃபோகல் உடோபியா எம் ஸ்பீக்கர் சிஸ்டத்தையே அவர் தேர்வு செய்திருக்கின்றார். பொதுவாக வாகன ஆர்வலர்கள் தங்கள் காரின் உட்பக்கத்தை அல்லது வெளிப்பக்கத்தை ஆடம்பரமானதாக மாற்றவே விரும்புவார்கள்.

ஆனால், அம்பத்தூரைச் சேர்ந்த இந்த நபர் மியூசிக் சிஸ்டத்தை அப்கிரேட் சிஸ்டத்தை அப்கிரேட் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி இருக்கின்றார். ஆனால், இதற்காக அவர் செய்திருக்கும் செலவு என்பது பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. கியா சொனெட் இந்தியாவில் ரூ. 7.79 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Kia sonet speaker system

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலை குறைவான காருக்கே அந்த காரின் விலையை விட பலமடங்கு அதிக விலையைக் கொண்டிருக்கும் மியூசிக் சிஸ்டத்தை அம்பத்தூரைச் சேர்ந்தவர் பொருத்தி இருக்கின்றார். இந்தியர்கள் பலரின் பிரியமான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காராக சொனெட் இருக்கின்றது.

இதன் விளைவாக இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாகவும் அது மாறி இருக்கின்றது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Brezza), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300) உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக கியா சொனெட் விற்பனையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kia sonet front speaker

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றது. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் கொடுக்கப்படுகின்றது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ஐஎம்டி உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மியூசிக் சிஸ்டத்திற்காக ரூ. 29 லட்சத்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் செலவு செய்திருப்பது ஒட்டுமொத்த வாகன காதலர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த காசுக்கு ஆரம்ப நிலை சொகுசு காரையே வாங்கி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் பலரை இந்த தகவல் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.

Article Published On: Friday, September 8, 2023, 12:11 [IST]
English summary
Chennai man spends inr 29 lakh to upgrade music system here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X