Chennai Metro Madhavaram To Retteri 2026ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் பெரும்பாலான பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் வசதிகள் வந்துவிட்டது. இதற்குச் சென்னையும் விதி விலக்கல்ல. சென்னையில் தற்போது 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான வேலைகள் நடந்து வருகிறது. சென்னை மெட்ரோவிற்காக டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது வரும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2ம் கட்ட மெட்ரோ வேலைகள் நடந்து வருகிறது.

சென்னை மெட்ரோவின் 2ம் கட்ட பணிகளில் மொத்தம் 3 லைன்கள் அமைக்கப்படவுள்ளன. மொத்தம் சேர்த்து 118.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடக்கவுள்ளன. இதில் முதற்கட்டமாக மாதவரம் முதல் ரெட்டேரி வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு வரும் 2026ம் இறுதிக்குள் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்காக ரூ61,843 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ69,180கோடிக்கு இந்த திட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் காசை குறைக்கும் முயற்சியில் இந்த திட்டத்தில் 6 ஸ்டேஷன்களை மெட்ரோ நிர்வாகம் நீக்கியது. அருகருகே வேறு மெட்ரோ ஸ்டேஷன்கள் இருப்பதால் இந்த ஸ்டேஷன்கள் தேவையில்லை என நீக்கியது.

இந்த 6 ஸ்டேஷன்களை நீக்கியது மூலம் மட்டும் ரூ1200 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. டோவ்டன் ஜங்சன், ஃபோர்ஷோர் எஸ்டேட், நடேசன் பார்க், மீனாட்சி காலேஜ், தபால் பெட்டி மற்றும் செயின்ட் ஜோசப் காலேஜ் ஆகிய 6 ஸ்டேஷன் தற்போதைய திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியில் மொத்தம் 128 ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் 48 ஸ்டேஷன்கள் பூமிக்கு கீழே அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்கள் 2026ம் ஆண்டு முதல் நிறைவடையத் துவங்கி ஒவ்வொரு பகுதியாகப் பணி நிறைவடைந்து மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த 2ம் கட்ட மெட்ரோ பணியில் மொத்தம் 3 லைன்கள் உருவாக்கப்படவுள்ள
து. காரிடார் 3 ரூட் மாதவரம் முதல் சிறுசேரி, சிப்காட் வரையிலும் (45.8 கி.மீ), காரிடா் 4 ரூட் லைட் ஹவுஸிலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரையிலும் (26.1 கி.மீ), காரிடார் 5 ரூட்டில் மாதவரத்திலிருந்து -சோழிங்கநல்லூர் வரையிலும் (47.0 கி.மீ ) கட்டமைக்கப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வளர்ந்து வரும் இந்தியாவிற்கு மெட்ரோ என்பது மிக முக்கியமான தேவையான இருக்கிறது. மெட்ரோ தான் பெருநகரங்களுக்குள் போக்குவரத்தைச் சுலபமாக்குகிறது. ஆனால் இதைக் கட்டமைக்க அதிக நேரத்தை நாம் எடுத்துக்கொள்கிறோம். மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
