மஹிந்திராவோட பிராண்ட் அம்பாசிடர் கைகளிலேயே காரை டெலிவரி பெற்ற நபர்... அந்த அதிர்ஷ்டசாலி சென்னையை சேர்ந்தவரா!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி 700 (XUV700) இருக்கின்றது. இந்த காரையே முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மேத்யூ ஹேடன் கைகளால் டெலிவரி பெறும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றார் சென்னை வாசி ஒருவர். இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) இருக்கின்றது. மிக அதிக காத்திருப்பு காலத்துடன் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த மாடல் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலையே சென்னை வாசி ஒருவர் கிரேட் மேத்யூ ஹேடன் கைகளால் டெலிவரி பெற்றிருக்கின்றார்.

நீண்ட காலமாக மஹிந்திரா நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கக் கூடிய ஓர் நபராக கிரேட் மேத்யூ ஹேடன் காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே சமீபத்தில் ஓர் புதிய திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிதாக காரை வாங்கும் லக்கி வாடிக்கையாளருக்கு கிரேட் மேத்யூ ஹேடன் கைகளால் அந்த கார் டெலிவரி வழங்கப்படும் என்கிற திட்டமே அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை வாடிக்கையாளர் ஒருவருக்கு முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரரின் கைகளால் புத்தம் புதிய எக்ஸ்யூவி 700 கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அந்த நேரத்தில், முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் தென்னிந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையும், மஹிந்திராவின் சின்னம் பொருந்திய கருப்பு நிற டி-ஷர்ட்டை அணிந்திருந்தார் என்பது கூடுதல் ஹைலைட் ஆகும்.

டெலிவரி கொடுக்கப்பட்ட காரின் நிறத்திற்கு ஒத்த கருப்பு நிற டி-ஷர்ட்டையே அவர் அணிந்திருந்தார். மேலும், கார் டெலிவரியைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சின்ன டிரைவும் செய்து மகிழ்ந்தனர். இந்த வீடியோவே தற்போது இணைய வாசிகள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மஹிந்திரா கார் பிரியர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவே அதி-வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
பிஎம்டபிள்யூவின் பிராண்ட் அம்பாசிடராக சச்சின் டெண்டுல்கரும், ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக விராட் கோலியும் இருப்பதைப் போல நம்முடைய மஹிந்திரா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக கிரேட் மேத்யூ ஹேடன் இருக்கின்றார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்த இந்த பொறுப்பை வகிக்கின்றார்.

இதன் அடிப்படையிலேயே இவர் சில நேரங்களில் மஹிந்திரா விளம்பரங்களில் தென்படுகின்றார். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு இந்தியாவில் டிமாண்ட் அதிகம். இப்போதைய நிலவரப்படி, ஆறு வாரங்கள் தொடங்கி 25 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேரியண்டுகளை பொருத்து இந்த காத்திருப்பு காலம் மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்தகைய டிமாண்ட் உள்ள ஸ்பெஷலான வாகனத்தையே ஸ்பெஷல் நபரின் கைகளால் சென்னை வாசி தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார். மஹிந்திரா எக்ஸ்யூவி 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் எஞ்ஜினானது 197 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டார்களுடன் சேர்த்து 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த கார் ரூ. 14.03 லட்சம் தொடங்கி ரூ. 26.57 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு அம்சங்களை மிக தாராளமாகக் கொண்ட கார் மாடலாக எக்ஸ்யூவி 700 இருக்கின்றது. ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்ட ப்ரோக்ராம், ஏழு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், மிக சிறந்த பாதுகாப்பை வழங்கும் கார் மாடலாக எக்ஸ்யூவி700 காட்சிளிக்கின்றது.


Click it and Unblock the Notifications









