8லட்ச ரூபாக்கு 408கிமீ ரேஞ்ஜ் தரும் காரா! மாருதியாலகூட இவ்ளோ கம்மியான விலையில், இவ்ளோ சூப்பரான கார தர முடியாது

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் செர்ரி நீயூ எனெர்ஜி (Chery New Energy)-யும் ஒன்றாகும். இந்த பிராண்டே மிக மிக குறைவான விலையில் அதிக கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது.

புதிய லிட்டில் ஆன்ட் (New Little Ant) எனும் காரையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக சீன மதிப்பில் 77,900 யுவான்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச விலையே 82,900 யுவான்கள் மட்டுமே ஆகும்.

Chery little ant

இந்திய ரூபாய் மதிப்பில் இந்த காரின் விலையைக் கூற வேண்டும் என்றால் ரூ. 8.92 லட்சம் தொடங்கி ரூ. 9.49 லட்சத்திற்கு இடைப்பட்ட விலையிலேயே செர்ரி நியூ லிட்டில் ஆன்ட் எலெக்ட்ரிக் கார் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. ஆடம்பர வசதிகள் மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கின்ற வேளையிலும் இந்த அளவு மலிவு விலையிலேயே எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

மலிவு விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதால் செர்ரி நியூ லிட்டில் ஆன்ட் எலெக்ட்ரிக் காரின் வருகை உலிங் ஏர் இவி மற்றும் டிஎஃப்எஸ்கே செரேஸ் இ1 உள்ளிட்ட மின்சார கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது. இந்த கார் மாடல்களும் மிக மிக மலிவு விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Chery little ant display

அதேவேளையில், செர்ரி நிறுவனம் இந்த புதுமுக மின்சார காரை தன்னுடைய தாய்நாட்டிற்கென்று மட்டுமே பிரத்யேகமாக தயார் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், நியூ லிட்டில் ஆன்ட் எலெக்ட்ரிக் கார் சீனாவில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், உலக நாடுகளில் பின் வரும் நாளில் இதன் வருகை அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்திய சந்தையின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக் எம்ஜி கோமெட் இவியும், டாடா டியாகோ இவியும் இருக்கின்றன.

Chery little ant interior

கோமெட் இவி ரூ. 7.98 லட்சம் - ரூ. 9.98 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. டியாகோ இவி ரூ. 8.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒருவேளை செர்ரி நியூ லிட்டில் ஆன்ட் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றால் இந்த இரண்டு வாகனங்களுக்குதான் அது மிகப் பெரிய போட்டியாளனாக இருக்கும்.

இந்த எலெக்ட்ரிக் கார் மிக சிறிய உருவம் கொண்ட வாகனம் ஆகும். அதேநேரத்தில் நான்கு பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். அதுதவிர, மிகவும் கம்ஃபோர்ட்டான ரைடு அனுபவத்தையும் பயணிகளால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக முன்பக்க பயணிக்கு அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் மிருதுவான மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களில் காணப்படுவதைப் போன்ற அமைப்பு இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது.

Chery little ant platform

இதுதவிர எண்ணற்ற சிறப்பம்சங்களும் இந்த மின்சார காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மாடர்ன் ஸ்டியரிங் வீல், மெல்லிய ஏர் வெண்டுகள், அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி, லெதர் இருக்கை, ஹீட்டாக அம்சம் கொண்ட இருக்கை மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதுதவிர, பிஎம்2.5 ஏர் ஃபில்டர் மற்றும் பெரிய மேக்கப் கண்ணாடி எல்இடி லைட்டுடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. பெண்கள் தங்களை அழகு ஒப்பணைச் செய்துக் கொள்ளும் நோக்கில் இந்த அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், பாதசாரிகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கும் அம்சம், மோதல்களின்போது தானாகவே பவர்-ஆஃப் வசதி என ஏகப்பட்டவை புதிய லிட்டில் ஆன்ட் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு உள்ளன.

மின்சார மோட்டாரை பொருத்தவரை இந்த காரில் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. 50 பிஎஸ் மற்றும் 95 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே செரி நியூ லிட்டில் ஆன்ட் விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேளையில், பேட்டரி பேக் விஷயத்தில் மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.

அந்தவகையில், 25.05 kWh லித்தியம் அயன் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் ஃபுல் சார்ஜில் 251 கிமீ ரேஞ்ஜ் திறனுடன் வழங்கப்பட இருக்கின்றது. இதுவே ஆரம்பநிலை தேர்வாகும். இதுதவிர, 28.86 kWh டெர்னரி லித்தியம் மற்றும் 29.23 kWh எல்எஃப்பி ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களும் இந்த கார் கிடைக்கும். இது ஃபுல் சார்ஜில் 301 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

இதுதவிர, உயர் நிலை தேர்வாக ஓர் ஃபுல் சார்ஜில் 408 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய ஆப்ஷனும் நியூ லிட்டில் ஆன்ட் எலெக்ட்ரிக் வழங்கப்பட இருக்கின்றது. இந்த அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 40.3 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 76 பிஎஸ் மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே இந்த உயர்நிலை ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்ற மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால், தேர்வுகள் மிகக் குறைவாக இருக்கின்றன. டிகோர் இவி மற்றும் கோமெட் இவி ஆகிய இரண்டுமே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றிற்கு பெரிய அளவில் இல்லாத நிலையே நம் நாட்டில் தென்படுகின்றது. விரைவில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 5:00 [IST]
English summary
Chery new energy launched new little ant ev for china
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X