5 மாநில முதல்வர்களிடம் சொந்தமாக என்ன கார் இருக்கிறது தெரியுமா? இதெல்லாம் நம்புற மாதிரியில்லயே!

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முன்னணி நிலவரங்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மக்கள் மத்தியில் தற்போது இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் இந்த ஐந்து மாநிலத்திலும் முதல்வராக இருந்தவர்கள் சொந்தமாக என்ன வாகனத்தை வைத்திருக்கிறார்கள் என்ற விபரத்தை தான் காணப் போகிறோம்.

ஐந்து மாநிலத்திலும் முதல்வராக இருந்தவர்கள் இந்த தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதில் தங்களது சொத்து விபரம் குறித்த அனைத்து தகவல்களையும் சேர்த்து இருப்பார்கள். அதில் அவர்களுக்கு சொந்தமான வாகனம் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கும். அதை வைத்து நாம் இந்த 5 மாநில முதல்வர்கள் இடம் என்னென்ன கார்கள் இருக்கிறது என்ற விபரத்தை காணலாம்.

Chief Minister Cars

சிவராஜ் சிங் சவுகான் - மத்திய பிரதேச முதல்வர்: பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக இருந்து வருகிறார். இவர் மிக மூத்த அரசியல்வாதி மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமானவர். இவர் இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார். தற்போது இவர் நின்ற தொகுதியில் இவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவராஜ் சிங்சாங் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது தன்னிடம் கடந்த 2000-வது ஆண்டில் வாங்கிய அம்பாஸிடர் கார் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் தன்னை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எந்தவிதமான எந்தவிதமான வாகனங்களும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இவர் காரின் மதிப்பு ரூபாய் 1.53 லட்சம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Cars

அசோக் கெலட் -ராஜஸ்தான் முதல்வர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இவர் அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலிலும் அவர் தனது சொந்த தொகுதியான சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து தோல்வியை தழுவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்காக அசோக் கெலட் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் அவர் தன்னிடமோ தனது குடும்பத்தாரிடமோ எந்தவிதமான வாகனங்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்திற்கே முதல்வராக இருந்தும் இவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது. இவரிடம் மட்டுமல்ல இவரது மனைவி பெயரிலும் எந்தவிதமான காரும் இல்லை எனவும் இவரை சார்ந்திருப்பவர்கள் யார் பெயரிலும் வாகனங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Chief Minister Cars

சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதல்வர்: இவர் பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக இவர் பொறுப்பில் உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறார். தற்போது களத்தில் இவர் கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது அதில் தன்னிடமோ தனது மனைவியிடமோ அல்லது தன்னை சார்ந்தவர்களிடமோ எந்தவிதமான வாகனங்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் சொத்து மதிப்பில் வாகனங்களை கணக்கிட முடியாது என தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் இவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்ற செய்தி பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Chief Minister Cars

பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மாநில முதல்வர்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த உடன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து ஐந்து வருடம் முதல்வராக இருந்த பின்பு இந்த தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

இந்நிலையில் இவர் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னிடம் உள்ள வாகனங்கள் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்படி இவரது பெயரில் சுமார் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் ஒன்று இருப்பதாகவும்,

இவரது மனைவி பெயரில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான டிராக்டரும் அதே நேரம் ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மாருதி 800 கார் ஒன்றும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் இவரிடம் உள்ள வாகனங்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 6.20 லட்சமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஸோரம்தங்கா மிசோரம் மாநில முதல்வர்: ஸோரம்தங்கா மிசோரம் தேசிய முன்னணி என்ற கட்சியை சேர்ந்தவர். இவர் தான் தற்போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்து வருகிறார். இருந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கிறார். இந்த மாநிலத்தில் நாளை தான் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்பொழுது தான் முன்னணி விபரங்கள் குறித்த தகவல் எல்லாம் வெளியில் வரும்.

இவரது தேர்தலில் அளித்த வேட்புமனுத் ஆட்களின் தகவலின் படி இவரிடம் மொத்தம் மூன்று கார்கள் இருக்கிறது. கடந்த 2007 ஆண்டு மாருதி சுஸூகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா என்ற கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரூபாய் 18 லட்சம் மதிப்பீடு செய்துள்ளார். இந்த கார் 2009 ஆம் ஆண்டு விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டது.

அடுத்ததாக இவரிடம் 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஜிப்ஸி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீடு செய்துள்ளார். இதுபோக கடந்த 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாருதி சியாஸ் என்ற ஸ்மார்ட் ஹைபிரிட் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு 10.5 லட்சம் மதிப்பீடு செய்துள்ளார்.

மேலும் இவரை சார்ந்த நபரிடம் எஸ்எம்எல் இஸூசூ நிறுவனத்தின் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த காருக்கு ரூபாய் 18.79 லட்சம் மதிப்பீடு செய்துள்ளார். இவர் காட்டிய சொத்து மதிப்பில் இவரிடம் மட்டும் மொத்தமாக வாகனத்திற்காகவே 52.29 லட்சம் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்டியலில் உள்ள கார்கள் எல்லாம் வேட்புமனு போது அவர்கள் நேரடியாக கொடுத்த தகவல் மட்டுமே. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் கார்கள் வேராக இருக்கலாம். அந்த கார்கள் எல்லாம் நேரடியாக இவர்கள் பெயரில் இல்லாமல் வேறு நபர்களின் பெயரில் இருந்து இவர்கள் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில மாநில முதல்வர்கள் அவர்கள் பெயரில் எந்த விதமான வாகனங்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 16:29 [IST]
English summary
Chief ministers cars state election results
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X