இந்த சீன கார்தான் சீக்கிரமே இந்திய சாலையை பதம் பார்க்க போகுது.. பேரே மிரட்டுற மாதிரி இருக்கே!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஒய்டி (BYD). இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அதன் கால் தடத்தை பதித்துவிட்டது. இந்த பிராண்டு கார் மாடல்கள் அனைத்தும் சற்று காஸ்ட்லியானவை என்பதால் பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே ஃபேமஸான கார் மாடலாக பிஒய்டி காட்சியளிக்கின்றது.

அதேவேளையில், நீங்கள் ஓர் பிரீமியம் கார் விரும்பியாக இருப்பின் நிச்சயம் இந்த பிராண்டை பற்றி அறிந்திருக்கக் கூடும். பிஒய்டி இந்தியாவில் இ6 (e6) மற்றும் அட்டோ 3 (Atto 3) ஆகிய இரண்டு கார் மாடல்களை மட்டுமே இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும்.

Byd sea lion 07 electric suv

லக்சூரி அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு பெயர்போன தயாரிப்பாக இந்த எலெக்ட்ரிக் கார்கள் காட்சியளிக்கின்றன. இந்த இரண்டு கார் மாடல்களுடன் சேர்த்து மேலும் சில கார் மாடல்களை பிஒய்டி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதில் ஒன்றே சி லயன் 07 (Sea Lion 07) என்கிற கார் மாடல் ஆகும்.

இந்த காரையே பிஒய்டி நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. 2023 குவாங்ஷோ இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ வாயிலாகவே இந்த கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் ஒய்-க்கு போட்டியாக தயார் செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலே இது ஆகும்.

Byd sea lion 07 electric suv front

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் அல்லது இறுதிக்குள் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போதைய அதன் வெளியீட்டு நிகழ்வு அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் சூப்பரான தளமான இ-பிளாட்பாரம் 3.0-வில் வைத்தே இந்த காரை பிஒய்டி தயார் செய்திருக்கின்றது.

இந்த காரை கடல் சிங்கங்களை தழுவி உருவாக்கி இருப்பதாக பிஒய்டி அறிவித்து இருக்கின்றது. இதற்கு சான்றாக காரின் முகப்பு பகுதி அமைந்திருக்கின்றது. முற்றிலும் வித்தியாசமான லுக் கொண்ட ஹெட்லைட், பகல் நேர லைட், பம்பர், ஏர் இன்டேக் டேம் மற்றும் பம்பர் ஆகியவை அமைந்திருக்கின்றன.

Byd sea lion 07 electric suv rear

மேலும், இந்த காருக்கு காற்றைக் கழித்துக் கொண்டு செல்லக் கூடிய கூரிய முகப்பு பகுதியே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அலாய் வீல்களும் தனித்துவமான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதேபோல், இந்த காரின் பின் பக்கமும் மனம் கவரும் தோற்றத்தைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

ஆனால், இந்த காரின் சிறப்பம்சங்கள் பற்றிய எந்த விபரத்தையும் பிஒய்டி வெளியிடவில்லை. இருப்பினும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் சி லயன்-இன் உயர் நிலை தேர்வு ஓர் முழு சார்ஜில் 500 கிமீ முதல் 600 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Byd sea lion 07 electric suv side view

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தரப்பில் இந்த கார் இரண்டு விதமான பேட்டரி பேக் மற்றும் இரண்டு மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சின்ன பேட்டரி பேக் மற்றும் சிங்கிள் மோட்டாரைக் கொண்ட ஓர் தேர்வும், அடுத்தபடியாக பெரிய பேட்டரி பேக் மற்றும் இரட்டை மோட்டார்கள் கொண்ட தேர்வும் என இரு ஆப்ஷன்களே பிஒய்டி சி லயன் 07-இல் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சற்று காஸ்ட்லியானதாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், பார்க்கப் போனால் புதிதாக தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் பிஒய்டி சி லயன் 07-ம் சற்று காஸ்ட்லியான மாடலகவே இந்தியாவை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற மாடல்களைக் காட்டிலும் இது அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 5:00 [IST]
English summary
China s byd revealed sea lion 07 electric suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X