இப்பதான் இந்தியாவுல விற்பனைக்கே அறிமுகமாச்சு அதுக்குள்ள இந்த நிறுவனம் காப்பி அடிச்சிருச்சா! ஜிம்னியின் காப்பி

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இரு புதுமுக கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதில் ஒன்றே ஜிம்னி (jimny). இது ஓர் ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி வெர்ஷன் ஆகும்.

இந்த காரை தற்போது ஏராளமானோர் புக்கிங் செய்து வருகின்றார். நீண்ட நாட்களாக இந்த காரின் மீது எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதால் இதற்கு வரவேற்பு மிக மிக அமோகமானதாகக் காட்சியளிக்கின்றது. நாள் ஒன்றிற்கு 700 பேர் வரை இக்காரை புக் செய்வதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை 16,500 க்கும் அதிகமான புக்கிங்கை இந்த கார் பெற்றிருக்கின்றது.

காப்பி கார்

காப்பி அடிப்பதில் பெயர்போன சீனர்கள்

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மாருதி சுஸுகி ஜிம்னியை தழுவிய ஓர் கார் மாடலை சீன நிறுவனம் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாகனங்களை நகலெடுப்பதில் பெயர்போனவர்களாக சீன வாகன உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே பவுஜன் எனும் நிறுவனம் ஜிம்னியை தழுவிய டூப்ளிகேட் வாகன மடாலை உருவாக்கி இருக்கின்றது.

நல்லவேள காரோட பெயரை காப்பி அடிக்கல

பவுஜன் சீனாவைச் சேர்ந்த ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான எஸ்ஏஐசி (SAIC)-க்கு சொந்தமான நிறுவனம் ஆகும். ஜாய் எனும் பெயரிலேயே ஜிம்னியின் காப்பி வெர்ஷனை பவுஜன் உருவாக்கி இருக்கின்றது. மிகப் பெரிய மாற்றமாக இதனை எலெக்ட்ரிக் காராக பவுஜன் தயாரித்து இருக்கின்றது. ஜிம்னி உள் எரிப்பு மோட்டார் தேர்வுடன் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

ஜிம்னி

இந்நிலையில், சீன நிறுவனமான பவுஜன் தனது காப்பி வெர்சனுக்கு மின்சாரத்தால் இயங்கும் இதயத்தை (மோட்டாரை) வழங்கி இருக்கின்றது. இதேபோல், மூன்று கதவுகள் கொண்ட காராகவும் ஜாய் எலெக்ட்ரிக் காரை பவுஜன் வடிவமைத்து இருக்கின்றது. மாருதி சுஸுகியின் 3 கதவுகள் கொண்ட ஜிம்னி உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அழகான காரா ரெடி பண்ணி இருக்காங்க

ஜாய் இ-காரில் கணிசமான சில மாற்றங்களையும் நம்மால் காண முடிகின்றது. முகப்பு பகுதியில் முற்றிலும் மாறுபட்ட பம்பர், கிரில், ஹெட்லைட், ஏர் வெண்டுகள் மற்றும் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலிலான பான்னெட் உள்ளிட்டவற்றை ஜாய் எலெக்ட்ரிக் காரில் பவுஜன் வழங்கி இருக்கின்றது. இது அந்த காருக்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது.

ஜிம்னி

இதனை மேலும் கூட்டும் விதமாக வீல்கள் மற்றும் பக்கவாட்டு பேனல்களையும் மிகவும் அழகிய தோற்றத்தில் அது பயன்படுத்தி இருக்கின்றது. இருப்பினும், இது ஜிம்னியின் காப்பி வெர்சன் என்பதை வெளிக்காட்ட தவறவில்லை. பவுஜன் ஜாய் இ-கார் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கின்றது. இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கும் சாங்காய் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் முதலில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கு

இந்த ஆட்டோ ஷோ வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்தே எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்த பணிகள் சீனாவிலேயே முதலில் தொடங்கப்பட இருக்கின்றது. நடப்பாண்டு மே மாதத்திற்குள் பவுஜன் ஜாய் இ-காரின் விற்பனை பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்த மின்சார காரை எஸ்ஏஐசி நிறுவனம் அதன் கிவி பிராண்டின்கீழே விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டது.

ஜிம்னி

அளவுல கொஞ்சம் சிறுசாதான் ரெடி பண்ணியிருக்காங்க

ஆனால், இந்த முடிவு குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மாற்றப்பட்டு தற்போது பவுஜன் பேட்ஜில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அளவைப் பொருத்தவரை இந்த கார் சற்று அதிக இட வசதிக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. பவுஜன் எலெக்ட்ரிக் காரின் நீளம் 3,381 மிமீ.ஆகவும், அகலம் 1,685 மிமீ.ஆகவும், உயரம் 1,721 மிமீ ஆகவும் உள்ளது. இது சுஸுகி ஜிம்னியைக் காட்டிலும் சற்று குறைவான அளவுகள் என்பது கவனித்தகுந்தது.

சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட வாகனமாக பவுஜன் ஜாய் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அது 67 எச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இதனை அதிக பவர்ஃபுல் வேரியண்டாக விற்பனைக்கு வழங்க சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிக பவர்ஃபுல் வேரியண்டில் நிறுவனம் டூயல் எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தும்.

303 கிமீ பயணிக்கலாம்

அத்துடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் அதில் வழங்கப்படும். எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 303 கிமீ தூரம் பயணிக்கலாம். இந்த கார் ஜிம்னியைக் காப்பி அடித்து தயாரிக்கப்பட்டிருந்தாலும் அழகில் அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 17, 2023, 8:30 [IST]
English summary
Chinese car manufacturer boujan made jimny inspired joy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X