Fancy Car Number-க்காக யாராச்சும் இத்தன லட்ச ரூபாயை செலவு செய்வாங்களா! சிரஞ்சீவிகாரு செய்த செயலால் மக்கள் ஷாக்
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஜாம்பவான் நடிகர்களில் சிரஞ்சீவி-யும் ஒருவர் ஆவார். இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் தோன்றிருக்கின்றார். தெலுங்கு அரசியல் உலகிலும் சிரஞ்சீவி தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஆகையால் இந்தியாவின் ஃபேமஸான நபர்களில் ஒருவராக சிரஞ்சீவி காட்சியளிக்கின்றார்.
இந்த மாதிரியான ஓர் புகழ்பெற்ற நபரே தன்னுடைய ஆடம்பர காருக்காக ஃபேன்சியான நம்பர் பிளேட்டை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அவர் லட்சக் கணக்கான ரூபாயை வாரி இறைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகம் முழுக்க கார் காதலர்கள் குவிந்துக் காணப்படுகின்றனர். அதிலும் ஒரு சிலர் மிகப் பெரிய வெறிக் கொண்ட வாகன பிரியர்களாக காட்சியளிக்கின்றனர்.

அந்த மாதிரியான ஓர் நபராகவே சிரஞ்சீவி தற்போது வெளிப்படுத்தியிருக்கின்றார், நடிகர் சிரஞ்சீவி. இவர் வெறும் அழகான கார்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த கார்களுக்கு மிக மிக ஃபேன்சியான நம்பர் பிளேட்டுகளை வாங்குவதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். இதற்கு அவரின் சமீபத்திய பேன்சி நம்பர் பிளேட் கொள்முதலே சான்றாக இருக்கின்றது.
'டிஎஸ் 09 ஜிபி 1111' (TS09GB1111) எனும் ஃபேன்சி பதிவெண்ணையே சிரஞ்சீவி வாங்கி இருக்கின்றார். இதற்காக அவர் உச்சபட்சமாக ரூ. 5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் சிரஞ்சீவி தனது சொந்த பயன்பாட்டிற்காக டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) சொகுசு காரை வாங்கினார்.

இந்த காருக்காகவே புதிய நம்பர் பிளேட்டை அதிக தொகைக் கொடுத்து அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் மதிப்பு ரூ. 1.2 கோடிக்கும் அதிகம் ஆகும். சொகுசு வசதிகள் நிறைந்த எம்பிவி ரக காரே இந்த வெல்ஃபையர் ஆகும். இந்த காரை மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், பாலிவுட் திரை உலகைச் சேர்ந்தவர்கள் சிலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், அனில் கபூர், அஜய் தேவ்கன், ஆமிர்கான், மோஹன்லால், தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் சிம்பு மற்றும் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட ஃபேமஸான நடிகர்களே இந்த காரை இந்தியாவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

சொகுசு வசதிகள் மிக அதிகம் என்பதால் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு மிக அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 1 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றது. சொகுசு வசதியை போலவே இட வசதியும் இந்த காரில் மிக தாராளம்.
இதனால்தான், பலர் இந்த காரை லக்சுரி மினி வேன் என செல்லமாக அழைக்கின்றனர். ஆறு பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து டொயோட்டா வெல்ஃபையர் பயணிக்க முடியும். இதில் நடு வரிசையில் இருக்கும் இருக்கைகள் கேப்டைன் ரக இருக்கைகள் ஆகும். அரண்மனையில் உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பதைப் போன்ற உணர்வை இது நமக்கு வழங்கும்.
இதற்கேற்ப தனி ஆர்ம் ரெஸ்ட், லெக் ரெஸ்ட், இருக்கையை தேவைக்கேற்ப சாய்த்துக் கொள்ளும் வசதி என எக்கசக்க சொகுசு வசதிகள் இந்த இருக்கைகளை மையப்படுத்தி டொயோட்டா வழங்கி இருக்கின்றது. எத்தனை கிமீ தூரம் பயணித்தாலும் அலுப்பு என்பதே இந்த காரில் ஏற்படாது.
இதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் வான்வெளியை ரசித்த வண்ணம் பயணிக்க ஏதுவாக இரு சன்ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிவி, 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வெல்ஃபையரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமா பாதுகாப்பு வசதிகளையும் தாராள மனப்பாண்மையுடன் டொயோட்டா இந்த காரில் வழங்கி இருக்கின்றது.
முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் என அனைத்தையும் சேர்த்து 7 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், மோதல் தடுப்பு தொழில்நுட்பம், ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் வெல்ஃபயரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் மைலேஜ் பாதிக்கப்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஹைபிரிட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் சேர்த்து 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் ஹைபிரிட் சிஸ்டம் தனித்துவமாக 141 பிஎச்பி பவரையும், 67 பிஎச்பி பவரையும் வெளியேற்றும். இந்த காரின் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றுக்கு 16.35 கிமீ வரை மைலேஜை தருகின்றது.
இத்தகைய சூப்பரான காருக்கே பல லட்சங்களைச் செலவு செய்து சிரஞ்சீவி ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி இருக்கின்றார். அவரிடத்தில் ஏற்கனவே பல சொகுசு கார்கள் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் என எக்கசக்க விலை உயர்ந்த கார்கள் அவரிடத்தில் உள்ளன. இந்த நிலையிலேயே அவர் புதிதாக டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு எம்பிவி ரக காரை வாங்கி, தன்னுடைய ரசிகர்களுக்கு ஷாக் வைத்தியம் செய்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
திரை நட்சத்திரங்கள் சொகுசு வாகனங்கள் மீது தீராத தாகம் கொண்டவர்களாக காட்சியளிக்கின்றனர். இதன் காரணமாகவே ஏற்கனவே அதிக விலைக் கொண்ட ஆடம்பர கார்கள் வீட்டில் இருக்கும்போதே, இன்னும் சில நிறுவனங்களின் அரிய வகை சொகுசு கார்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், சிரஞ்சீவியும் வாகனங்கள்மீது தீராத காதல் கொண்டவராக காட்சியளிக்கின்றார்.


Click it and Unblock the Notifications









