1 ரூபாய், 2 ரூபாய் இல்ல ஜூலை மாசத்துக்குள்ள ரூ17500ஐ சேமிக்கனும்னா இந்த காரை இப்பவே புக் பண்ணுங்க!

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காருக்கான விலையை ரூ17500 வரை உயர்த்தியுள்ளது. இது இந்தாண்டில் நடந்த 3வது விலை உயர்வாகும். அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதத்திலேயே இந்த காரின் விலை ரூ62500 வரை உயர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் கால்தடம் பதித்துச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு மார்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. ஏகப்பட்ட மக்கள் இந்நிறுவனத்தின் கார்களை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் கார்களுக்கு விமர்சகர்களும் நல்ல விதமான விமர்சனத்தையே முன்வைத்து வருகின்றனர்.

Citroen c3 price hike

இந்நிறுவனம் வெளியிட்ட சி3 என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் மார்கெட்டில் நல்ல விற்பனையில் இருக்கிறது. இந்த கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட போது போட்டியாளர்களே வியக்கும் விதமான குறைவான விலையில் இந்த கார் அறிமுகமானது. ஆனால் இந்த காரின் விலை தொடர்ந்து குறைவான விலையில் இருக்கவில்லை.

சிட்ரோன் சி3 கார் அறிமுகப்படுத்தப்படும் போது ரூ5.70 லட்சம் முதல் ரூ8.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு அடிப்படை வேரியன்ட் விலை ரூ 5.98 லட்சம் என்ற விலையில் உயர்ந்தது. அடுத்தது மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ6.16 லட்சமாக அடிப்படை வேரியன்ட் விலை உயர்ந்தது.

Citroen c3 price hike

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ17500 வரை விலை உயர்த்தப்பட்டதால் தற்போது அடிப்படை வேரியன்ட் விலை ரூ6.33 லட்சமாக இருக்கிறது. இந்த விலை உயர்வு வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்னர் வாங்கினால் தற்போது விற்பனையாகும் அதே ரூ6.16 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகும்.

இந்த கார் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. லைவ், ஃபீல் மற்றும் ஷைன் என்ற 3 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. முதல் இன்ஜின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 81 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

Citroen c3 price hike

இரண்டாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 109 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இரண்டு இன்ஜினும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் பிஎஸ்6 ஸ்டேஜ் 2 கட்டுப்பாட்டின் கீழ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் சி3 காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த காருக்கான விலையை அடிக்கடி உயர்த்துவது இந்த காரின் மீதான நன்மதிப்பை கெடுத்துவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் விலை அடிக்கடி ஏற்றாமல் அவ்வப்போது கணிசமாக ஏற்றினால் இந்த காரை வாங்கும் மன நிலையில் இருப்பவர்கள் பெரிய அளவில் மன மாற்றம் அடையாமல் இருப்பார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 12:40 [IST]
English summary
Citroen announces price hike for c3 hatchback upto 17500 rupees
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X