டாடா டியாகோ இவிக்கு பரம எதிரியா மாற இருக்கும் சிட்ரோன் இ-சி3 பற்றிய ரகசியங்களை உடைத்த நிறுவனத்தின் ஊழியர்...
சிட்ரோன் நிறுவனம் அதன் முதல் மின்சார காரை இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரின் வருகையை அனைவரும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில், நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் சிட்ரோன் எலெக்ட்ரிக் கார் பற்றிய சில ஆச்சரியமளிக்கும் தகவல்களை வெளியிட்டார்.
அண்மையில் நிறுவனத்தின் பிராண்ட் ஹெட்-ஆன சௌரப் வத்சா உடன் நேர்காணல் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எலெக்ட்ரிக் கார் பற்றிய சில பிரத்யேக தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இதுகுறித்த விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். சிட்ரோன் இ-சி3 இந்த பெயரிலேயே நிறுவனத்தின் முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

எதிர்பார்ப்பு அதிகம்
இது நிறுவனத்தின் மலிவு விலை ஐஇசி (எரிபொருளில் இயங்கும்) வாகனமான சி3-ஐ தழுவி உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதனை சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணத்தினாலேயே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டாடாவோட மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கு போட்டி
மேலும், இந்த வாகனம் டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-க்கு போட்டி என கூறப்படுகின்றது. இந்த காரணத்திற்காகவும் சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரின் வருகையை பலர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே காரின் உருவாக்கத்திற்கு பின்னால் கடைபிடிக்கப்பட்ட சில யுக்திகள், அண்மையில் நிறுவனத்தின் பிராண்ட் ஹெட்-ஆன சௌரப் வத்சா உடன் செய்யப்பட்ட நேர்காணலின் வாயிலாக தெரிய வந்தது.

அந்த தகவல்கள்...
நிறுவனம் சி3 வாகன கட்டமைப்பிற்காக சி-க்யூப்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றது. "இந்த தளத்தை உருவாக்குவதற்கு முன்னதாகவே, அதனை ஐசிஇ (உள்ளெரிப்பு மோட்டார் வாகனம்) மற்றும் பிஇவி (எலெக்ட்ரிக் வாகனம்) ஆகிய இரு வாகனங்களின் உருவாக்கத்தையும் மனதில் வைத்தே உருவாக்கியதாக" சௌரப் வத்சா கூறினார். இதனால்தான் வழக்கமான சி 3-இன் வீல்பேஸ்கூட சற்று நீளமாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
அளவு பெருசா இருக்கும்
அடிதளத்தில் நிறைய பேட்டரிகளை நிலை நிறுத்தவே வீல் பெரியதாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. சி3 இன் வீல்பேஸ் 2,540 மிமீ ஆகும். இது வழக்கமான சப் 4.0 மீட்டர் கார்களைக் காட்டிலும் சற்று பெரிய இட வசதி ஆகும். மேலும், "நிறுவனம் சி3 காரை தயாரித்து வெளியிட்ட அடுத்த ஆறு மாதங்களிலேயே எலெக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் களமிறங்கியது" என்கிற ஆச்சரியமான தகவலையும் சௌரப் வத்சா தெரிவித்தார்.
முன்கூட்டியே சற்று அதிகமான வீல் பேஸைக் கொண்ட வாகனமாக சி3-யை வடிவமைத்திருந்த காரணத்தினாலேயே இந்த அளவு வேகத்தில் அவர்களால் இ-சி3 இலக்கை எட்ட முடிந்திருக்கின்றது. இ-சி3 இன் பூட் ஸ்பேஸ் சற்று பெரியதாக இருக்கும். பிற எலெக்ட்ரிக் கார்களைப் போல் இல்லாமல், இதன் பூட் பக்கத்தில் பெரிய முழு அளவிலான ஸ்பேர் வீலை வைத்துக் கொள்ள முடியும். அதேவேளையில் இட பற்றாக்குறை பிரச்னை என்பதே இருக்காது.
சொல்றதவிட கொஞ்சம் கம்மியாதான் போகும்
இதன் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அளவு பெரிய பேட்டரி பேக்கே சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பயன்பாட்டிற்கு வரும்போது, குறிப்பாக, நகர்புற சாலைகளில் வைத்து பயன்படுத்தும்போது இந்த கார் 240 கிமீ முதல் 260 கிமீ வரையில் மட்டுமே ரேஞ்ஜ் தரும்.

அலுவலகம் செல்ல சற்று அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு சென்று வர இந்த ரேஞ்ஜ் போதுமானதாக இருக்கும் சௌரப் வத்சா கூறியுள்ளார். இத்தகைய பயன்பாட்டை மனதில் வைத்தே இ-சி3 எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இ-சி3 எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டாளர்கள் தங்களின் வாகனத்தை சார்ஜ் செய்ய டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை மட்டுமே பயன்படுத்தினால் பேட்டரியின் ஆயுட்காலத்திலும், ரேஞ்ஜ் திறனிலும் எந்த பிரச்னையும் வராது என தெரிவித்தார்.
வீட்டுல வச்சுகூட சார்ஜ் பண்ணிக்கலாம்
அதேவேளையில், இந்த காரை வீட்டு சார்ஜிங் பாயிண்டான 15A சாக்கெட்டைப் பயன்படுத்திக் கொண்டும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரங்கள் எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்ய தேவைப்படும். அதுவே, டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தும்போது வெறும் 57 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜாகிவிடும்.
மணிக்கு அதிகபட்சமாக 107 கிமீ பயணிக்கக் கூடிய மின் மோட்டாரையே சிட்ரோன் இ-சி3-யில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 57 எச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுவே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டாடா டியாகோ இவிக்கு போட்டியாக இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த மின்சார கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. டியாகோ இவி-யின் ஆரம்ப விலை ரூ. 8.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









