இவ்ளோ கம்மியான விலையில் 7 சீட்டர் காரா! காலண்டர்ல தேதியை குறிச்சு வெய்ங்க! வெப்சைட்டே க்ராஷ் ஆக போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை போல் நெருக்கடியாக இல்லாமலும், ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களை போல் மிகவும் விலை உயர்ந்தவையாக இல்லாமல் இருப்பதும்தான் இதற்கு காரணம்.
தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) உள்ளிட்ட கார்கள் இந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

இதுதவிர ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களும் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. போதாக்குறைக்கு ஹோண்டா நிறுவனம் வேறு தற்போது எலவேட் (Honda Elevate) என்ற புத்தம் புதிய காரை இந்த செக்மெண்ட்டில் களமிறக்கியுள்ளது.
இதை தொடர்ந்து வேறு ஒரு நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை களமிறக்கவுள்ளது. சிட்ரோன் (Citroen) நிறுவனத்தை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். சிட்ரோன் நிறுவனம் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) என்ற புதிய காரை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் கார், வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் செப்டம்பர் 15ம் தேதியில் (September 15) இருந்து தொடங்கப்படவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படவுள்ளது. அது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 108 பிஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் கார் கிடைக்கும்.
ஆனால் பின் நாட்களில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது, சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலையில் வந்தால், சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் கார், மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








