இந்த காரை நீங்க பார்த்தீங்களா? இந்த காருக்காக ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணீட்டு இருக்காங்க!

சிட்ரோன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் காம்பேக்ட் எஸ்யூவி சென்னை-பெங்களூர் ஹைவேயில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ள நிலையில் இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் புதிதாகக் கால் தடம் பதித்து மிகப் பெரிய விற்பனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கார்கள் எல்லாம் மார்க்கெட்டில் மிகப்பெரிய நல்ல பெயர்களைப் பெற்றுள்ளன. விமர்சகர்களும் இந்நிறுவனத்தின் கார்களுக்கு தரமான விமர்சனங்களை வழங்கியுள்ளனர்.

citroen c3 aircross spied

இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காரின் அப்டேட்டட் வெர்ஷன் ஆக சி3 ஏர்கிராஸ் என்ற காரை 3 வரிசை சீட் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி காராக சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தான் தற்போது இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.

இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் டெஸ்ட் செய்யப்படும்போது அந்த பகுதி வழியாகச் சென்று நமது வாசகர் ஒருவர் இதை புகைப்படம் எடுத்து நம்மிடம் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தைத் தான் தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

citroen c3 aircross spied

இந்த சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய லேஅவுடகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை பொருத்தவரை இரண்டு வகையான இன்ஜின்கள் உள்ளன. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன.

இதன் வடிவமைப்பைப் பொறுத்தவரை சிட்ரோன் சி3 காரில் உள்ள பெரும்பாலான டிசைன்கள் இந்த காரிலும் இருக்கிறது. இதன் முன் பகுதியில் கிரில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு குரோம் பட்டைகள் இருக்கிறது. ஆனால் இது எல்இடி டிஆர்எல்களுடன் இணைக்கப்படாமல் அதன் அருகே வரை டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காரின் ஃபாக் லைட் மற்றும் ஹாலஜன் ஹெட்லைட் ஆகியவை சி3 ஹேச் பேக்கில் உள்ள அதை லைட்டுகள் தான் இதிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்இடி மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட் லைட்டுகள் இதில் பொருத்தப்படவில்லை. முன்பக்கம் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள அம்சங்களைப் பொருத்தவரை சி3 ஹேச்பேக் காரில் உள்ள அம்சங்களை விட அதிகமான அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக 10.2 ஹரிசாண்டல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனை வயர்லெஸ்ஸில் இணைக்கும் தொழில்நுட்பத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்து மிக முக்கியமாக சிட்ரோன் சி3 காரில் இல்லாத ரூப் மவுண்டெட் ஏசி வென்ட் இந்த காரில் இருக்கலாம் என கருதப்படுகிறது.. மூன்று அட்ஜஸ்டபிள் ஃபேன்கள் கொண்ட இந்த ஏசி வென்ட்கள் பின்பக்க சீட்டில் உள்ள பயணிகளுக்காக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த கார் நம் முன்னரே சொன்னபடி இரண்டு இன்ஜின்களில் வருகிறது. இதில் 5 சீட்டர் வெர்ஷன் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும், 7 சீட்டர் வெர்ஷன் டர்போ இஞ்சின் ஆப்ஷன் மட்டும் விற்பனைக்கு வருகிறது. 7 சீட்டருக்காக மூன்றாவது வரிசை சீட்டு இருக்கிறது. ஆனால் இந்த மூன்றாவது வரிசை சீட்டில் பெரிய அளவில் கால்களை வைக்க இட வசதி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் வெறும் 4.2 மீட்டர் நீளம் தான் என்பதால் அவ்வளவு அதிகமான இட வசதி மூன்றாவது வரிசை சீட்டில் இருக்காது எனக் கருதப்படுகிறது. அதே நேரம் மூன்றாவது வரிசை சீட் தேவை இல்லை என்றால் அதை மடித்து அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட காராகவும் இதை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி அஸ்டர், ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர், மாருதி எர்டிகா ஆகிய கார்களுடன் போட்டிப்போட்டு களம் இறங்கும். இந்த கார் ரூ9 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் சி3 காருக்காக எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் இந்த ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர்.இந்த கார் தீவிரமான டெஸ்டிங்கில் இருப்பதால் இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 19:26 [IST]
English summary
Citroen c3 aircross spied expected price features and other details
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+