C3 Aircross Launch தேதி ஃபைனல் ஆகிடுச்சு! எல்லோரும் இந்த காருக்காக தான் மரண வெயிட்டிங்!
சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரை வரும் 27ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவிற்குள் வந்த பிறகு தரமான கார்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் பிரிமியம் செக்மெண்டில் சிறந்த கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் என்ற காரை இந்தியாவிலேயே வடிவமைத்து, தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. இதுமட்டுமல்ல வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த சி3 ஏர்கிராஸ் என்பது ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் குறித்த டீசரை சிட்ரோன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது இந்நிறுவனத்தின் சி3 ஹேட்ச்பேக் காரை போன்ற வடிவமைப்பில் இருக்கிறது. அதே போன்ற எல்இடி டிஆர்எல், ஸ்பிலிட் ஹெட்லைட் டிசைன் இருக்கிறது. இதன் கேபினும் சி3 ஹேட்ச்பேக் போலவே இருக்கிறது.
இதில் முக்கியமான வித்தியாசம் ஏர்கிராஸ் காரில் எக்ஸ்ட்ரா வரிசை சீட்டர் இருக்கும். அதே போல டேஷ்போர்டு அம்சங்களும் ஹேட்ச்பேக் காரிலிருந்து வேறுபடுகிறது. புதிய சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் அகலமான ஸ்கிரீன் இருக்கிறது. இது போக ஆட்டோமெட்டிக் ஏசி, சன்ரூஃப், ஸ்மார்ட் போன் இன்டகரேஷன் போன்ற அம்சங்கள் எல்லாம் இடம் பெறவுள்ளன.
இந்த காரும் சி3 ஹேட்ச்பேக் கார் தயாராகும். காமன் மாடுலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தகார் 4 மீட்டர் நீளமும் 2.62 மீட்டர் வீல் பேஸூம் கொண்டதாக இருக்கும். அதாவது தற்போது விற்பனையாகி வரும் சி3 காரை விட அதிக இட வசதியுடன் இந்த சி3 ஏர்கிராஸ் கார் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த சி3 ஏர்கிராஸ் காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 108 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் அம்சம் கொண்டது. சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே வரும் என்றும் வருங்காலத்தில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி கார் மார்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்க உள்ளது.
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொறுத்தவரை அதன் 2 டோன் கலர் ஆப்ஷன் தான் இதன் அடையாளமாகவே இருக்கிறது. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வரும் ஏப் 27ம் தேதி இந்த கார் அறிமுகுமாகும் போது வெளியிடப்படும். நமக்குக் கிடைத்த தகவலின்படி இந்த காரின் விலை குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது.
சிட்ரோன் நிறுவனத்திற்கு மார்கெட் ஷேரை பிடிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இருக்கிறது. என்னதான் நல்ல நல்ல கார்களை அந்நிறுவனம் வெளியிட்டாலும் விற்பனை பெரிய அளவில் போட்டியாளர்களுக்குச் சமமாக வரவில்லை. இதற்காகக் குறைந்த விலையில் இந்த காரை வெளியிட்டு மார்கெட் பங்கை பிடிக்க வழிசெய்யும் என எதிர்பார்க்கலாம்.
இந்த கார் இல்லாமல் சிட்ரோன் நிறுவனம் 3 கார்களை தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. சி5 ஏர்கிராஸ், சி3, இ-சி3 ஆகிய கார்களை சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சிட்ரோன் நிறுவனம் தொடர்ந்து நல்ல கார்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயரையும், இந்தியாவில் சிறப்பான விற்பனையையும் பெற விரும்புகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இந்தக்காரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் என்றால் போதுமான சர்வீஸ் நெட்வோர்க் மற்றும் ஷோரூம்கள் இருக்க வேண்டும். சிட்ரோன் அடுத்ததாக அதில் தன் கவனத்தைச் செலுத்துமா?


Click it and Unblock the Notifications








