சிங்கங்கள் கூடி நிற்கும் குகைக்குள் ஒற்றை ஆளாய் நுழைய போகும் புலி! வெற்றி யார் பக்கம்?

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஏர்கிராஸ் என்ற எஸ்யூவி காரை இந்தியா மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அதன் டீசர் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம்.

சிட்ரோன் நிறுவனம் இந்தியச் சந்தைக்கு வந்து மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டும் 3,775 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றது அதாவது கடந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 52 கார்களை விற்பனை செய்த சிட்ரோன் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 2,015 கார்களை விற்பனை செய்திருந்தது.

Citroen C3 Aircross Teaser

இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் தனது புதிய தயாரிப்பை இந்தியாவில் களம் இறக்கத் தயாராகியுள்ளது. தனது சி3 என்ற ஹேட்ச் பேக் காரை மாற்றியமைத்து சி3 ஏர்கிராஸ் என்ற பெயரில் 7 சீட்டர் காராக மாற்றியுள்ளது. இந்த கார் நாளை (ஏப்.27ம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது இந்த கார் குறித்த டீசரை தற்போது சிட்ரோன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிட்ரோனின் இந்த 7 சீட்டர் சி3 ஏர்கிராஸ் கார் எம்பிவி மற்றும் எஸ்யூவி செக்மெண்டை குறி வைத்து விற்பனைக்கு வருகிறது. இந்த கார் நேரடியாக மார்கெட்டில் உள்ள ரெனால்ட் டிரைபர் காருக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. அதே நேரத்தில் ஏர்டிகா, எக்ஸ்எல்6, கியா கேரன்ஸ், ஹூண்டாய் கிரெட்டா,கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கும் வேறு வேறு வேரியன்ட் வகையில் போட்டியைக் கொடுக்கும் காராக களம் இறங்கவுள்ளது.

Citroen C3 Aircross Teaser

சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் கார் அதன் குறைவான விலை காரணமாகவே சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதே போல சிட்ரோன் நிறுவனம் இந்த சி3 ஏர்கிராஸ் காரையும் போட்டி நிறுவனங்களின் கார்களின் விலையை விட குறைவான விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த காரை வடிவமைக்கும் போதே தனியாக இல்லாமல் பெரும்பாலும் சி3 காரின் வடிவமைப்பையே இந்த காரிலும் கொடுத்து வடிவமைத்துள்ளது.

இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை முன்பக்கம் பெரும்பாலும் சி3 காரின் லுக்கிலேயே இருக்கிறது. சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. வீல் மட்டும் 16 அல்லது 17 இன்ச் வீல் கொடுக்கப்படும். சி3 ஹேட்ச்பேக் காரில் 15 இன்ச் வீல் தான் வழங்கப்பட்டுள்ளது. சி3 ஏர்கிராஸ் காரில் வீல் சைஸ் அதிகமாவதால் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கும். இந்த காரில் முக்கிய மாற்றமாக 3வது வரிசை சீட் வழங்கப்பட்டுள்ளது.

Citroen C3 Aircross Teaser

அளவுகளில் பார்த்தாலும் இந்த 7 சீட்டர் சி3 ஏர்கிராஸ் கார் 4.2 மீட்டர் நீளம் கொண்டது. இதன் வீல் பேஸ் சி3 ஹேட்ச்பேக் காரில் உள்ள அதே வீல் பேஸ் தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2540 மிமீ நீளம் இருக்கிறது. சிட்ரோன் சி3 ஹேட்ச் பே் காிரல் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். அடுத்த ஆப்ஷனாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் சி3 ஏர்கிராஸ் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலை வேரியன்டில் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினும், அதிகமான வேரியன்டில் டர்போ இன்ஜினும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனைக்கு வருகிறது. இதில் 5 சீட்டர் காருக்கு நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும், 7 சீட்டரில் டர்போ இன்ஜின் என்ற ஒரே ஆப்ஷன் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 சீட்டர் வேரியன்ட்களில் வருங்காலங்களில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் காரின் அம்சங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் சி3 காரில் உள்ள அம்சங்கள் தான் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, கீலெஸ் என்ட்ரி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை டூயல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இன்ஜின் இம்மொபிலைசர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் காலடித் தடத்தைப் பதித்த பின்பு சமீப காலமாக மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. தொடர்ந்து தரமான தயாரிப்புகளைக் களம் இறக்கிவருகிறது. இந்நிறுவனம் விரைவில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதை நிகழ்த்த இந்த சி3 ஏர்கிராஸ் கார் துணை நிற்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 26, 2023, 21:15 [IST]
English summary
Citroen c3 aircross teased ahead of launch
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X