குடும்பத்தோட ஜாலியா போக இந்த கார் பெஸ்ட்! ஒவ்வொன்னையும் பாத்து பாத்து பண்ணிருக்காங்க!

சிட்ரோன் நிறுவனம் இன்று தனது சி3 ஏர்கிராஸ் என்ற எஸ்யூவி காரை அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சிட்ரோன். இந்நிறுவனம் இந்தியாவிற்குள் காலடி தடத்தை பதித்து மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. தனது முதல் காரான சி5 ஏர்கிராஸ் காரிலேயே பலரை திரும்பி பார்க்க வைத்தது. அதன் பிறகு சி3 ஹேட்ச்பேக் மற்றும் இசி3 என்ற எலெக்ட்ரிக் கார் என வரிசையாக தங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Citroen C3 Aircross

அந்த வரிசையில் இன்று தனது சி3 ஏர்கிராஸ் என்ற எஸ்யூவி ரக காரை இந்நிறுவனம் பொதுபார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் தனது சி3 ஹேட்ச்பேக் காரின் எஸ்யூவி வெர்ஷனவாக உருவாக்கியுள்ளது. இதன் ஸ்டைலிங் முதல் இன்ஜின் வரை ஏராளமான அம்சங்கள் சி3 காரிலிருந்து எடுக்கப்பட்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டிசைன் சி3 மட்டுமல்ல சி5 ஏர்கிராஸ் காரிலிருந்தும் சில டிசைன் இன்ஸ்பயர் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் ஹெட்லைட்டை பொருத்தவரை சிட்ரோன் நிறுவனம் எல்இடி இல்லாமல் ஹலஜன் ஹெட்லைட்களை வழங்கியுள்ளது. தயாரிப்பு செலவை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

Citroen C3 Aircross

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4.2 மீட்டர் நீளமும், 2671 மிமீ வீல்பேஸூம் கொண்டது. மேலும் இந்த காரில் 200 மிமி கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இந்த காரின் அளவுகளை பார்க்கும் போது கிரெட்டா காருக்கு போட்டியாக இந்த கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கதவு ஹேண்டில்களை பார்க்கும் போது பழைய லிஃப்ட் டைப் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய கார்களில் புல் டைப் ஹேண்டில் தான் பிரபலமாக இருக்கிறது.

இந்த காரில் 17 இன்ச் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது X வடிவ டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் பெரிய டெயில்கேட் மற்றும் பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 7 சீட்டர் மற்றும் 5 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளது. 7 சீட்டர் வெர்ஷனில் 3வது வரிசை சீட்டர் வழங்கப்படுகிறது. ஆனால் பூட் ஸ்பேஸ் குறைந்துவிடும். 5 சீட்டர் ஆப்ஷனில் 444 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. 7 சீட்டரில் 3 வது வரிசை பின்பக்க சீட்டை அகற்றிவிட்டால் 511 லிட்டர் பூஸ் ஸ்பேஸ் கிடைக்கும். நடு வரிசை சீட் 70:30யாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷன் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் 2வது மற்றும் 3வது வரிசைக்கான ரூஃப் மவுண்டட் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்டிற்காக 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக டிரைவருக்கு மல்டி கலர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மல்டிபிள் டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 எச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே இன்ஜின் சி3 ஹேட்ச் பேக் காரிலும் இருக்கிறது. கியர் பாக்ஸை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரை இந்நிறுவனம் இன்று பொதுப்பார்வைக்காக மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளது. இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிமுகத்திற்கு பின்னர் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் நேரடியாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுக்கும். எர்டிகா போன்ற எம்பிவி கார்களுக்கும் போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மார்கெட்டிற்கு வரும் போது விற்பனையில் மிகப்பெரிய புரட்சியே செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்தியர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களுடனும், இந்திய மக்களை கவரும் விதத்திலும் இந்த கார் இருக்கிறது. இதன் விலையும் போட்டி நிறுவனங்களை விட குறைவாக இருந்தால் இதன் வெற்றி நிச்சியம் தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 27, 2023, 17:33 [IST]
English summary
Citroen c3 aircross unveiled design engine features seating layout details
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+